தைப்பூசம்: ஊர்வலத்திற்கும் காவடிக்கும் அனுமதி இல்லை

இரண்­டா­வது ஆண்­டாக தைப்­பூ­சத் திரு­வி­ழா­வின்­போது பக்­தர்­கள் நடை ஊர்­வ­லம் செல்­ல­வும் காவடி எடுக்­க­வும் அனுமதி இல்லை.

அடுத்த மாதம் 18ஆம் தேதி தைப்­பூ­சத் திரு­விழா கொண்­டா­டப்­பட­வுள்ள நிலை­யில், முழு­மை­யாக கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் மட்­டுமே அந்த வி­ழா­வில் பங்­கேற்க அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

பக்­தர்­கள் பால்­குட வேண்­டு­தலை நிறை­வேற்­ற­லாம். அது­வும், கோவி­லில் முன்­னரே தயார்­செய்து வைக்­கப்­பட்­டுள்ள பால்­கு­டங்­களை மட்­டுமே அவர்­கள் பயன்­ப­டுத்த வேண்­டும்.

இவ்­வாண்­டைப் போலவே, சிராங்­கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் கோவி­லில் இருந்து தேங் ரோடு அருள்­மிகு தெண்­டா­யு­த­பாணி கோவில் வரைக்­கும் பக்­தர்­கள் நடை ஊர்­வ­லம் செல்ல அனு­மதி­யில்லை.

கோவி­லுக்­குள்­ளும் அத­னைச் சுற்­றி­யுமே தைப்­பூ­சம் சார்ந்த நட­வடிக்­கை­கள் இடம்­பெ­றும்.

இவ்­விரு கோவில்­களும் இந்து அறக்­கட்­டளை வாரி­ய­மும் இணைந்து வெளி­யிட்ட அறிக்­கை­யில் இவ்­வி­வ­ரங்­கள் இடம்­பெற்­று உள்­ளன.

அருள்­மிகு தெண்­டா­யு­த­பாணி கோவி­லுக்­குச் சென்று, இறை­வனைத் தரி­சிக்க விரும்­பும் பக்தர்­கள் அதற்­கான நேரத்தை இணை­யம் வழி­யாக முன்­ப­திவு செய்­து­கொள்ள வேண்­டும். கோவி­லுக்கு வெளியே பக்­தர்­கள் கூடவும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

பக்­தர்­கள் தங்­க­ளுக்­கென ஒதுக்­கப்­பட்ட வழி­யைப் பயன்­ப­டுத்த வேண்­டும். வேண்­டு­த­லை­யும் இறை தரி­ச­னத்­தை­யும் முடித்தபின் அவர்­கள் கோவிலை­விட்டு வெளி­யே­றி­விட வேண்­டும்.

எல்லா நேரங்­க­ளி­லும் அவர்­கள் பாது­காப்பு இடை­வெ­ளி­யைப் பின்­பற்ற வேண்­டும்; முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்க வேண்­டும்.

உல­கம் புதிய கொரோனா அலை­களை எதிர்­கொண்­டு­வ­ரும் வேளை­யில் இந்­தக் கட்­டுப்­பா­டு­கள் தேவை என்று விழா ஏற்­பாட்­டா­ளர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

கோவி­லுக்கு வரும் பக்­தர்­கள் அனை­வரும் டிரேஸ்­டு­கெ­தர் கருவி அல்­லது செயலி­யைப் பயன்­ப­டுத்த வேண்­டும்.

கூடு­தல் விவ­ரங்­கள் தைப்­பூ­சத் திரு­விழா நெருங்­கும் வேளை­யில் வெளி­யி­டப்­படும்.

மலேசியா: ரத ஊர்வலம் இல்லை

இத­னி­டையே, புது­வகை 'ஓமிக்­ரான்' கொவிட்-19 கிருமி அச்­சு­றுத்­தலால் மலேசியாவில் தைப்­பூ­சத்­தின்­போது வெள்ளி ரத ஊர்­வலத்­திற்­கும் சிங்கே அணி­வ­குப்­பிற்­கும் அனு­மதி இல்லை என்று அந்நாட்டின் ஒருமைப்பாட்டு அமைச்­சர் ஹலிமா முகம்­மது சாதிக் தெரி­வித்­துள்­ளார். தைப்­பூ­சம் தொடர்­பில் நிலை­யான வழி­காட்டு நடை­மு­றை­களைத் தமது அமைச்சு தயார்­செய்து வரு­வதாக அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!