இந்திய ராணுவத் தலைமை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து

இந்திய ராணுவத்தின் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியது.

உயிரிழந்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய மரபணுச் சோதனைகள் நடத்தப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ தெரிவித்தது.

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் அருகே உள்ள குன்னூரில் விபத்து இன்று பிற்பகல் 12.20 மணி அளவில் நிகழ்ந்தது.

திரு ராவத் சூலூர் ஆகாயப்படைத் தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் கல்லூரியில் உரை நிகழ்த்தச் சென்றுகொண்டிருந்தார்.

அவருடன் அவரது மனைவி, ராணுவ உயர் அதிகாரிகள், ஹெலிகாப்டர் விமானிகள் உட்பட 14 பேர் ஹெலிகாப்டரில் இருந்தனர்.

குன்னூருக்கு ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காட்டேரி எனும் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.

கடும் மூடுபனி படர்ந்திருந்ததால் தெளிவாகத் தெரியாமல் போயிருக்கலாம் என்றும் அதுவே விபத்து நேரக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் இல்லத்துக்கு இன்று மாலையில் இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றார்.

விபத்து பற்றி திரு ராவத்தின் குடும்பத்தாரிடம் அவர் மேல்விவரம் அளித்தார்.

தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் குன்னூர் விரைந்திருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!