இளையர்கள் வாழ்நாளில் சிகரெட்டுகள் புகைக்கவே கூடாது; நியூசிலாந்தின் திட்டம்

நியூசிலாந்து, இன்றைய இளையர்கள் அவர்கள் வாழ்நாளில் சிகரெட்டுகளை வாங்குவதற்குத் தடை விதிக்க திட்டமிடுகிறது.

இளையர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தைத் தொடங்கவே கூடாது என்னும் நோக்கம் கொண்ட திட்டங்களை நியூசிலாந்து அரசாங்கம் இன்று (டிசம்பர் 9) வெளியிட்டது.

அதன்படி, வரும் 2027ஆம் ஆண்டிலில் 14 அல்லது அதற்கும் குறைவான வயதுள்ளவர்கள் தங்கள் வாழ்நாளில் சிகரெட்டுகளை வாங்க தடை செய்யப்படும்.

மேலும் அந்த வயதினருக்கு சிகரெட்டுகளை விற்பதும் குற்றமாகக் கருதப்படும்.

அத்துடன், புகையிலைப் பொருட்களை விற்பதற்கு குறைவான கடைகள் அனுமதிக்கப்படும்.

புகையிலைப் பொருட்களில் உள்ள நிக்கோட்டின் அளவையும் குறைக்க நியூசிலாந்து திட்டமிடுகிறது.

நியூசிலாந்து அரசாங்கம் இந்தத் திட்டங்களைக் கட்டம் கட்டமாக நடப்புக்குக் கொண்டுவர திட்டமிடுகிறது.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் இவற்றைச் சட்டமாகக் கொண்டுவரப் போவதாக அது கூறியது.

புகைபிடித்தலுக்கு எதிராக உலகில் திட்டமிடப்பட்டுள்ள கடுமையான சட்டங்களில் இவை அடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!