மலேசியா வெள்ளம்: 21,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

மலேசியாவில் சனிக்கிழமை ((டிசம்பர் 18) ஏற்பட்ட வெள்ளத்தை அடுத்து, 21,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு காப்பிடங்களுக்கு வெளியேற்றப் பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 19) நண்பகல் நிலவரப்படி மலேசியாவின் ஏழு மாநிலங்களை வெள்ளம் பாதித்துள்ளது.

ஆகக் கடைசியாக பேராக் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டது.

கிளாந்தான், தெரங்கானு, பாஹாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய இடங்களில் வெள்ளம் மோசம் அடைந்துள்ளதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மலேசியாவில் கடந்த 70 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான வெள்ளம் இதுவாகும்.

மலேசிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப், வீடுகளையும் உள்கட்டமைப்பையும் மறுசீரமைப்பதற்காக அரசாங்கம் முதல் கட்டமாக 100 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கும் என்று கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் உதவித்தொகையாக 1,000 ரிங்கிட் வழங்கப்படவுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களைத் தற்காலிக முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகளில் காவல்துறை, இராணுவம், தீயணைப்புத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 66,000 பேர் ஈடுபட்டுள்ளனர்.

சிலாங்கூரில் மட்டும் 100க்கும் அதிகமான தற்காலிக முகாம்களில் சுமார் 15,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு பருவமழையில் வெள்ளம் ஏற்படுவது அரிது.

அதனால் அங்கு திடீரென்று வெள்ளம் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று திரு இஸ்மாயில் கூறினார்.

இன்றும் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது.

இவ்வேளையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்ல முடியாதிருக்கும் அரசாங்க ஊழியர்களுக்கு அவசர விடுப்பு அளிக்க திரு இஸ்மாயில் இணங்கியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!