1,000 பேர் வரை கலந்துகொள்ளும் வேலையிட நிகழ்ச்சிகளுக்கு சிங்கப்பூர் அனுமதி

வரும் திங்கட்கிழமை (ஜனவரி 3) முதல், இங்குள்ள நிறுவனங்கள் அதிகபட்சம் 1,000 பேர் வரை கலந்துகொள்ளும் வேலை தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளன.

தற்போது 50 பேருக்குக் குறைவானவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை நடத்த அவற்றுக்கு அனுமதி உண்டு.

ஆனால் 50 பேருக்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்ளும் வேலையிட நிகழ்ச்சிகளில் உணவும் பானமும் அருந்த அனுமதிக்கப்படாது.

மாறாக, 50 பேருக்குக் குறைவானவர்கள் கலந்துகொள்ளும் வேலையிட நிகழ்ச்சிகளில் உணவும் பானமும் அனுமதிக்கப்படும்.

அத்துடன், ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சிகளில் தனித்தனிப் பிரிவுகளை அமைக்கவேண்டும்.

ஒவ்வொரு பிரிவிலும் அதிகபட்சம் 100 பேர் மட்டுமே இருக்க முடியும்.

ஒவ்வொரு பிரிவுக்கும் இடையே 2 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

வர்த்தக, தொழில் அமைச்சும் மனிதவள அமைச்சும் சனிக்கிழமை (ஜனவரி 1) அன்று வேலையிட நிகழ்ச்சிகளுக்கான விதிமுறைத் தளர்வுகளை அறிவித்தன.

பெரிய கூட்டங்கள், விருது நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்ய நிறுவனங்களுக்கு கூடுதல் நீக்குப்போக்கை இந்தத் தளர்வு வழங்கும் என இரண்டு அமைச்சுகளும் கூறின.

நிறுவனங்கள் இணையம் வழி முன்கூட்டியே இந்நிகழ்ச்சிகள் பற்றி அரசாங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

முகக்கவசம் அணிவது, ஒரு மீட்டர் இடைவெளி போன்ற விதிமுறைகள் நடப்பில் இருக்க வேண்டும்.

தடுப்பூசி தொடர்பான விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!