14,500 வீடுகள் ஒப்படைப்பு

கொவிட்-19 கொள்­ளை­நோய் ஏற்

­ப­டுத்­திய சிர­மங்­க­ளுக்கு இடை­

யி­லும் 2021ஆம் ஆண்­டில் கிட்டத்தட்ட 14,500 வீட­மைப்­புக் கழக வீடு­கள் (வீவக) கட்டி முடிக்கப் பட்டு அவற்றை வாங்கியோரிடம் ஒப்படைக்கப்பட்டன. இது 2020ஆம் ஆண்­டில் விநி­யோ­கிக்­கப்­பட்ட வீடு­க­ளின் எண்­ணிக்­கை­யை­விட 50 விழுக்­காட்­டுக்­கும் மேல். அந்த ஆண்­டில் 9,400 வீடு­கள் அவற்­றின் உரி­மை­யா­ளர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டதாக வீவக தெரிவித்துள்ளது.

குறிப்­பாக, கொள்­ளை­நோய்க்கு முன்­னர் 2019ஆம் ஆண்­டில் 13,500 வீடு­கள் விநி­யோ­கிக்­கப்­பட்­ட­தைக் காட்­டி­லும் கடந்த ஆண்­டில் சுமார் ஆயி­ரம் வீடு­கள் அதி­க­மாக விநி­யோ­கிக்­கப்­பட்­டன. மேலும், கடந்த ஆண்­டில் நிறை­வேற்­றப்­பட்ட 17 தேவைக்­கேற்ப கட்­டித் தரப்­படும் (பிடிஓ) வீட்­டுத் திட்­டங்­க­ளுக்­கான காத்­தி­ருப்­புக் காலம் சரா­ச­ரி­யாக 4.3 ஆண்­டு­கள். இவற்­றில் ஏழு மேம்­பாட்­டுத் திட்­டங்­கள் ஆறு மாதம் அல்­லது அதற்­குக் குறை­வான தாம­தத்தை எதிர்­நோக்­கின. ஒட்­டு­மொத்­த­மாக, ஆக அதிக தாமத காலம் 11 மாதங்­கள்.

பொங்­கோ­லில் வாட்­டர்­

ஃபி­ரண்ட் I@ நார்த்­ஷோர் பிடிஓ வீட்­டில் கடந்த ஆண்டு ஜூலை­யில் குடியே­றிய திரு­வாட்டி ஜேயில் லாய், 30, என்­ப­வர் தமக்­கான வீட்­டின் சாவி­யைப் பெற ஆறு மாதங்­கள் தாம­த­மா­கும் என்று தமக்­குத் தெரி­விக்­கப்­பட்­ட­தா­கச் சொன்­னார்.

அத­னால் தமது கண­வ­ரு­டன் செங்­காங்­கில் உள்ள கொண்­டோ­மி­னிய வீட்­டில் வசிப்­ப­தற்­கான வாடகை ஒப்­பந்­தம் நீட்­டிக்­கப்­பட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார். தற்­போது அவர் குடி­யேறி இருப்­பது $398,000 மதிப்­புள்ள ஐந்­தறை வீடு.

அதி­க­மான வீடு­கள் விநி­யோ­கிக்­கப்­பட்­ட­தன் பின்­ன­ணியை வீவக தலைமை நிர்­வாகி டான் மெங் டுயி நேற்று விளக்­கி­னார்.

"கொள்ளைநோயால் ஏற்­பட்ட இடை­யூ­று­கள் மற்­றும் சிர­மங்­

க­ளுக்கு இடை­யி­லும் 2021ஆம் ஆண்­டில் விநி­யோ­கி­க்கப்­படவேண்­ டிய புதிய வீடு­க­ளின் எண்­ணிக்­கையை உயர்த்த தொழிற்­து­றை­யி­ன­ரு­ட­னும் அர­சாங்க அமைப்­புப் பங்­கா­ளி­க­ளு­ட­னும் அணுக்­க­மா­கப் பணி­யாற்­றி­னோம். கொள்­ளை­நோய்க்கு முந்­திய நில­வ­ரத்தை மீண்­டும் கொண்டு வரு­வதை நோக்­க­மா­கக்கொண்டு செயல்­பட்­டோம்.

"வீடு­க­ளுக்­கான தேவை அதி

­க­ரிப்­ப­தை­யும் சமா­ளிக்கவேண்­டிய நிைலயில் 2020ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் கடந்த ஆண்டு அதிக வீடு­க­ளைக் கட்­டும் திட்டங்களைத் தொடங்­கி­னோம்," என்­றார்.

கடந்த ஆண்­டில் 17,109 பிடிஓ வீடு­க­ளுக்­கான திட்­டங்­கள் தொடங்­ கப்­பட்­டன. ஏற்­கெ­னவே இருப்­பில் இருந்த 5,322 வீடு­க­ளை­யும் சேர்த்து கடந்த ஆண்­டில் 22,431 வீடு­கள் விற்­ப­னைக்கு விடப்­பட்­டன.

சில குறிப்­பிட்ட பகு­தி­களில் புதிய திட்­டங்­கள் அறி­விக்­கப்­பட்­டன. குறிப்­பாக, உலு பாண்­டா­னில் முதல் பிடிஓ வீடு­கள் இவ்­வாண்­டின் இரண்­டாம் பாதி­யில் தொடங்­கப்­பட உள்­ளன.

கடந்த ஆண்­டில் அதி­க­மான வீட­மைப்­புத் தெரி­வு­க­ளை­யும் வீவக வெளி­யிட்­டது. அதன் அடிப்­ப­டை­யில், சமூ­கப் பரா­ம­ரிப்பு அடுக்­கு­வீ­டு­க­ளுக்­கான திட்­டம் புக்­கிட் பாத்­தோக்­கி­லும் முதன்மை வட்­டார வீட­மைப்­புத் திட்­டம் ரோச்­சோ­ரி­லும் தொடங்­கப்­பட்­டன.

வீவக: கொள்ளைநோய் சிரமத்திற்கு இடையே 2021ல் அதிக பிடிஓ வீடுகள் விநியோகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!