இந்த ஆண்டில் கொரோனா ஒழியும்

உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை

நாடு­கள் ஒன்­றி­ணைந்து போராடி வரு­வ­தால் 2022ஆம் ஆண்­டில் கொரோனா பெருந்­தொற்று ஒழிக்­கப்­பட்­டு­வி­டும் என உலக சுகா­தார நிறு­வ­னம் நம்­பிக்கை தெரி­வித்துள்­ளது. ஈராண்­டு­க­ளுக்கு முன்­னர் சீனா­வில் கொரோனா கிருமி கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தற்­குப் பின்­னர் இந்­நி­று­வ­னம் முதல்­

மு­றை­யாக இவ்­வாறு கூறி­யுள்­ளது. உலக அள­வில் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 287 மில்­லி­ய­னைக் கடந்த நிலை­யில் மாண்­டோர் எண்­ணிக்கை 5.5 மில்­லி­ய­னுக்கு மேல் சென்­று­விட்­டது.

புத்­தாண்­டுக் கொண்­டாட்­டங்­கள் பொலி­வி­ழந்த நிலை­யில், தொற்று குறித்து கருத்து தெரி­வித்த உலக சுகா­தார நிறு­வ­னத்­தலைவர் டாக்­டர் டெட்­ரோஸ் ஆத­னம், கொவிட்-19 தொற்­றுக்கு சிகிச்சை அளிக்க தற்­போது அதிக வச­தி­கள் உள்­ள­தா­கக் கூறி­னார்.

அதே­நே­ரம் தடுப்­பூசி விநி­யோ­கத்­தில் காட்­டப்­படும் பார­பட்­சம் கிரு­மிப்பர­வல் வேகத்­திற்கு வழி

­வ­குத்­து­வி­டும் என்று அவர் எச்­ச­ரித்­தார்.

"இந்த ஏற்­றத்­தாழ்வு நீடிக்­கு­மா­னால் நாம் தடுக்க முடி­யாத, கணிக்க முடி­யாத வழி­களில் கிருமி பர­வும் அபா­யம் உள்­ளது," என்­றார் டாக்­டர் டெட்­ரோஸ்.

ஆபத்து குறைந்த ஓமிக்ரான்

இதற்­கி­டையே, புதிய வகை ஓமிக்­ரான் கிரு­மி­யால் அதிக ஆபத்து இல்லை என்­பதை நிரூ­பிப்­ப­தற்­கான ஆய்­வு­கள் அமெ­ரிக்­கா­வில் நடத்­தப்­பட்டுள்­ளன. எலி­க­ளி­டம் நடத்­தப்­பட்ட சோத­னைக்­கூட ஆய்­வில், ஓமிக்­ரான் வகை கிருமி மூக்கு, தொண்டை, மூச்­சுக்­குழாய் ஆகிய பகு­தி­க­ளோடு நின்­றுவி­டு­ வ­தா­க­வும் நுரை­யீ­ர­லுக்­குச் செல்­வது அரி­தாக நிகழ்­வ­தா­க­வும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக நியூ­யார்க் டைம்ஸ் கூறி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!