3ம் கட்ட பரவலை ேநாக்கி இந்தியா: வேகமாக அதிகரிக்கும் தொற்று

இந்­தி­யா­வில் கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வல் குறைந்­து­வந்த நிலை­யில் கடந்த சில வாரங்­க­ளாக அதி­க­ரித்­து­வ­ரு­கிறது.

அக்­டோ­பர் மாதத்­துக்­குப்­பின் அன்­றா­டத் தொற்று எண்­ணிக்கை சரா­ச­ரி­யாக 20,000க்கு மேல் பதி­வாகி வரு­கிறது. திங்­கட்­கி­ழமை ஒரே நாளில் 37,379 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. ஓமிக்­ரான் தொற்­றும் அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது.

தமிழ்­நாடு, மகா­ராஷ்­டிரா, டெல்லி உள்­ளிட்ட 23 மாநி­லங்­களில் ஓமிக்­ரான் பர­வி­விட்­டது. திங்­கட்­கி­ழமை இரவு வரை 1,892 பேருக்கு ஓமிக்­ரான் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

டெல்டா, ஓமிக்­ரான என பல்­வேறு தொற்­று­க­ளால் அதிகமாகப் பாதிக்­கப்­பட்ட மாநி­லங்­களில் ஒன்­றான டெல்­லி­யில் புதி­தாக கடும் கட்­டுப்­பா­டு­கள் நடை­மு­றைக்கு வந்­துள்­ளன. இத்­து­டன், வார இறுதி நாட்­களில் ஊர­டங்கை அமல்­ப­டுத்த டெல்லி பேரி­டர் மேலாண்மை ஆணை­யம் முடி­வெ­டுத்­துள்­ளது.

டெல்­லி­யில் திங்­கட்­கி­ழமை ஒரே நாளில் 5,481 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. மாநில முதல்­வ­ரும் ஆம் ஆத்மி கட்­சி­யின் நிறு­வ­ன­ரு­மான ெகஜ்­ரி­வா­லும் தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில், கடந்த ஒரு­வா­ர­மாக நாடு முழு­வ­தும் தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­வது கொரோனா மூன்­றாம் அலை உரு­வா­வ­தற் கான அடை­யா­ளம் என கொவிட்-19 பணிக்­கு­ழு­வின் தலை­வர் டாக்­டர் என்.கே. அரோரா நேற்று கூறி­னார்.

"இந்­தி­யா­வின் முக்­கிய நக­ரங்­களில் பதி­வா­கும் கொவிட்-19 சம்­ப­வங்­களில் பாதிக்­கும் மேற்­பட்­டவை ஓமிக்­ரான் தொற்று வகை. புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் பெரு கு­வ­தால் உல­கின் பல நாடு­களில் உரு­வா­ன­தைப் போன்ற மூன்­றா­வது தொற்று அலை இந்­தி­யா­வில் ஏற்­படும் நிலை உள்­ளது.

"இருப்­பி­னும் பொது­மக்­கள் பீதி­ய­டை­யத் தேவை­யில்லை," என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!