தடுப்பூசியால் கடும் பாதிப்பு: 296 பேருக்கு நிதி உதவி

தடுப்­பூ­சிக் காய நிதி உத­வித் திட்­டத்­தின்கீழ் டிசம்­பர் 31ஆம் தேதிவரை, 296 பேர் அர­சாங்க நிதி உத­விக்­குத் தகுதி பெற்றுள்­ள ­னர். கொவிட்-19 தடுப்­பூசி போட்டுக்­கொண்­ட­தால் கடு­மை­யான பக்­க­வி­ளை­வு­கள் ஏற்­பட்­ட­வர்­க­ளுக்கு இந்த நிதி உதவி வழங்­கப்­ப­டு­கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த நிதி உத­விக்­குத் தகு­தி­பெற்ற 144 பேரை­விட இது அதி­கம் என்று சுகா­தார அமைச்சு கூறி­யுள்­ளது.

டிசம்­பர் 31 நில­வ­ரப்­படி, இந்த நிதி­யின்­கீழ் $1,262,000 நிதி உதவி வழங்­கப்­பட்­டுள்­ளது அல்லது அவ்­வாறு வழங்க நட­வடிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது.

ஒப்­பு­நோக்க, ஆகஸ்ட் மாதம் வரை இந்த உத­வித் திட்­டத்­தின்­கீழ் $782,000 வழங்­கப்­பட்­டுள்­ளது.

சுகா­தார அமைச்சு இந்த விவரங்­களை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழுக்கு அளித்­தது.

உத­வித் திட்­டத்­தின் முதல் படி­நி­லை­யில், ஆக அதி­க­மா­ன தொகை­யாக $225,000 இது­வரை இரு­வ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

தடுப்­பூ­சிக் காய நிதி உத­வித் திட்­டத்­தில், தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பின்­னர் கடு­மை­யான பக்­க­வி­ளைவு ஏற்­ப­டு­வோ­ருக்கு நல்­லெண்ண அடிப்­ப­டை­யில் ஒரு­முறை நிதி உதவி வழங்கப்படுகிறது.

அதற்­குத் தகு­தி­பெற, உத­வி­பெ­றுபவர் சிங்­கப்­பூ­ரர், நிரந்­த­ர­வாசி, அல்­லது நீண்­ட­கால அனு­மதி­யில் இங்கு வசிப்­ப­வ­ராக இருக்­க­ வேண்­டும். அவர்­கள் தேசிய கொவிட்-19 தடுப்­பூ­சித் திட்­டத்­தின்­கீழ் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருக்க வேண்­டும்.

இந்த நிதி உதவி பெற ஒருவர் கடு­மை­யான பக்­க­வி­ளை­வால் பாதிக்­கப்­பட்டு, மருத்­து­வ­ம­னை­யில் உள்­நோ­யாளி சிகிச்சை பெற வேண்­டியநிலை, அடிக்­கடி ஏற்­படும் உடல் செயல்­பா­டின்மை அல்­லது குறை­பாடு, அல்­லது தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தன் கார­ண­மாக அவ­ருக்கு மர­ணம் சம்­ப­வித்­த­தாக மருத்­து­வர் மதிப்­பீடு செய்­தி­ருக்க வேண்­டும்.

இந்த நிதி உதவி கோரும் ஒவ்­வொரு விண்­ணப்­ப­மும் சுகா­தார அமைச்­சால் அமைக்­கப்­பட்ட மருத்­து­வக் குழு­வால் மதிப்­பீடு செய்­யப்­படும்.

விண்­ணப்­பங்­களை மதிப்­பீடு செய்­யும் குழு இரண்டு அம்­சங்­க­ளின் அடிப்­ப­டை­யில் மதிப்­பீடு செய்­யும் என்று அமைச்­சர் ஓங் யி காங் விளக்­கி­னார்.

அதா­வது, விண்­ணப்­ப­தா­ர­ரின் நிலைமை கொவிட் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தால் ஏற்­பட்­டதா, அப்­ப­டி­யா­னால் அது எந்த அளவு கடு­மை­யா­னது என்­பதே அந்த இரண்டு அம்­சங்­கள் என்று அவர் கூறினார்.

இதன்தொடர்­பில் நாடா­ளு­மன்­றத்­தில் பாட்­டா­ளிக் கட்சி உறுப்­பி­னர் ஹி டிங் ரு அக்­டோ­பர் 4ஆம் தேதி கேட்ட கேள்வி ஒன்­றுக்குப் பதி­ல­ளித்த அமைச்­சர் ஓங், "விண்­ணப்­பங்­கள் நிரா­கரிக்­கப்­படும்போது அவற்­றுக்­கான கார­ணங்­கள் விண்­ணப்­ப­தா­ரர்­க­ளி­டம் தெரி­விக்­கப்­படும். இதில் அவர்­க­ளின் விண்­ணப்­பங்­க­ளுக்கு ஆத­ர­வாக புதி­தாக வேறு ஏதேனும் மருத்­துவ ஆதா­ரம் இருப்­பின் அவர்­கள் மறு­ம­திப்­பீட்­டுக்­காக விண்­ணப்­பங்­களை மீண்­டும் சமர்ப்­பிக்­க­லாம்," என்று கூறி­னார்.

நிதி உதவி பெறத் தகு­தி­யுடை­ ய­வர்­க­ளுக்கு அவர்­க­ளின் பக்­க­வி­ளை­வு­க­ளின் கடு­மைக்கு ஏற்ப மூன்று வித­மான நிதி உதவி வழங்­கப்­படும்.

பக்­க­வி­ளை­வு­க­ளால் ஒரு­வர் இறக்க நேரிட்­டாலோ அல்­லது கடு­மை­யான நிரந்­த­ரக் குறை­பாடு ஏற்­பட்­டாலோ அவ­ருக்கு $225,000 வழங்­கப்­படும். மருத்­து­வ­ம­னை­யில் தீவிர சிகிச்­சைப் பிரிவு அல்­லது உயர் சிகிச்­சைப் பிரி­வில் அனு­மதிக்­கப்­பட்டு பின்­னர் குண­ம­டை­வோர் $10,000 பெறு­வர்.

இது தவிர, மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­ப­டு­வோர், அல்­லது பக்­க­வி­ளை­வு­க­ளுக்கு மருத்­துவ சிகிச்சை பெறு­வோர் $2,000 பெறு­வர்.

இந்த நிதி உத­வித் திட்­டம் நடப்­பி­லி­ருக்­கும் மருத்­துவ நிதித் திட்­டம், காப்­பு­று­தித் திட்­டங்­கள் ஆகி­ய­வற்றை சாராத நல்­லெண்ண அடிப்­ப­டை­யி­லான மருத்­துவ உதவித் திட்­டம் என சுகா­தார அமைச்சு இந்­தத் திட்­டத்தை வருணித்­துள்­ளது.

இத்­திட்­டம் கொவிட் தடுப்­பூசி­யால் ஏற்­படும் மருத்­துவ செலவை ஈடு­கட்­டும் திட்­டம் அல்ல என்­றும் தடுப்­பூ­சி­யால் கடு­மை­யான பக்­க­வி­ளை­வு­களை அனுப வித்­துள்ள நோயா­ளி­க­ளிக்கு கூடு­தல் உத­வித் திட்­டம் இது என்­றும் அமைச்சு தெளி­வு­ப­டுத்­தி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!