ஒரு மி. குடும்பங்கள் $100 'சிடிசி' பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டன; $28 மி. செலவழிக்கப்பட்டது

ஒரு மாதத்துக்குள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட சிங்கப்பூர் குடும்பங்கள், 100 வெள்ளி மதிப்பிலான தங்கள் சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுள்ளன.

இதுவரை 28 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பற்றுச்சீட்டுகளை அக்குடும்பங்கள் பயன்படுத்தியுள்ளன.

சுமார் 130 மில்லியன் வெள்ளி செலவிலான அந்தத் திட்டம் டிசம்பர் 13 அன்று தொடங்கப்பட்டது.

அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க குடும்பங்களுக்கும் பெருந்தொற்றுச் சூழலில் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள கடைக்காரர்களுக்கும் உணவங்காடிக் கடைக்காரர்களுக்கும் உதவுவது திட்டத்தின் நோக்கமாகும்.

தற்போது பற்றுச்சீட்டுகளை ஏற்றுக்கொள்ளும் கடைகளைக் கண்டறிய புதிய வசதி செய்துதரப்பட்டுள்ளது.

அதன் பொருட்டு, இருவழித் தொடர்பு வரைபடம் ஒன்று, CDC Vouchers Merchants Go Where எனும் இணையத்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் முகவரி எண்களையும் சாலையின் பெயரையும் பதிவிட்டால், அங்கு எந்தெந்தக் கடைகள் பற்றுச்சீட்டுகளை ஏற்றுக்கொள்கின்றன என்று பார்க்க முடியும்.

தற்போது 12,500க்கும் உணவங்காடிக் கடைகளும் சில்லறைக் கடைகளும் திட்டத்தில் சேர்ந்துள்ளதாக கலாசாரம், சமூகம், இளையர் துணை அமைச்சர் லோ யேன் லிங் கூறினார்.

அவர்களில் 90 விழுக்காட்டுக் கடைகளில் குறைந்தது ஒரு பற்றுச்சீட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

குடும்ப உதவித் தொகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்தப் பற்றுச்சீட்டுகள் பற்றி 2021 வரவு செலவுத் திட்டத்தின்போது துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியன் அறிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!