கரிம வரியை சிங்கப்பூர் கவனத்துடன் கையாளும்

அதி­கப்­ப­டி­யான கரிம விலை கரிமப் பயன்பாட்டைக் குறைக்க உதவும் என்றபோதிலும் நாட்­டின் கரிம வரியை சிங்­கப்­பூர் கவ­னத்­து­டன் கையாள வேண்டி உள்­ள­தா­க­வும் நிறு­வ­னங்­க­ளுக்­குப் போதிய அவ­கா­சம் கொடுத்து அவற்றை போட்­டித்­தன்­மை­யு­டன் நீடிக்­கச் செய்ய இவ்­வாறு செய்­வது உத­வும் என்­றும் இரண்டு அமைச்­சர்­கள் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­த­னர்.

சிங்­கப்­பூ­ரின் பசுமை உரு­மாற்­றம் தொடர்­பான விவா­தத்­தில் பங்­கேற்­றுப் பேசிய வர்த்­தக தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் சரி­யான கரிம விலை, முத­லீட்டு முடி­வு­களை வழி­ந­டத்­தும் என்­றும் நிறு­வ­னங்­கள் தங்­க­ளது கரி­மப் பயன்­பாட்­டைக் குறைக்க அது தூண்­டும் என்­றும் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் கரிம விலை மிக­வும் குறை­வாக இருப்­ப­தாக நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் ஏற்­கெ­னவே 35வது சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் கலந்­து­ரை­யா­ட­லில் தெரி­வித்­தி­ருந்­தார். இதன் கார­ண­மாக கரிம வரி விகி­தத்தை மறுஆய்வு செய்ய வேண்­டிய அவ­சி­யம் அர­சாங்­கத்­திற்கு இருப்­ப­தாக அப்­போது அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

கரிம விலை­யைப் பிரி­தி­ப­லிக்க அதன் வரிவிகி­தம் மாற்­றி­ய­மைக்­கப்­ப­டக்­கூ­டும் என்­றும் முத­லீடு தொடர்­பான முடி­வு­களில் அது மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தும் என்­றும் அவர் கூறி­யிருந்தார்.

சிங்­கப்­பூர் கடந்த 2019ஆம் ஆண்டு கரிம வரியை அறி­மு­கம் செய்­தது.

இதனைக் கொண்டுவந்த முதல் தென்­கி­ழக்­கா­சிய நாடு சிங்­கப்­பூர். இருப்பினும் டன்­னுக்கு $5 என்­னும் மிக­வும் குறைந்த வரியாக அது நிர்­ண­யிக்­கப்­

பட்­டது.

இதே வரி­வி­கி­தம் 2023ஆம் ஆண்டு வரை­யில் தொட­ரும். அதன்­பி­றகு, 2024ஆம் ஆண்டு முதல் வரியை எந்த அள­வுக்கு உயர்த்­த­லாம் என்­பது குறித்து அடுத்த மாதம் தாக்­கல் செய்­யப்­பட உள்ள வரவு செல­வுத் திட்­டத்­தில் அறி­விக்­கப்­படும். தொடர்ந்து 2030ஆம் ஆண்டு வரை­யி­லான வரி நில­வ­ரம் தொடர்­பா­க­வும் அப்­போது தெரி­விக்கப்பட உள்­ளது.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று பேசிய அமைச்­சர் கான், கரிம விலை ஏற்­றத்­தைச் சமா­ளிப்­ப­தற்­கான உத­வி­கள் குறித்து அர­சாங்­கம் பரி­சீ­லிக்­கும் என்­றார்.

குறிப்­பாக, குறைந்த வரு­மா­னக் குடும்­பத்­தி­ன­ருக்கு ஏற்­கெ­னவே நடப்­பில் உள்ள யு-சேவ் போன்ற பய­னீட்­டுக் கட்­ட­ணத் தள்­ளு­படி, எரி­சக்­திக் கட்­ட­ணத்தை ஈடு­செய்­யக்­கூ­டிய பற்­றுச்­சீட்டு போன்ற யோச­னை­களை அவர் மேற்­கோள் காட்­டி­னார்.

தனி­ந­பர் மசோதா மீது நேற்று ஐந்து மணி­நே­ரம் விவா­தம் நடை­பெற்­றது. 19 உறுப்­பி­னர்­கள் அதில் கலந்­து­கொண்டு பேசி­னர். பசுமை நிதி­யளிப்பை அதி­க­ரிக்­க­வும் பசு­மைப் பொரு­ளி­ய­லுக்­கான வேலை­களை அதிகம் உரு­வாக்­க­வும் இந்த மசோதா அர­சாங்­க­ததை வலி­யு­றுத்­து­கிறது.

இதற்­கி­டையே, கரி­மம் குறைந்த எதிர்­கா­லத்தை நோக்கி நடை­போ­டும் சிங்­கப்­பூர், வலு­வா­ன­ க­ரிம வரி­யைப் பெற்­றி­ருக்க வேண்­டிய அவ­சி­யம் உள்­ள­தாக நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுச் சூழல் அமைச்­சர் கிரேஸ் ஃபூ தெரி­வித்­துள்­ளார்.

2030ஆம் ஆண்­டு­வாக்­கில் சிறப்­பான நிலையை சிங்­கப்­பூர் அடைய இது உத­வும் என்­று குறிப்­பிட்ட அவர், சிங்­கப்­பூ­ரின் கரிம வரி 80 விழுக்­காட்டு கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­து­டன் தொடர்­பு­டை­யது என்­றார்.

நாடாளுமன்ற விவாதத்தின்போது அறிவிப்பு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!