சிங்கப்பூரில் ஓமிக்ரான் தொற்றியவர்களின் எண்ணிக்கை 797 ஆக உயர்வு

சிங்கப்பூரில் புதிதாக ஓமிக்ரான் வகைக் கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை (ஜனவரி 12) அன்று 797 ஆக உயர்ந்தது. 

ஒப்புநோக்க செவ்வாய்க்கிழமை அன்று 438 பேருக்கு ஓமிக்ரான் தொற்றியதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

புதன்கிழமை புதிதாக கிருமி தொற்றியவர்களில் 513 பேருக்கு உள்நாட்டைச் சேர்ந்தவர்கள். 

284 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். 

ஒட்டுமொத்தமாக, புதிதாக கொவிட்-19 கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை 882 ஆக இருந்தது. 

ஒப்புநோக்க செவ்வாய்க்கிழமை 846 பேருக்கு கொவிட்-19 தொற்று பதிவானது.   

இந்நிலையில் ஒருவர் கொவிட்-19 தொற்று காரணமாக மாண்டார். 

மேலும், வாராந்திர தொற்றுப் பரவல் விகிதம் புதன்கிழமை அன்று 1.60 ஆக இருந்தது. 

இது, செவ்வாக்கிழமை பதிவான 1.71 எனும் விகிதத்தைவிட குறைவு. 

வாராந்திரத் தொற்றுப் பரவல் விகிதம் ஒன்றுக்கு மேல் இருப்பத, அந்த வாரத்தில் புதிய தொற்றுச் சம்பவங்கள் உயர்ந்து வருவதைக் காட்டுகிறது. 

கொவிட்-19 தொற்றிய 167 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 13 பேருக்கு செயற்கை சுவாச இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. 

11 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 

சிங்கப்பூர் மக்கள்தொகையில் 87 விழுக்காட்டினர் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டு விட்டனர்.

சுமார் 48 விழுக்காட்டினருக்க பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.     
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!