உக்ரேன் விவகாரம்: அமெரிக்காவின் முடிவுக்கு ரஷ்யா கண்டனம்

உக்­ரேன்­மீது ரஷ்யா போர் தொடுக்­க­லாம் என அஞ்­சப்­படும் நிலை­யில், கிழக்கு ஐரோப்­பிய 'நேட்டோ' நட்பு நாடுகளுக்கு ஆத­ரவளிக்­கும் வித­மாக கூடு­தல் படையினரை அனுப்ப அமெ­ரிக்கா முடி­வு­செய்­துள்ளது.

அமெ­ரிக்­கா­வின் இம்­மு­டி­விற்கு ரஷ்யா கடும் கண்­ட­னம் தெரி­வித்திருக்கிறது.

இது பதற்­றத்தை அதி­க­ரிக்­கக்­கூ­டிய, 'அழி­வு­த­ரும்' நட­வ­டிக்கை என்­றும் அர­சி­யல் ரீதி­யில் தீர்வை எட்­டு­வ­தற்­கான வாய்ப்பை இது குறைத்­து­விட்­டது என்­றும் ரஷ்யா தெரி­வித்­துள்­ளது.

தன்­னு­டைய படை­வீ­ரர்­கள் 2,000 பேர் வடக்கு கேர­லை­னா­வில் இருந்து போலந்­துக்­கும் ஜெர்­ம­னிக்­கும் செல்­வர் என்­றும் ஏற்­கெ­னவே ஜெர்­ம­னி­யில் இருக்­கும் 1,000 பேர் ருமே­னி­யா­விற்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­வர் என்­றும் அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது.

உக்­ரேனை ஒட்டி ஏறக்­கு­றைய 100,000 படை­வீ­ரர்­களை ரஷ்யா நிறுத்தி வைத்­துள்­ளது. இருந்­தா­லும், உக்­ரேன்­மீது படை­யெ­டுக்­கும் திட்­டம் தனக்கு இல்லை என்று அந்­நாடு மறுத்து வரு­கிறது.

இச்­சூ­ழ­லில், ஐரோப்­பா­விற்­குக் கூடு­தல் படை­களை அனுப்பி வைக்கும் அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னின் முடிவை 'அழிவை ஏற்­படுத்­தக்­கூ­டி­யது' என்­றும் 'நியா­ய­மற்­றது' என்­றும் ரஷ்ய வெளி­யு­றவு துணை அமைச்­சர் அலெக்­சாண்­டர் கிருஷ்கோ சாடி­யுள்­ளார்.

முன்­ன­தாக, ஐரோப்­பா­வில் குவிக்­கப்­பட்­டுள்ள அமெ­ரிக்­கப் படை­கள் உக்­ரே­னில் சண்­டை­யில் பங்­கு­கொள்­ளாது என்­றும் அவை அமெ­ரிக்­கா­வி­னு­டைய நட்பு நாடு­களின் தற்­காப்பை உறு­தி­செய்­யும் என்­றும் அமெ­ரிக்­கத் தற்­காப்பு அமைச்­சின் தலை­மை­ய­க­மான பென்­ட­கன் தெரி­வித்து இருந்­தது.

ஐரோப்­பா­விற்கு அனுப்ப ஏற்­கெனவே 8,500 படை­வீ­ரர்­க­ளைத் தயா­ராக வைத்­தி­ருந்த நிலை­யில், கூடு­தல் படை­களை அனுப்­பும் முடிவை அமெ­ரிக்கா எடுத்­துள்­ளது.

புட்டின் - ஜான்சன் பேச்சு

இத­னி­டையே, ரஷ்யா-உக்­ரேன் இடை­யி­லான பிரச்­சி­னைக்கு அமைதித் தீர்­வு­காண ஜன­நா­யக ரீதி­யில் தீவிர முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

ஏனெ­னில், அது ஐரோப்­பா­வில் ஒரு முழு அள­வி­லான போராக வெடித்து­வி­ட­லாம் எனும் அச்­சம் நில­வு­கிறது.

இவ்­வே­ளை­யில், ரஷ்ய அதி­பர் புட்­டி­னும் பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­ச­னும் நேற்று முன்­தி­னம் தொலை­பேசி வழி­யாக ஆலோ­சித்­தனர். அப்­போது, 'நேட்டோ' அமைப்­பில் உறுப்­பி­ன­ராக விரும்­பு­வ­தற்கு அனைத்து ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கும் உரிமை உண்டு என்று திரு ஜான்­சன், திரு புட்­டி­னி­டம் கூறி­னார்.

ஆனால், 'நேட்டோ' அமைப்­பில் உக்­ரேன் இடம்­பெற ரஷ்யா எதிர்ப்பு தெரி­வித்து வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!