இந்தியா: 5 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள் வீணாகக்கூடும்

தனியார் மருத்துவமனைகளில் இருப்பில் உள்ளவை காலாவதித் தேதியை நெருங்குகின்றன

இந்­தியா முழு­து­முள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் ஏறத்­தாழ 5 மில்லியன் (50 லட்சம்) கொவி­ஷீல்டு தடுப்­பூ­சி­கள் பயன்­ப­டுத்­தப்­படா­மல் உள்­ளன. இம்­மாத இறு­தி­யில் அல்­லது மார்ச் தொடக்­கத்­தில் அவை காலா­வ­தி­யா­கி­வி­டும் என்­பதால் அவை­ய­னைத்­தும் வீணாய்ப் போகும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து, பரி­மாற்­றத் திட்­டத்­தின்­மூ­லம் அவை வீணா­வ­தைத் தடுக்­கும்­படி மத்­திய அர­சாங்­கத்­திற்­கும் 'கொவி­ஷீல்டு' தயா­ரிக்­கும் சீரம் நிறு­வ­னத்­திற்­கும் இந்­திய மருத்­து­வச் சங்­கம் வேண்டு­கோள் விடுத்­துள்­ளது.

ஆனால், "பயன்­ப­டுத்­தப்­ப­டாத தடுப்­பூ­சி­க­ளைப் பெற்­றுக்­கொண்டு புதிய தடுப்­பூ­சி­க­ளைக் கொடுப்­ப­தற்­கான அல்­லது அவற்­றைத் திரும்பப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான கொள்­கையை நாங்­கள் கொண்­டு இ­ருக்­க­வில்லை," என்று சீரம் நிறு­வனத்­தின் மூத்த அதி­காரி தெரி­வித்­திருக்கிறார்.

"தேவை­யான குறைந்த வெப்­ப­நி­லை­யில் அந்­தத் தடுப்­பூ­சி­கள் எவ்­வாறு சேமித்து வைக்­கப்­ப­டு­கின்­றன என்­ப­தன் தொடர்­பில் பல பிரச்­சி­னை­கள் உள்­ளன. அவை முறை­யா­கச் சேமிக்­கப்­ப­டு­கின்­றன என்­பதை உறு­தி­செய்ய எந்த வழி­மு­றை­யும் இல்லை. அத­னால், ­தடுப்­பூ­சி­கள் எவ்­வாறு சேமித்து வைக்­கப்­ப­டு­கின்­றன என்­பது பற்றி சரி­யாக எது­வும் தெரி­யா­மல், அவற்­றைத் திரும்­பப் பெற்று, இன்­னோர் இடத்­தில் பயன்­ப­டுத்­து­வது என்பது முற்­றி­லும் சாத்­தி­ய­மில்லை. அது அபாய­க­ர­மா­ன­தும்­கூட," என்­றார் அந்த அதி­காரி.

இந்த நிலை­யில், விரை­வில் காலா­வ­தி­யாக இருக்­கும் கொவி­ஷீல்டு தடுப்­பூ­சி­க­ளைப் பெற்­றுக்­கொண்டு, இன்­னும் வெகு­நாள் கழித்து காலா­வ­தி­யா­கக்­கூ­டிய தடுப்­பூ­சி­க­ளைத் தர வேண்­டும் என்று தனி­யார் மருத்­து­வ­ம­னை­களும் கோரிக்கை விடுத்­துள்­ளன.

அர­சாங்­கம் மக்களுக்கு இல­வ­ச­மாக கொரோனா தடுப்­பூசி போட்டு வரு­வ­தால் அதற்­கா­கத் தனி­யார் மருத்­து­வ­ம­னை­களை நாடு­வோர் எண்­ணிக்கை குறைந்­து­விட்­ட­தாகக் கூறப்­ப­டு­கிறது.

"பல ஏழை நாடு­க­ளைச் சேர்ந்த மக்­க­ளுக்கு கொவிட்-19 தடுப்­பூசி கிடைக்­காத நிலை­யில், தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் இருப்­பில் உள்ள தடுப்­பூ­சி­களை வீண­டிப்­பது குற்­ற­வி­யல் இழப்­பா­கும்," என்­றார் இந்­திய மருத்­து­வச் சங்­கத்­தின் இந்­திய மருத்­து­வ­ம­னைக் கழ­கத் தலை­வர் டாக்­டர் சஞ்­சய் பாட்­டீல்.

"50 லட்­சம் தடுப்­பூ­சி­கள் என்­பது ஒரு மதிப்­பீ­டு­தான். விரை­வில் காலா­வ­தித் தேதியை எட்­டும் தடுப்­பூ­சி­க­ளின் எண்­ணிக்கை இதை­விட அதி­க­மாக இருக்­க­லாம். தரவு­க­ளைச் சேக­ரிக்க முயன்று வரு­கி­றோம்," என்­றார் டாக்­டர் பாட்­டீல்.

தங்­க­ளி­டம் மார்ச் 8ஆம் தேதிக்­குள் காலா­வ­தி­யா­கக்­கூ­டிய 4,000 கொவி­ஷீல்டு தடுப்­பூ­சி­கள் இருப்­பதா­க­வும் அவற்­றில் ஏறக்­கு­றைய 3,000 தடுப்­பூ­சி­கள் வீணா­கி­வி­ட­லாம் என்­றும் புனே நக­ரி­லுள்ள 'ஹீலிங் ஹேண்ட்ஸ்' மருந்­த­கத்­தின் இயக்­கு­நர் டாக்­டர் சிநேகா போர்­வால் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!