சூடுபிடிக்கும் சூரியசக்தி முயற்சி

தொழில்துறை கட்டடங்களை நிர்வகிக்கும் ஜூரோங் நகராண்மைக் கழகத்தின் புதிய கொள்கை காரணம்

சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த சூரி­ய­சக்­தியை அதி­க­மா­கப் பயன்­ப­டுத்­திக்கொள்ள சிங்­கப்­பூர் எடுத்­து­வ­ரும் முயற்­சி­கள் மேலும் சூடு­பிடிக்­கின்­றன.

தொழில்­துறைக் கட்­ட­டங்­களை உரு­வாக்­கும் ஜூரோங் நக­ராண்­மைக் கழ­கம் நடை­மு­றைப்­ப­டுத்­தும் ஒரு புதிய கொள்கையே இதற்­குக் கார­ணம்.

புதிய நிலம் மற்­றும் நில அடிப்­ப­டை­யி­லான வச­தி­கள் ஒதுக்­கப்­படும்போதும் நிலக் குத்­த­கை­ புதுப்­பிக்­கப்­படும்போதும் நிலங்­கள் விற்­ப­னைக்கு விடப்­படும் போதும் ஏலக்­குத்­த­கை­க­ளின்போதும் அவற்­றில் சூரி­ய­சக்­தியை உரு­வாக்­கும் தக­டு­களை அமைக்க வேண்­டி­யது இப்­போது தேவை­யான ஒன்று என்­பது தெரி­ய­வந்­துள்­ள­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்டு உள்­ளது.

இந்­தத் தேவை, குறைந்­த­பட்­சம் 800 சதுரமீட்­டர் கூரை உச்சி இடத்­தைக் கொண்­டுள்­ளதைப் போன்ற குறிப்­பிட்ட நிபந்­த­னை­களை நிறை­வேற்­று­கின்ற நிறு­வனங்­கள் அனைத்­துக்­கும் 2020 ஏப்­ரல் முதல் கட்­டா­ய­மா­ன­தாக இருந்து வரு­வதாக இந்­தக் கழ­கம் குறிப்­பிட்டுள்­ளது.

ஜூரோங் நக­ராண்­மைக் கழ­கம் தோ பாயோ நக­ரைப் போல ஏறக்­கு­றைய 28 மடங்கு பெரிய அல்­லது 6,800 ஹெக்டருக்­கும் அதிக பரப்­புள்ள தொழில்­துறைக் கட்­ட­டங்­க­ளை­யும் இடங்­க­ளை­யும் நிர்­வகிக்­கிறது.

ஆண்டு ஒன்­றுக்குச் சரா­ச­ரி­யாக 40 புதிய இடங்­கள் ஒதுக்­கப்­ப­டு­கின்­றன அல்­லது புதுப்­பிக்­கப்­ப­டு­கின்­றன என்று கழ­கம் கடந்த ஜன­வ­ரி­யில் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளி­டம் தெரி­வித்து இருந்­தது.

இந்­தக் கழ­கம் ஏற்­கெ­னவே தற்­காலிக காலி இடங்­களில் சூரி­ய­சக்தி தக­டு­களை அமைக்­கும் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கிறது. இந்த முயற்சி, கழ­கத்­தின் இப்­போ­தைய நிபந்­தனை ஆகியவை கார­ண­மாக அடுத்த இரண்­டாண்­டு­களில் 82 மெகா­வாட்-பீக் (MWp) அள­வுக்கு சூரி­ய­சக்தி உரு­வாக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்த அளவு, 2030ல் சிங்­கப்­பூர் இலக்கு நிர்­ண­யித்து இருக்­கும் சூரி­ய­சக்தி அள­வில் ஏறத்­தாழ 4% ஆகும்.

2030ல் சிங்­கப்­பூர் 2 கிகா­வாட்-பீக் (GWp) அள­வுக்குச் சூரி­ய­சக்­தியைத் தயா­ரிக்க தேவை­யான ஏற்­பா­டு­க­ளைக் கொண்­டி­ருக்க வேண்­டும் என்று விரும்பு­கிறது. 2 கிகா­வாட்-பீக் சூரிய எரி­சக்தி, ஓராண்­டுக்கு ஏறக்­கு­றைய 350,000 குடும்­பங்­க­ளுக்­குத் தேவை­யான மின்சார அளவைக் குறிப்­ப­தா­கும்.

இது, 2030ல் சிங்­கப்­பூ­ருக்குத் தேவைப்­படும் மொத்த மின்­சார அள­வில் 3 விழுக்­கா­டாக இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த இதர வகை எரி­சக்­தியைத் தயா­ரிக்­கும் ஆற்­றல் சிங்­கப்­பூ­ரி­டம் இல்லை. அதா­வது, கடல் அலை அல்­லது, காற்­றாலை போன்­றவை மூலம் மின்­சக்­தியைத் தயா­ரிக்­கக்­கூ­டிய வசதிகள் சிங்­கப்­பூ­ரி­டம் இல்லை.

ஆகை­யால், சிங்­கப்­பூரை பொறுத்­த­வரை சூரி­ய­சக்­தியே சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த எரி­சக்தி வழி­யாக இருக்­கிறது.

இருந்­தா­லும் பெரிய பெரிய சூரி­ய­சக்தி ஆலைகளை அமைப்­ப­தற்­குப் போது­மான நில­வ­ளம் இல்லை என்­ப­தால் சூரி­ய­சக்­தி­யைப் போதிய அள­வுக்­குப் பெறு­வதில் பல சவால்­கள் உள்­ளன.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக புளோக்கு­கள், தெங்கா நீர்த்­தேக்­கம் போன்ற நீர்­நி­லை­கள், காலி நிலப்­பகு­தி­கள் மேலும் பல தொழில்­துறை இடங்­கள் உள்­ளிட்ட பல இடங்­க­ளி­லும் சூரி­ய­மின்­சக்தி தகடு­களை அமைக்க சிங்­கப்­பூர் கூடு­மா­ன­வரை முயன்று வரு­கிறது.

பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­க­மும் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­க­மும் தலைமை ஏற்று 2014ல் சூரி­ய­சக்தி செயல்­திட்­டம் ஒன்றைத் தொடங்கின. வீவக புளோக்கு­களி­லும் அர­சாங்க இடங்­க­ளி­லும் சூரிய மின்­சக்தி தக­டு­களை வேக­மாக அமைக்க அந்­தச் செயல்­திட்­டம் ஊக்­க­மூட்­டி­யது.

தெங்கா நீர்த்­தேக்க சூரி­ய­சக்தி மிதவை ஆலை மூலம் 60 MWp அளவுக்கு மின்­சக்­தியை உரு­வாக்க முடியும். இது 2030 இலக்­கில் சுமார் 3 விழுக்­கா­டா­கும்.

6,901 வீவக புளோக்­கு­க­ளுக்காக மொத்­தம் 330 MWp அள­வுக்குச் சூரிய மின்­சக்­தியைத் தயா­ரிக்­கும் ஆற்­றல் தன்னி­டம் இருப்­ப­தாக சென்ற ஆண்டு மார்ச்சில் வீவக தெரி­வித்­தது. இது 2030 இலக்­கில் ஏறத்­தாழ 17 விழுக்­கா­டா­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!