நோவாவேக்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு சிங்கப்பூர் இடைக்கால அனுமதி

நோவாவேக்ஸ் நிறுவனம் உருவாக்கிய கொவிட்-19 தடுப்பூசிக்கு சுகாதார அறிவியல் ஆணையம் இடைக்கால அனுமதி அளித்துள்ளது.

சிங்கப்பூரில் 18 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ளவர்களுக்கும் அது போடப்படும்.

சுகாதார அறிவியல் ஆணையம் இதை திங்கட்கிழமை (பிப்ரவரி 14) அன்று தெரிவித்தது.

நுவேக்சோவிட் (Nuvaxovid) என்பது அந்தத் தடுப்பூசியின் பெயர்.

கிருமிப்பரவல் சிறப்பு நடைமுறையின்கீழ் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி தடுப்பூசிக்கு இடைக்கால அனுமதியை வழங்கியதாக ஆணையம் கூறியது.

குறைந்தது மூன்று வார இடைவெளி விட்டு, இரண்டு முறை நுவேக்சோவிட் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

இலேசான கிருமித்தொற்றுக்கு நுவேக்சோவிட் 90 விழுக்காடு செயல்திறன் கொண்டிருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன என்று ஆணையம் கூறியது.

கடுமையான கொவிட்-19 தொற்று எதிராக அந்தத் தடுப்பூசி 100 விழுக்காடு செயல்திறன் கொண்டிருப்பதாகவும் அது கூறியது.

நுவேக்சோவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி அடுத்த சில மாதங்களில் சிங்கப்பூர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் மற்ற தடுப்பூசிகளைப் போல நுவேக்சோவிட் தடுப்பூசியிலும் தசை வலி, உடல் களைப்பு போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!