கா. சண்முகம்: பார்டி லியானி வழக்கில் காவல்துறை அதிகாரிகள் கடமைகளைச் சரியாகச் செய்யவில்லை

முன்னைய இல்லப் பணியாளர் பார்டி லியானியின் வழக்குவிசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்யவில்லை என்றும் தங்கள் மீதான எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரி மீதும் அவரது மேல் அதிகாரி மீதும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் கா சண்முகம் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (பிப்ரவரி 14) அன்று இத்தகவல்களைத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் காவல்துறை மேற்கொண்ட உட்புற விசாரணை பற்றி மேல்விவரம் சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிமுக்கு அமைச்சர் பதில் அளித்தார்.

இந்தோனீசியரான திருவாட்டி பார்டி லியானி தமது முதலாளியிடமிருந்து திருடியதாகக் கூறப்பட்ட வழக்கில் அவர் குற்றம் அற்றவர் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அந்த வழக்கு பொதுமக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது.

திருவாட்டி பார்டி லியானி, சாங்கி விமான நிலையக் குழுமத்தின் முன்னைய தலைவர் லியூ மன் லியோங்கின் வீட்டில் இல்லப் பணியாளராக வேலை செய்தார்.

கடந்த 2016ம் ஆண்டு அவரை வேலையிலிருந்து அக்குடும்பம் நீக்கியது. திருவாட்டி லியானி தங்களிடமிருந்து $43,000 மதிப்புள்ள பொருள்களைத் திருடியதாகவும் அது கூறியது.

அந்த வழக்கில் திருவாட்டி பார்டி லியானி குற்றவாளி என்று மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் அவரது தரப்பு செய்த மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம் அவர் குற்றம் அற்றவர் என்று தீர்ப்பளித்தது.

அந்தச் சம்பவத்தை விசாரித்த அதிகாரியும் அவரது மேல் அதிகாரியும் செய்த மூன்று பிழைகளை திரு சண்முகம் பட்டியல் இட்டார்.

முதலில் விசாரணை அதிகாரி விசாரணை நடத்தவும் தடயங்களைச் சேகரிக்கவும் குற்றம் நடந்த இடத்துக்கு உடனடியாகச் செல்லவில்லை. அதனால் தடயங்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை.

இரண்டாவதாக, விசாரணையின்போது சில தரப்புகள் கூறிய தகவல்கள் சரியானவையா என்று அதிகாரி உறுதிப்படுத்தவில்லை.

மூன்றாவதாக, மேல் அதிகாரி அவருக்கு போதைய அளவில் வழிகாட்டவில்லை.

கடினமான சூழலில் அந்த அதிகாரிகள் தங்கள் பணிகளைச் செய்தார்கள் என்று அமைச்சர் கூறினார்.

காவல்துறையில் உள்ள ஊழியர் பற்றாக்குறையால் அவர்களுக்கு வேலைப் பளு மிக அதிகமாக இருந்தது என்று திரு சண்முகம் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!