கொவிட்-19 நடைமுறைகள் சீரமைப்பு: பாதுகாப்பு இடைவெளி, வீட்டுக்கு வருவோர் எண்ணிக்கையில் மாற்றம்

சிங்கப்பூர் அதன் கொவிட்-19 நடைமுறைகளை சீரமைக்கிறது.

சிங்கப்பூரர்கள் நடைமுறைகளை எளிதில் புரிந்து கொள்ளவும் பெருந்தொற்றுச் சூழலில் ஏற்படக்கூடிய வேறு மாற்றங்களுக்கு ஏற்ப மாற உதவியாகவும் நடைமுறைகளில் மாற்றம் செய்யப்படும். .

ஆனால் சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று உயர்ந்து வருவதால், கட்டுப்பாடுகளைத் தளர்த்த இன்னும் நேரம் வரவில்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறினார்.

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு புதன் (பிப்ரவரி 16) அன்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார்.

பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகள் சீரமைக்கப்படும் என்று செய்தியாளர் கூட்டத்தில் கூறப்பட்டது.

வரும் பிப்ரவரி 25 முதல், எந்த ஒரு நேரத்திலும் ஒரு வீட்டிற்கு 5 விருந்தினர்கள் வரை செல்லலாம். தற்போது ஒரு நாளுக்கு அதிகபட்சம் 5 விருந்தினர்கள் மட்டுமே ஒரு வீட்டுக்குச் செல்லலாம்.

அதே போல வேலையிடங்களில் ஐந்துபேர் வரை ஒன்றுகூடலாம்.

அதனுடன், ஊழியர்களில் 50 விழுக்காட்டினர் அலுவலகங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.

முகக்கவசம் அணியாத சூழல்களில் பாதுகாப்பு இடைவெளியை இப்போது போல கடைபிடிக்க வேண்டும்.

ஆனால் முகக் கவசங்கள் அணியும் சூழல்களில் பாதுகாப்பு இடைவெளியைக் கடைபிடிப்பது கட்டாயமில்லை. இருப்பினும் அது ஊக்குவிக்கப்படுகிறது.

இந்த மாற்றங்களின் வழி பொது இடங்களில் ஒரு இருக்கையை விட்டு அமரும் வழக்கம் முடிவுக்கு வரலாம்.

மேலும், தற்போது திருமணங்கள், வழிபாடுகள், இறுதிச்சடங்குகள், வர்த்தகக் கூட்டங்கள் போன்றவற்றில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆள்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மார்ச் 4ஆம் தேதியிலிருந்து அந்த இடத்தின் அளவுக்கு ஏற்ப அதில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

ஆனால் மிகப் பெரிய இடங்களில் மக்கள் திரளும் நிகழ்ச்சிகளுக்கு உச்சவரம்பு கடைப்பிடிக்கப்படும்.

இதன்வழி 1,000 பேருக்குக் குறைவாகக் கூடும் நிகழ்ச்சிகள், எண்ணிக்கை கட்டுப்பாடு இல்லாமல் நடைபெறலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!