சேலையில் பவனி வந்து உணவு தரும் ரோபோ மங்கை

இந்­தி­யா­வின் கர்­நா­டக மாநி­லத்­தில் உள்ள ஓர் உண­வ­கத்­தில் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு உண­வைப் பரி­மாற வரு­கிறது, சேலை கட்­டிய ரோபோ மங்கை.

தொழில்­நுட்ப அம்­சங்­களை உண­வ­கங்­கள் நாடி வரும் இன்­றைய நவீன யுகத்­தில் வாடிக்­கை­யா­ள­ருக்கு அடுத்து என்ன புது­மை­யான அனு­ப­வத்தை வழங்­க­லாம் என்று சிந்­தித்­த­தில் இந்­தப் புது­வி­த­மான திட்­டம் உரு­வெ­டுத்­துள்­ளது.

மைசூரு மாவட்­டத்­தில் உள்ள சித்­தார்த்தா உண­வ­கத்­தில் மனி­தர்­கள் வந்து உண­வைப் பரி­மா­று­வ­தற்­குப் பதி­லாக இந்­தச் சேலை கட்­டிய ரோபோ மங்கை வரு­கிறது. தனக்கு என்ன வேண்­டும் என்று வாடிக்­கை­யா­ளர்­கள் கூறு­வ­தைப் பட்­டி­ய­லி­டும் உண­வக ஊழி­யர்­கள், அப்­பட்­டி­யலை ரோபோ­வி­டம் ஒப்­ப­டைப்­பர். ரோபோ­வும் அந்­தப் பட்­டி­ய­லைச் சமை­யல் செய்­ப­வ­ரி­டம் வழங்­கும்.

தயா­ரான உணவு ரோபோ­வி­டம் உள்ள பாத்­தி­ரத்­தில் வைக்­கப்­படும். அதை ரோபோ வாடிக்­கை­யா­ள­ரின் மேசைக்­குக் கொண்டு செல்­லும்.

நான்கு மணி நேரத்­திற்கு மின்­னூட்­டப்­பட்­டால் கிட்­டத்­தட்ட எட்டு மணி நேரத்­திற்கு ரோபோ சளைக்­கா­மல் இயங்­கும் என்று கூறப்­பட்­டது. டெல்­லி­யி­லி­ருந்து வர­வ­ழைக்­கப்­பட்ட இந்த ரோபோ­வுக்­கான செலவு, 2.5 லட்­சம் ரூபாய் (S$4,477) என்று உண­வ­கத்­தார் தெரி­வித்­துள்­ள­னர்.

அத்­து­டன் இன்­னும் ஆறு ரோபோக்­க­ளைத் தாங்­கள் கொள்­மு­தல் செய்­துள்­ள­தா­க­வும் குறிப்­பி­டப்­பட்­டது. உண­வ­கத்­தின் மனித­வ­ளத்­திற்கு இந்த ரோபோக்­கள் துணை­பு­ரி­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!