கிளிமெண்டியில் கத்தியுடன் காவல்துறை அதிகாரிகளை மிரட்டிய ஆடவர் சுடப்பட்டார்

கிளிமெண்டி அக்கம்பக்கக் காவல் நிலையத்துக்கு வெளியே கத்தியுடன் தங்களை தாக்க வந்த ஆடவரை காவல்துறையினர் சுட்டனர்.

கிளிமெண்டி அவென்யூ 5இல் உள்ள அக்கப்பக்க காவல் நிலையத்துக்கு வெளியே வியாழன் (பிப்ரவரி 17) இரவு அன்று சம்பவம் நடந்தது.

பென்னி டான் என்பவர் சமூக ஊடகத்தில் அது குறித்த காணொளியை பதிவிட்டார்.

அதில் ஆடவர் ஒருவர் சாலையைக் கடந்து, வலது கையில் கத்தியுடன் காவல்துறை அதிகாரிகளை நோக்கி நடந்து சென்றார்.

அவர் கையை உயர்த்தி அதிகாரிகளை நோக்கிப் பாயச் சென்ற தருணத்தில், துப்பாக்கி கூட்ட சத்தம் கேட்டது. ஆடவர் தடுமாறி தரையில் விழுந்தார்.

சீருடை அணிந்த அதிகாரிகள் உட்பட எட்டு பேர் ஆடவரைப் பிடிக்க அவரை நோக்கிச் சென்றனர்.

அச்சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) அன்று அறிக்கையை காவல் துறையினர் வெளியிட்டனர்.

குற்றம் புரியும் நோக்கத்துடன் அச்சுறுத்தியது, ஆபத்தான ஆயுதத்துடன் வேண்டும் என்றே காயப்படுத்தியது ஆகியவற்றின் தொடர்பில் 49 வயது ஆடவரைக் கைது செய்ததாக அவர்கள் கூறினர்.

கிளிமெண்டி அவென்யூ ஒன்று பிளோக் 420ஏயில் இரவு 8.40 மணி அளவில் அந்த 49 வயது ஆடவர் , 41 வயது ஆடவர் ஒருவரைக் கத்தியால் தாக்கியதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த 41 வயது ஆடவருக்கு வலது கையிலும் மணிக்கட்டிலும் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தாக்கிய நபருக்கும் தாக்கப்பட்டவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது என்று முதல் கட்ட விசாரணை தெரிவிக்கிறது.

பின்னர் தாக்கிய ஆடவர் டாக்சி ஏறி கிளிமெண்டி அக்கம்பக்க காவல்துறை நிலையத்துக்குச் சென்று அதிகாரிகளை நோக்கிச் சென்றதாகக் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!