ஈராண்டுகளில் கட்டம் கட்டமாக ஜிஎஸ்டி உயர்வு

அடுத்த ஈராண்­டு­களில் தற்போதைய 7 % விழுக்­காட்டு பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) படிப் ­ப­டி­யா­க 9 விழுக்­கா­டாக ஏற்­றம் காண­வி­ருக்­கிறது.

வரும் 2023ஆம் ஆண்டு ஜன­வரி 1ஆம் தேதி முதல் 8% ஆக­வும் 2024ஆம் ஆண்டு ஜன­வரி 1ஆம் தேதி முதல் 9% ஆக­வும் ஜிஎஸ்டி உயர்த்­தப்­படும் என்று இவ்­வாண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­த­போது நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்று தெரி­வித்­தார்.

நிதியமைச்­ச­ராக திரு வோங் வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தைத் தாக்­கல் செய்­தது இதுவே முதன்­முறை.

ஒன்­று­சேர்ந்து முன்­னேற்­றத்­திற்­கான புதிய வழியை வகுப்­போம் எனும் தலைப்­பி­லான இவ்­வாண்­டின் வர­வு­செ­ல­வுத் திட்­டம் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய வளர்ச்­சிக்­கான திட்­ட­மா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

ஜிஎஸ்டி உயர்­வின் தாக்­கத்­தைச் சமா­ளிக்க அனைத்து சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் ஆத­ரவு வழங்­கும் பொருட்டு மேம்­ப­டுத்­தப்­பட்ட $6.6 பில்­லி­யன் மதிப்­பி­லான பொருள், சேவை வரி அதி­க­ரிப்பை ஈடு­செய்­யும் உத்­த­ர­வா­தத் தொகுப்­புத் திட்­டத்தை அமைச்­சர் அறி­வித்­தார்.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் செலவினத்திற்கு ஜிஎஸ்டி உயர்­வி­லி­ருந்து பெறப்­படும் நிதி பயன்­ப­டுத்­தப்­படும் என்­றும் சமு­தாய அம்­சங்­களில் எதிர்­கா­லச் செல­வி­னங்­கள் உயர்ந்­த­வண்­ணம் இருப்­ப­தால், ஜிஎஸ்டி உட்­பட பல வரி­களை உயர்த்த வேண்­டி­ உள்­ளது என்­றும் திரு வோங் சொன்­னார்.

இந்த உயர்­வைச் சமா­ளிக்க அனைத்து சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் உதவி வழங்­கப்­படும் என்று அவர் உறு­தி­ய­ளித்­தார்.

அடுத்த ஐந்து ஆண்­டு­களில் 21 மற்­றும் அதற்­கு­மேல் வய­து­டைய ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ருக்­கும் $700 முதல் $1,600 வரை­யி­லான ரொக்க வழங்­கீடு தவிர அடுத்த நான்கு ஆண்­டு­க­ளுக்கு தகு­தி­பெ­றும் குடும்­பங்­க­ளுக்கு ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்டு யு-சேவ், அடுத்த மூன்று ஆண்டு­க­ளுக்கு ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்டு உட்­பட பல திட்­டங்­கள் இந்த உறு­தித் தொகுப்­பில் உள்­ளன.

அதிக வரு­மா­னம் ஈட்­டு­வோ­ருக்கு தனி­ந­பர் வரு­மான வரி இரண்டு வரம்பு­களில் உயர்த்­தப்­ப­டு­கிறது.

சொத்து வரி­களும் இரண்டு கட்­டங்­களாக ஏற்­றம் காண்­கின்­றன. சொகுசு கார்­க­ளின் கூடு­தல் பதி­வுக் கட்­ட­ணங்­களில் ஆக அதிக வரம்பு உரு­வாக்­கப்­பட்டு, திறந்த சந்தை மதிப்பு $80,000க்கும் மேற்­பட்ட தொகை­யில் 220% வரி வசூ­லிக்­கப்­படும்.

சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் இவ்­வாண்டு 3 முதல் 5 விழுக்­காடு வளர்ச்­சி ­கா­ணும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அந்த வளர்ச்சி, மேலும் அதி­க­மான நல்ல வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கும், ஊழி­ய­ர­ணி­யின் எல்லா நிலை­க­ளையும் சேர்ந்த சிங்­கப்­பூ­ரர்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தைப் பாது­காக்­கும் நமது முயற்­சி­க­ளுக்கு ஆத­ரவு தரும் என்­றார் அமைச்­சர்.

அத்­து­டன், கொவிட்-19 தாக்­கத்­தி­ல் இ­ருந்து மீண்­டு­வர உட­னடி, நேரடி ஆத­ரவை அமைச்­சர் அறி­வித்­தார். வர்த்­த­கங்­க­ளுக்கு $500 மில்­லி­யன் வேலை, தொழில் ஆத­ர­வுத் திட்­டம், குடும்­பங்­களுக்கு $560 மில்­லி­யன், விமா­னத் துறை ஆத­ர­வுத் தொகுப்பு, நிதி ஆத­ர­வுத் திட்­டங்­களை அமைச்­சர் அறி­வித்­தார்.

வேலை மாற்­றத் திட்­டம், திறன் வளர்ச்சி, குறைந்த வரு­மா­ன­முள்ள ஊழி­யர்­கள், முதிய ஊழி­யர்­கள் போன்ற உதவி மேலும் தேவைப்­ப­டு­வோ­ருக்­கென கூடு­தல் ஆத­ர­வுத் திட்­டங்­களை அமைச்­சர் வெளி­யிட்­டார்.

வேலை­ந­லன் துணை வரு­மா­னத் திட்­டம் மூலம் அதி­க­பட்ச வரு­டாந்­திர வழங்­கீடு $2,100லிருந்து $4,200 என உய­ரும்.

மேலும் அதிக துறை­களில் படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­பள முறை செயல்­ப­டுத்­தப்­படும் என்­றும் வெளி­நாட்டு ஊழி­யர்­களைப் பணி அமர்த்­தும் நிறு­வ­னங்­கள் அனைத்து உள்­ளூர் ஊழி­யர்­க­ளுக்­கும் தகு­தி­பெ­றும் உள்­ளூர்ச் சம்­ப­ள­மான $1,400 வழங்­க­ வேண்­டும்.

படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­பள உத­வித்­தொ­கைத்­திட்­டத்­தின்­கீழ் 2022ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை­யி­லான குறைந்த சம்­பள ஊழி­யர்­க­ளின் சம்­பள உயர்வை அர­சாங்­கம் பகிர்ந்து ஏற்­கும்.

மின்­னி­லக்க ஆற்­றல்­களில் முத­லீடு, புத்­தாக்­கம், ஆராய்ச்சி, மேம்­பாடு, படைப்­பாற்­றல் ஆகி­ய­வற்­றுக்கு கூடு­தல் ஆத­ரவு, உள்­ளூர் நிறு­வ­னங்­க­ளின் கட்­ட­மைப்பை உறு­திப்­ப­டுத்­து­தல் ஆகிய அம்­சங்­க­ளின் மூலம் புதிய ஆற்­றல்­களில் முத­லீடு செய்­யும் பல திட்­டங்­கள் அறி­விக்­கப்­பட்­டன.

ஓய்­வுக்­கா­லத்­திற்கு தயா­ரா­கும் முதிய ஊழி­யர்­க­ளுக்­கான திட்­டங்­களும் அறி­விக்­கப்­பட்­டன. மத்­திய சேம­நிதி விகி­தம் உயர்த்­தப்­ப­டு­வ­தோடு, பணி ஓய்­வுக்­காலத்­திற்­கான மத்­திய சேம­நிதி அடிப்­படைத் தொகை 2023ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்­டிற்­குள் 55 வயதை எட்டு­வோ­ருக்கு ஆண்­டுக்கு 3.5% உயர்த்­தப்­படவுள்ளது.

நீடித்த நிலைத்­தன்­மைக்கான சிங்­கப்­பூரின் கடப்­பா­டும் இந்த வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் வெளிப்­பட்­டது.

இவ்­வாண்­டின் வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தின்­கீழ் கொவிட்-19 பொது சுகா­தார செல­வு­க­ளுக்­காக இருப்பு நிதி­யி­லி­ருந்து $6 பில்­லி­யன் பெற அதி­ப­ரி­டம் கொள்கை அள­வில் ஒப்­பு­தல் பெறப்­பட்­டுள்­ளது.

கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக கொவிட்-19 நோய்ப் பர­வல் சூழ­லைச் சமா­ளிக்க இருப்பு நிதி­யி­லி­ருந்து $52 பில்­லி­யன் பெற அதி­ப­ரி­டம் ஒப்­பு­தல் பெறப்­பட்­டது. ஆனால் அதி­லி­ருந்து இது­வரை $42.9 பில்­லி­யன் மட்­டுமே தேவைப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அமைச்­சர் வோங் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், என்று பிர­த­மர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் வரவுசெலவுத் திட்டம் பற்றி கருத்து உரைத்துள்ளார்.

பசு­மை­யான, நீடித்து நிலைக்­கத்­தக்க நகரை உரு­வாக்கி வரு­கி­றோம். சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு நல்ல வேலை­களை உரு­வாக்க நமது பொரு­ளி­யலை உரு­மாற்றி வரு­கி­றோம். இத்தகைய நீண்­ட­கால இலக்­கு­களை அடைய நம்­ப­க­மான, போது­மான வரு­வாய் அர­சாங்­கத்­திற்­குத் தேவை. அதற்கு வர­வு­செ­ல­வுத் திட்­டம் 2022 அடித்­த­ளம் அமைக்­கும். இத்­திட்­டத்­திற்கு அனைத்து சிங்­கப்­பூ­ரர்­களும் ஆத­ரவு தர வேண்­டு­மெ­னக் கேட்­டுக்­கொள்­கி­றேன்.
லீ சியன் லூங்
சிங்கப்பூர் பிரதமர்

முக்கிய அம்சங்கள்

♦ 2023, 2024ஆம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக பொருள், சேவை வரி 7 விழுக்காட்டில் இருந்து 9 விழுக்காடாக உயர்த்தப் படவிருக்கிறது

♦ பொருள், சேவை வரி அதிகரிப்பை ஈடுசெய்ய $6.6 பில்லியன் மதிப்பிலான உத்தரவாதத் தொகுப்புத் திட்டம்

♦ $560 மில்லியன் மதிப்பிலான குடும்பங்களுக்கான ஆதரவுத் திட்டம்

♦ படிப்படியான சம்பள உயர்வு முறை மேலும் பல துறைகளுக்கு விரிவாக்கம்

♦ புதிய எம்பிளாய்மண்ட் பாஸ், எஸ்-பாஸ் விண்ணப்ப தாரர்களுக்குக் குறைந்தபட்ச தகுதி ஊதியம் அதிகரிப்பு

♦ சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உற்பத்தித் திறன் தீர்வுகள் மானியமாக நாலாண்டுகளுக்கு $600 மி.

♦ $500 மில்லியன் மதிப்பிலான வேலை, தொழில் ஆதரவுத் தொகுப்புத் திட்டம்

♦ பணி ஓய்வுக்காலத்திற்கான மத்திய சேமநிதி அடிப்படைத் தொகை ஐந்தாண்டுகளுக்கு ஆண்டிற்கு 3.5% உயரும்

♦ வருமானம் ஈட்டுவோரில் முதல் 1.2% விழுக்காட்டினருக்கு வருமான வரி விகிதம் அதிகரிப்பு

♦ அனைத்துலக விமானத்துறை மையம் எனும் நிலையைத் தக்க வைக்க விமானத்துறை ஆதரவுத் திட்டம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!