வெளிநாட்டு ஊழியர்களுக்கு கட்டாய அடிப்படைச் சுகாதாரப் பராமரிப்புத் திட்டம் அறிமுகம்

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து, தங்குவிடுதிகளில் வசிக்கும் அல்லது கட்டுமானம், கடல்துறை, செய்துறை ஆகிய துறைகளில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவர்களது முதலாளிகள் அடிப்படை சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தை வாங்கித்தர வேண்டும்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலை அனுமதியின் ஒரு பகுதியாக இது கட்டாயமாக்கப்படும்.

எஸ்-பாஸ் அனுமதி, வொர்க் பர்மிட் எனப்படும் வேலை அனுமதிச் சீட்டு ஆகியவற்றுக்கு புதிதாக விண்ணப்பம் செய்யும்போதும் அவற்றைப் புதுப்பிக்கும்போதும் இத்திட்டத்தைக் கட்டாயம் வாங்கி இருக்க வேண்டும்.

மனிதவள அமைச்சு சனிக்கிழமை (பிப்ரவரி 19) அன்று இதைத் தெரிவித்தது.

அடிப்படை சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தின் ஆண்டுக் கட்டணம், $108 முதல் $138 வரை இருக்கும். மாதாந்திரக் கட்டணமாகவும் அதைச் செலுத்தலாம்.

இப்பிரிவுகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் பெரும்பாலான அடிப்படைச் சுகாதாரத் தேவைகளுக்கு ஆகும் செலவுகளை இந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளும்.

வேலை அனுமதி விண்ணப்பத்துக்கான மருத்துவப் பரிசோதனைகள், ஆண்டுதோறும் மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைகள், நேரடி மருத்துவ ஆலோசனை, மருத்துவ சிகிக்சைகள், தொலைபேசிவழி மருத்துவச் சேவைகள் போன்றவற்றின் செலவுகளை இந்தத் திட்டம் ஈடுகட்டும்.

வெளிநாட்டு ஊழியர்களும் மருத்துவச் சேவைகளைப் பயன்படுத்தும்போது ஒரு சிறு தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்.

அடிப்படைப் பராமரிப்புத் திட்டம் பற்றிய விவரங்கள்:

முதலாளிகள் திட்டத்தை வாங்கிய பின்னரே தகுதிபெற்ற, புதிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு, எஸ்-பாஸ் வொர்க் பர்மிட் அனுமதி வழங்கப்படும்.

வேலை அனுமதியைப் புதுப்பிக்கும் அல்லது வேறு நிறுவனங்களுக்கு மாறும் இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கும் திட்டம் முதலில் வாங்கப்பட்டிருக்க வேண்டும்.

சிங்கப்பூரில் தற்போது பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் இந்தத் திட்டத்தில் இடம்பெற்றிருந்தால், வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்கு முன்னதாக அவர்களுக்கு அடிப்படை சுகாதார பராமரிப்புத் திட்டம் இருக்கவேண்டும்.

அந்த தேதிக்குப் பின்னர்தான் அவர்களின் வேலை அனுமதி புதுப்பிக்கப்படும் என்றபோதும் இது பொருந்தும்.

தங்கள் உடல்நலன் பற்றிய பொறுப்பை வெளிநாட்டு ஊழியர்களிடம் ஏற்படுத்த, அவர்கள் மருத்துவ நிலையத்துக்கு ஒவ்வொரு முறை செல்லும்போது $5 தொகையை இணைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

தொலைபேசி வழி மருத்துவச் சேவைகளைப் பெறும்போது அவர்கள் $2 செலுத்த வேண்டும் என்று மனிதவள அமைச்சு கூறியது.

முதல் கட்டமாக சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர், 300,000 பேர், இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவார்கள் என்று மனிதவள அமைச்சு கூறியது.

கொவிட்-19 காலகட்டத்தில் தங்குவிடுதிகளிலும் பலர் கூடி வாழும் வசிப்பிடங்களிலும் கிருமிப்பரவல் அதிகமாக இருந்ததை அடுத்து, திட்டம் பற்றி கடந்த ஆண்டு நவம்பரில் அறிவிக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான மருத்துவ நிலையங்கள்:

அடிப்படை மருத்துவச் சேவைகளை அணுகும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இந்தத் திட்டம் கூடுதல் மன நிம்மதி அளிக்கும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.

செயிண்ட் ஆன்ட்ரூஸ் வெளிநாட்டு ஊழியர் மருத்துவ நிலையத்துக்கு சனிக்கிழமை வருகை தந்த அமைச்சர் இத்திட்டம் பற்றி கருத்துரைத்தார்.

இந்தத் திட்டம் மருத்துவச் செலவுக;ள் பற்றி முதலாளிகளுக்கு தெளிவைத் தரும். எதிர்பாராத மருத்துவச் செலவுகளுக்கு எதிராக அவர்களைப் பாதுகாக்கும் என்றார் அவர்.

சிங்கப்பூரின் வெவ்வேறு வட்டாரங்களில் அமைக்கப்படும் ஆறு மருத்துவ நிலையங்களுள் முதலில் திறக்கப்பட்டுள்ள நிலையம் அதுவாகும்.

இந்த நிலையங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வெளிநோயாளி சிகிச்சை வழங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!