விடாமல் குண்டு மழை பொழியும் ரஷ்யா

எது நடக்­கக்­கூ­டாது என்று உலக நாடு­கள் நினைத்­த­னவோ அது நடந்­து­விட்­டது.

நீண்­ட­நாள் பதற்­ற­நி­லைக்­குப் பிறகு உக்­ரேனை ரஷ்யா நேற்று தாக்­கத் தொடங்­கி­யது. எப்­ப­டி­யா­வது ரஷ்ய அதி­பர்

விளா­டி­மிர் புட்­டி­னின் மனதை மாற்றி, பேர­ழி­வைத் தவிர்த்­து­வி­ட­லாம் என்ற எதிர்­பார்ப்­பு­டன் இருந்த உலக நாடு­கள் அதிர்ச்சி யில் உறைந்­துள்­ளன.

தொடங்கிய சில மணி நேரத்திலேயே பல­ரின்

உயி­ரைப் பறித்­துவிட்ட இந்தக் கடு­மை­யான மோதல் எங்கு போய் முடியுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

உக்­ரே­னின் கிழக்­குப் பகுதி யில் ரஷ்ய ஆத­ரவு பிரி­வி­னை­வா­தி­க­ளுக்கு ஆத­ர­வா­கச் சிறப்பு ராணுவ நட­வ­டிக்­கை­யைத் தொடங்­கு­வ­தாக அதி­பர் புட்­டின் தொலைக்­காட்­சி­யில் தோன்றி அறி­வித்­ததை அடுத்து, வன்­முறை கட்­ட­விழ்க்­கப்­பட்­டது. உக்­ரே­னின் பல பிர­தான நக­ரங்­களில் குண்டு மழை பொழிந்­த­தில் உக்­ரே­னிய

மக்­கள் பலர் தங்­கள் நாட்­டை­விட்டு வெளி­யே­று­கின்­ற­னர்.

வான்­வ­ழித் தாக்­கு­தல்­க­ளை­யும் நில­வ­ழித் தாக்­கு­தல்­க­ளை­யும் ரஷ்யா தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக உக்­ரேன் தெரி­வித்­தது. அத்­து­டன் ரஷ்­யா­வின் சில படைப் பிரி­வு­கள் கடல்­வ­ழி­யா­க­வும் சென்று உக்­ரே­னின் தெற்­குப் பகு­தி­களை அடைந்­தி­ருப்­ப­தாக தக­வல் வெளி­யா­னது.

"சிறப்பு ராணுவ நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள நான் முடி­வெ­டுத்­துள்­ளேன். உக்­ரே­னிய அர­சாங்­கத்­தின் அடக்­கு­மு­றை­யால் கடந்த எட்டு ஆண்டு களா­கச் சொல்­லில் அடங்­காத துன்­பு­றுத்­தல்­க­ளுக்­கும் இன அழிப்­புக்­கும் ஆளா­கி­யி­ருக்­கும் மக்­க­ளைத் தற்­காப்­பதே இந்த சிறப்பு ராணுவ நட­வ­டிக்­கை­யின் நோக்­க­மா­கும்.

"இந்த இலக்கை அடைய உக்­ரே­னின் ராணு­வத்தை நாங்­கள் வீழ்த்­து­வோம். அதை­ய­டுத்து, ரஷ்­யர்­கள் உட்­பட அப்­பாவி பொது­மக்­க­ளுக்கு எதி­ரா­கப் பல கொடு­மை­க­ளைப் புரிந்த உக்­ரே­னி­யத் தலை­வர்­களை நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­து­வோம்.

"உக்­ரே­னுக்­குச் சொந்­த­மான நிலப் பகு­தி­க­ளைக் கைப்­பற்­று­வது ரஷ்­யா­வின் நோக்­க­மல்ல," என்­றார் அதி­பர் புட்­டின். தனக்கு அடங்கி நடக்க யாரையும் ரஷ்யா வற்­பு­றுத்தாது என்று அவர் கூறி­னார்.

ஆனால் உக்­ரே­னிய அர­சாங்­கத்­துக்­கும் ரஷ்­யா­வுக்­கும் இடை­யி­லான இந்த மோத­லில் வேறு யாரா­வது தலை­யிட நினைத்­தால் வர­லாறு காணாத விளை­வு­களை எதிர்­நோக்க வேண்டிவரும் என்று அதி­பர் புட்­டின் எச்­ச­ரிக்கை விடுத்­தார்.

உக்­ரே­னி­ட­மி­ருந்து பிரிந்­து செல்ல டொனெக்ஸ், லுஹான்ஸ்க் பகு­தி­யில் பிரி­வி­னை­வா­தி­கள் போரிட்டு வரு­கின்­றனர். இந்­தப்

பகு­தி­யைச் சேர்ந்த மக்­களை உக்­ரே­னிய அர­சாங்­கம் கொடு­மைப்

படுத்­தி­ய­தாக அதி­பர் புட்­டின் தெரி­வித்­தார்.

இந்த இரண்டு பகு­தி­களும் உக்­ரே­னைச் சேர்ந்­த­வை­யல்ல என்­றும் அவை தனி­நா­டு­கள் என்றும் ரஷ்யா அங்­கீ­க­ரிப்­ப­தாக திரு புட்­டின் அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்­தார்.

இதற்­கி­டையே, ரஷ்யா நேற்று நடத்­திய தாக்­கு­த­லில் குறைந்­தது எட்டு பேர் மாண்­டு­விட்­ட­தாக உக்­ரே­னிய உள்­நாட்டு விவ­கார அமைச்சு தெரி­வித்­தது. பலர் காயம் அடைந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

நாட்­டின் உள்­கட்­ட­மைப்­பு­களை அழிக்­கும் இலக்­கு­டன் எதிரி முழு­வீச்­சு­டன் செயல்­பட்டு வரு­வ­தாக உக்­ரே­னிய அதி­பர் மாளிகை கூறி­யது.

ரஷ்­யப் படை­யி­னரை எதிர்த்து தனது ஆயு­தப் படை­கள் கடு­மை­யா­கப் போரிட்டு வரு­வ­தாக

உக்­ரே­னிய அர­சாங்­கம் கூறி­யது.

உக்­ரே­னிய நேரப்­படி நேற்று அதி­காலை தாக்­கு­தல் தொடங்­கி­யது. தலை­ந­கர் கியெவ்­வில் தொடர்ந்து பல ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டன. அனைத்­து­லக விமான நிலை­யத்­துக்கு அரு­கில் துப்­பாக்­கிச்­சூ­டும் நடந்­த­தாக ஊட­கங்­கள் தெரி­வித்­தன. நக­ரெங்­கும் எச்­ச­ரிக்கை ஒலி எழுப்­பப்­பட்­டது.

"உக்­ரே­னுக்கு எதி­ராக புட்­டின் போர் தொடுத்­துள்­ளார். ரஷ்­யப் படை­கள் முழு அள­வில் தாக்­கு­தல் நடத்­து­கின்­றன. இது­வரை உக்­ரே­னிய நக­ரங்­களில் அமை­தி­யான சூழல் நில­வி­யது. அதைச் சீர்

­கு­லைக்­கும் வகை­யில் ரஷ்யா போர் முரசு கொட்டி படை­களை அனுப்பி உள்­ளது," என்று உக்­ரே­னிய வெளி­யு­றவு அமைச்­சர் டிமிட்ரோ குலேபா டுவிட்­ட­ரில் பதி­விட்­டார்.

"எங்­க­ளுக்கு எதி­ராக ரஷ்யா வன்­மு­றை­யைக் கட்­ட­விழ்த்­துள்­ளது. எதி­ரிப் படை­களை எதிர்த்து நாங்­கள் போரிட்டு நாட்­டைத் தற்­காப்­போம். இதில் நாங்­கள் வெற்றி பெறு­வோம். புட்­டி­னின் இந்த மூர்க்­கத்­த­ன­மான செயல்­பாட்டை உலக நாடு­க­ளால் ஒன்­றி­ணைந்து தடுக்க முடி­யும். ரஷ்­யா­வைத் தடுத்து நிறுத்தி போரை முடி­வுக்­குக் கொண்­டு­வர இதுவே சரி­யான நேரம்," என்­றார் அவர்.

இதற்­கி­டையே, கிழக்கு ஐரோப்­பா­வில் நேட்டோ படை­க­ளின் விரி­வாக்­கத்தை நிறுத்த வேண்­டும் என்று ரஷ்யா தெரி­வித்­துள்­ளது. அமெ­ரிக்­க தலை­மை­யின்­கீழ் செயல்­படும் ராணு­வக் கூட்­ட­ணி­யில் உக்­ரே­னும் இடம்­பெ­று­வது ஏற்க முடி­யாத ஒன்று என்று அதி­பர் புட்­டின் தொடர்ந்து பல­முறை கூறி வரு­கி­றார்.

உக்­ரே­னிய மண்­ணைத் தள­

மா­கக் கொண்டு ரஷ்­யா­வுக்கு எதி­ராக நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்

­ப­டக்­கூ­டும் என்­றார் அவர்.

"நவீன உக்­ரே­னில் நில­வும் சூழல் ரஷ்­யா­வுக்கு எதி­ராக மிரட்டல்களாக உள்ளன. இத­னால் எங்­க­ளுக்­குப் பாது­காப்­பு­ணர்வு இல்­லா­மல் போய்­விட்­டது. இது எங்­கள் முன்­னேற்­றத்­துக்கு இடை­யூ­றாக உள்­ளது.

எனவே, தாக்­கு­த­லில் ஏற்­படும் உயிர்ச்­சே­தங்­க­ளுக்கு உக்­ரே­னிய அர­சாங்­கமே பொறுப்பு," என்று அதி­பர் புட்­டின் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், உக்­ரே­னில்

ரா­ணு­வச் சட்­டம் பிர­க­ட­னம் செய்­யப்­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னைத் தொலை­பேசி மூலம் தொடர்பு கொண்டு ரஷ்யா நடத்­தும் தாக்கு தல் பற்றி பேசி­விட்­ட­தாக உக்­ரே­னிய அதி­பர் வொலோ­டி­மி­யர் ஸெலென்ஸ்கி தெரி­வித்­தார்.

உக்­ரே­னிய எல்­லைப் பாது­காப்­புப் படை­யி­னரை ரஷ்ய ராணுவ வீரர்­கள் தாக்­கி­ய­தா­க­வும் நாட்­டின் ராணு­வக் கட்­ட­மைப்­பு­கள் மீது தாக்­கு­தல்­கள் நடத்­தப்­ப­டு­வ­தா­க­வும் உக்­ரே­னிய மக்­க­ளி­டம் அவர் காணொளி மூலம் கூறி­னார்.

ரஷ்­யா­வுக்கு எதி­ராக அனைத்­து­லக ஆத­ரவை அமெ­ரிக்கா திரட்டி வருவதாக திரு ஸெலென்ஸ்கி தெரி­வித்­தார். பதற்­றம் அடை­யா­மல், அமை­தி­யாக இருக்­கும்­படி உக்­ரே­னிய மக்­களை அவர் கேட்­டுக்­கொண்­டார்.

முடிந்­த­வரை வெளியே எங்­கும் செல்­லா­மல் வீட்­டி­லேயே இருக்­கு­மாறு அவர் தமது நாட்­டி­ன­ரி­டம் கூறி­னார். ரஷ்­யப் படை­க­ளுக்கு எதி­ராக உக்­ரே­னிய ராணு­வம் போரிட்டு வரு­வ­தா­க­வும் தற்­காப்­புத் துறை முழு­வீச்­சு­டன் செயல்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் உறுதி அளித்­தார். எதி­ரிப் படை­களை உக்­ரேன் முறி­ய­டிப்­பது உறுதி என்­றார் அவர்.

புட்­டின் எடுத்­துள்ள முடிவை சாடிய அமெ­ரிக்க அதி­பர்

இது ஒரு­பு­றம் இருக்க அதி­பர் புட்­டி­னின் செயல்­பா­டு­க­ளுக்கு அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் கடும் கண்­ட­னம் தெரி­வித்­தார்.

ரஷ்யா நடத்­தி­யுள்ள இந்த அநி­யா­ய­மான தாக்­கு­த­லுக்கு அமெ­ரிக்­கா­வும் அதன் நட்பு நாடு­களும் ஒன்­றி­ணைந்து பதி­லடி கொடுக்­கும் என்­றார் அவர்.

"பெரு­ம­ள­வி­லான உயி­ரி­ழப்பு, துன்­பம் ஆகி­ய­வற்றை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய போரை அதி­பர் புட்­டின் திட்­ட­மிட்­டுத் தொடங்­கி­யுள்­ளார். போரின் கார­ண­மாக ஏற்­படும் மர­ணங்­கள், பேர­ழி­வுக்கு ரஷ்யா மட்­டுமே பொறுப்பு," என்று அதி­பர் பைடன் கூறி­னார்.

பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் உட்­பட பல உல­கத் தலை­வர்­கள் ரஷ்யா நடத்­தும் தாக்­கு­த­லுக்­குக் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

ரஷ்­யா­வுக்கு எதி­ராக கூடிய விரை­வில் மேலும் பல தடை­கள் விதிக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!