செலென்ஸ்கி: கியவ் எங்கள் பிடியில் உள்ளது

தலை­ந­கர் கியவ் இன்­ன­மும் உக்­ரே­னின் பிடி­யில் இருப்­ப­தாக அந்­நாட்டு அதி­பர் வொலோ­ட­மி­யர் செலென்ஸ்கி கூறி­யுள்­ளார்.

"எதி­ரி­க­ளின் தாக்­கு­தல்­களை நாங்­கள் எதிர்­கொண்டு அவற்றை வெற்­றி­க­ர­மா­கத் தடுத்­துள்­ளோம். சண்டை தொடர்­கிறது," என்று சமூக வலைத்­தளங்­களில் காணொளி வாயி­லா­கத் திரு செலென்ஸ்கி தெரி­வித்­தார். ரஷ்யா, தம்­மைப் பிடித்து அதன் சார்­பில் ஒரு தலை­வரை நிய­மிக்க வரைந்த திட்­டத்­தில் இடை­யூ­று­கள் ஏற்­பட்­டுள்­ள­தாக அவர் கூறி­னார்.

ஆயு­தங்­களை இறக்­கி­வைக்­கா­மல் தொடர்ந்து தங்­க­ளின் நாட்­டிற்­கா­கப் போரா­டப் போவ­தாக திரு செலென்ஸ்கி குறிப்­பிட்­டார்.

கிய­வைத் தனது பிடிக்­குள் கொண்­டு­வ­ரும் விளிம்­பில் ரஷ்யா இருந்­தது. எனி­னும், அதற்கு பலத்த எதிர்ப்பு இருந்­த­தா­க­வும் ஆகக் கடைசி நில­வரப்­படி தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று ரஷ்ய ராணு­வம் உக்­ரேன் மீது படை­யெ­டுத்­தது. அதைத் தொடர்ந்து உக்­ரே­னின் பல நகரங்­கள் மீது ரஷ்யா ஆகா­ய­வெ­ளி­யி­லி­ருந்­தும் நிலத்­தி­லும் தாக்கு­தல்­களை நடத்தி வரு­கிறது.

கிய­வின் சாலை­களில் சண்டை மூண்­டி­ருப்­ப­தைத் தொடர்ந்து அந்­நகர வாசி­கள் வெளியே வரா­மல் இருக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­னர். கிய­வின் மையப் பகு­திக்கு அருகே இரண்டு ஏவு­க­ணை­கள் பாய்ச்சப்பட்டதாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தின் நிரு­பர் ஒரு­வர் தெரி­வித்­தார். அவற்­றில் ஓர் ஏவு­கணை கிய­வின் அனைத்­து­லக விமான நிலை­யத்­திற்கு அருகே விழுந்­த­தாக அவர் சொன்­னார்.

கியவை ரஷ்­யா­வி­டம் விட்­டுக்­கொ­டுக்­கா­மல் இருக்க உக்­ரேன் போரா­டி­வ­ரும் நிலை­யில் அந்­நாட்டின் இதர பகு­தி­கள் பல­வற்றை ரஷ்யா தனது பிடிக்­குள் கொண்டு­வரும் முயற்­சி­களைத் தீவி­ரப்­ப­டுத்­து­வ­தாக முன்­ன­தாக சில தக­வல்­கள் வெளி­யா­யின. எனி­னும், கியவை வென்று உக்­ரேன் அதி­பர் செலென்ஸ்­கி­யை­யும் அவ­ரது அர­சாங்­கத்­தை­யும் விலக்­கு­வதே ரஷ்­யா­வின் முக்­கி­யக் குறிக்­கோ­ளாக இருந்து வரு­கிறது.

படை­யெ­டுப்பு தொடங்கி முதல் இரண்டு நாள்­க­ளி­லேயே ரஷ்யா குறைந்­தது 200 ஏவு­க­ணை­களை உக்­ரே­னின் பல பகு­தி­களில் பாய்ச்சி­ய­தாக அமெ­ரிக்கா கணித்­துள்­ளது. உக்­ரே­னின் தென்­கி­ழக்­குப் பகு­தி­யில் உள்ள மெலிட்­டோப்­பல் நகரை ரஷ்யா கைப்­பற்­றி­ய­தாக ரஷ்­யா­வின் இன்­டர்­ஃபேக்ஸ் செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தி­ருந்­தது.

இந்­தப் பூச­லில் மூன்று பிள்­ளை­கள் உட்­பட இது­வரை குறைந்­தது 198 பேர் மாண்­டு­விட்­ட­தாக உக்­ரே­னின் சுகா­தார அமைச்­சர் தெரி­வித்­தார். 2,800 ரஷ்ய ராணுவ வீரர்­கள் மாண்­ட­தாக உக்­ரே­னின் தற்­காப்பு அமைச்சு கூறி­யது. எனி­னும், அதற்­கான ஆதா­ரம் எதையும் அது காட்­ட­வில்லை. இதன் தொடர்­பில் மாஸ்கோ தக­வல் ஏதும் தெரி­விக்­க­வில்லை.

இதற்­கி­டையே, 'சுவி­ஃப்ட்' எனும் நிதித் தக­வல் முறை­யிலிருந்து ரஷ்­யா­வைத் தடை­செய்­யும் முயற்­சி­களை எடுப்பது குறித்து அமெ­ரிக்கா ஆலோ­சித்து வரு­வதா­கக் கூறப்­படு­கிறது.

எனி­னும், அமெ­ரிக்­கா­வும் ஐரோப்­பிய ஒன்­றி­ய­மும் உடனே முடி­வெ­டுக்­காது என்­பது பல­ரின் எதிர்­பார்ப்பு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!