புட்டின் தப்புக்கணக்கு: பைடன் கடும் தாக்கு

உக்­ரேன் மீதான ரஷ்­யப் படை­யெ­டுப்பு ரஷ்ய அதிபர் விளா­டி­மிர் புட்­டி­னின் திட்­ட­மிட்ட செயல் என அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் கடுமையாகக் கூறியுள்ளார்.

ரஷ்­யப் படை­யெ­டுப்பு மீதான அமெ­ரிக்க ஒன்­றி­யத்­தின் நிலையை விளக்­கிய அவர், உக்­ரேன் மீது படை­யெ­டுத்­தால் மேற்­கத்­திய நாடு­கள் எவ்­வித ஆற்­றலை வெளிப்­ப­டுத்­தும் என்­பது குறித்து திரு புட்­டின் தப்­புக்­

க­ணக்­குப் போட்­டுவிட்டதாக் குறிப்­ பிட்­டார்.

செவ்­வாய்க்­கி­ழமை பிர­தி­நி­தி­கள் சபை­யில் அமெ­ரிக்க நிலைப்­பாடு தொடர்­பாக திரு பைடன் ஆற்­றிய முதல் உரை­யின்­போது குடி­ய­ர­சுக் கட்­சி­யி­ன­ரும் ஜன­நா­ய­கக் கட்­சி­யி­ன­ரும் உக்­ரே­னுக்கு ஆத­ர­வான முழக்­கங்­களை எழுப்­பி­னர். அவர்­களில் பல­ரும் உக்ேர­னிய கொடியை ஏந்தி இருந்­த­னர்.

திரு பைடன் தமது உரை­யில் ரஷ்ய அதி­ப­ரைக் கடு­மை­யா­கச் சாடினார்.

"படை­யெ­டுத்­தால் என்ன விளை­வு­கள் திரும்­பும் என்­ப­தைப் பற்றி திரு புட்­டின் யோசிக்­க­வில்லை.

"உக்­ரே­னுக்­குள் நுழைந்து­ விட்­டால் உலக நாடு­கள் துணைக்கு வரும் என அவர் நினைத்­தி­ருந்­தார். ஆனால் கற்­பனை செய்து பார்க்க இய­லாத அளவு வலுவான எதிர்ப்பை அவர் சந்­திக்க நேர்ந்தது. உக்­ரே­னிய மக்­க­ளின் ஒற்­று­மையை அவர் காண நேரிட்­டுள்­ளது. அதி­பர் ஸெலன்ஸ்கி முதல் ஒவ்­வோர் உக்­ரே­னிய குடி­ம­கனும் எதற்கும் அஞ்­சா­மல், துணிச்­ச­லு­டன், தீர்­மா­ன­மாக நிமிர்ந்து நின்று உல­கிற்கு உதா­ர­ண­மா­கத் திகழ்­கி­றார்­கள்.

"போரை நிறுத்­து­வ­தற்­கான முயற்­சி­களை திரு புட்­டின் புறக்­

க­ணித்­து­விட்­டார். அர­ச­தந்­திர யோச­னை­க­ளை­யும் அவர் நிரா­க­ரித்­து­விட்­டார். மேற்­கத்­திய நாடு­களும் நேட்­டோ­வும் ஒன்­றும் செய்­யாது என்று அவர் கரு­தி­விட்­டார். எங்­க­ளைப் பிரித்­து­வி­ட­லாம் என அவர் தவ­றாக நினைத்­து­விட்­டார். நாங்­கள் ஒன்­றி­ணைந்து தயா­ராக உள்­ளோம். ரஷ்­யப் பொரு­ளி­யல் தள்­ளா­டு­கிறது. அதற்கு திரு புட்­டின் மட்­டுமே கார­ணம்," என்று திரு பைடன் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!