உக்ரேன் தலைநகரில் அபாய சங்கு, அவசர கோரிக்கை; இரு நகர்களில் போர் நிறுத்தம்

உக்­ரே­னுக்­குள் ரஷ்­யப் படை­யினர் நுழைந்து 10 நாள்­கள் ஆன நிலை­யில், நேற்று தலை­ந­கர் கியவ்வைக் குறி­வைத்து தாக்­கு­தல்­கள் தொடங்­கி­ய­தற்­கான அறி­கு­றி­கள் தெரிந்­த­தாக தக­வல்­கள் குறிப்­பிட்­டன.

அதே­வே­ளை­யில், இரு உக்­ரே­னிய நகர்­களில் ரஷ்ய நேரப் படி முற்பகல் 10 மணி முதல் (சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்று பிற்­பகல் 3 மணி முதல்) தாக்­கு­தல் தற்காலிகமாக நிறுத்­தப்­படும் என்று ரஷ்யா அறி­வித்­தது.

மரி­ய­போல், வோல்­னோ­வாகா ஆகிய இரண்டு நகர்­க­ளுக்கு உணவு, மருந்­து­கள் செல்­வ­தற்குத் தோதாக மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யில் அங்கு போர் நிறுத்­தப்­பட்டு இருப்­ப­தாக ரஷ்­யா­வின் தற்­காப்பு அமைச்சை மேற்­கோள்­காட்டி இண்­டர்­ஃபேக்ஸ் நிறு­வ­னம் கூறியது.

அந்த நக­ரில் இருந்து பாது­காப்­பான வழி­கள் மூலம் மக்­கள் நேற்று வெளி­யே­றத் தொடங்­கினர். அங்­கி­ருந்து ஏறத்­தாழ 200,000 பேர் வெளி­யே­று­வார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

உக்­ரே­னின் தெற்கு கருங்­கடல் அருகே உள்ள இரண்டு முக்­கிய நகர்­களை ரஷ்­யப் படை­கள் கைப்­பற்றி இருக்­கின்­றன.

மரி­ய­போல் என்ற துறை­முக நகரை ரஷ்ய படை­கள் முற்­று­கை­யிட்டு இருக்­கின்­றன. உக்­ரே­னில் பல இடங்­க­ளை­யும் குறி­வைத்து ரஷ்யா தாக்கி வரு­கிறது. நூற்­றுக்­க­ணக்­கான குடி­மக்­கள் கொல்­லப்­பட்டுள்ளனர்.

ஐரோப்­பா­வின் ஆகப் பெரிய அணு­சக்தி ஆலை­யை­யும் ரஷ்­யப் படை­கள் தாக்கி உள்ளன.

தலை­ந­கர் கியவ்வை எப்­படி­யும் சுற்றி வளைத்து சூழ்ந்­து­விட வேண்­டும் என்­பதே ரஷ்­யா­வின் மிக முக்­கிய கவ­ன­மாக இருப்பதாக உக்­ரே­னிய ராணு­வம் தெரி­வித்­த ­நி­லை­யில், தலை­நகர் கியவ்­வில் அபாயச் சங்கு ஒலி கேட்­ட­தா­க­வும் அதற்கு முன்­ன­தாக சுமார் பன்னிரெண்டு குண்டு வெடிப்புச் சத்தங்கள் எழுந்­த­தா­க­வும் தக­வல்­கள் தெரி­வித்­தன.

பக்­கத்­தில் உள்ள பாது­காப்­பான இடங்களுக்குச் செல்­லும்­படி மக்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­னர்.

என்­றா­லும் அந்­தச் சத்­தங்­க­ளுக்­கான கார­ணங்­கள் உட­ன­டி­யாக உறு­தி­யா­கத் தெரி­ய­வில்லை என்று செய்தி நிறு­வ­னங்­கள் குறிப்­பிட்­டன. உயி­ரு­டற் சேதம் பற்­றிய தக­வல்­களும் இல்லை. தலை­ந­கர் கியவ் மீது இனி­மேல்­தான் பெரிய அள­வில் தாக்­கு­தலை ரஷ்யா தொடுக்­க­வி­ருக்­கிறது என்று கூறப்­ப­டு­கிறது.

இதனிடையே, பால்­டிக் கடல் மன்­றத்­தில் இருந்து ரஷ்­யா­வை­யும் பெல­ருஸ் நாட்­டை­யும் ஐரோப்­பிய ஒன்­றி­யம் தற்­கா­லி­க­மாக விலக்கி வைத்து இருக்­கிறது.

அதே வேளையில், வெளி­நா­டு­களில் இருந்து 66,200க்கும் மேற்­பட்ட உக்­ரே­னி­யர்­கள் ரஷ்­யாவை எதிர்த்து போரிட நாடு திரும்பி இருக்­கி­றார்­கள் என்று உக்­ரே­னிய தற்­காப்பு அமைச்­சர் நேற்று தெரி­வித்­தார். உக்­ரேன் வான்­வெ­ளி­யில் விமானத் தடையை அமல்­ப­டுத்த முடி­யாது என்று நேட்டோ தலை­வர்­கள் முன்­ன­தாக அறி­வித்­த­னர்.

இதை உக்­ரே­னிய அதி­பர் கடு­மை­யாக கண்­டித்­தார். இது மேலும் ரஷ்யத் தாக்குதல்களை அனுமதிப்ப தாகும் என்று அவர் குறைகூறினார்.

இந்­நி­லை­யில், ஃபேஸ்புக்­குக்கு ரஷ்யா தடை விதித்­தது. டுவிட்­டர், யூடி­யூப்­பை­யும் அது தடுத்து இருப்­ப­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

உக்­ரே­னில் ஐரோப்­பா­வின் ஆகப் பெரிய அணு­சக்தி உலை மீது ரஷ்யா மூர்க்­கத்­த­ன­மாக தாக்­கு­தல் தொடுத்ததாக ஐநா பாது­காப்பு மன்ற அவ­சர கூட்­டத்­தில் அமெ­ரிக்கா குறை கூறி­யது.

நல்­ல­வே­ளை­யாக, அணு உலை உடைந்து பேர­ழிவு ஏற்­ப­ட­வில்லை என்று அந்த மன்­றத்­திற்­கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கூறி­னார்.

அந்த ஆலையைக் குண்டு­போட்டு தாக்கி ரஷ்­யப் படை­கள் கைப்­பற்­றி­விட்­டன. அத­னால் மர­ணங்­களும் காயங்­களும் ஏற்­பட்­ட­தாக உக்­ரேன் கூறி­யுள்­ளது. அதை ரஷ்யா மறுத்­துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!