மற்றொரு துறைமுகம் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா ஆயத்தம்: உக்ரேனிய அதிபர்

உக்ரேனின் ஒடெசா (Odessa) துறைமுக நகரில் ரஷ்யப் படைகள் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்த ஆயத்தமாகி வருவதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.

“இது ஒரு போர்க் குற்றமாகும். இது வரலாற்றுக்குரிய குற்றமாகும்,” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 6) கூறினார்.

பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதைத் தொடர்ந்து, தென் உக்ரேனை ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்து வருகின்றன. கெர்சன் நகரைக் கைப்பற்றிய அவை, மரியபூல் துறைமுக நகரை முற்றுகையிட்டுள்ளன. இதுவரை விட்டுவைக்கப்பட்டுள்ள ஒடெசா துறைமுகம் மீது அவற்றின் கவனம் திரும்பியுள்ளது.

ஒடெசாவில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் வசிக்கின்றனர்.

ரஷ்யாவின் படையெடுப்பால் இதுவரை பல்வேறு உக்ரேனிய நகர்களில் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. உக்ரேன்-ரஷ்யா போரால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடிமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கணித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!