சிகிச்சை நிலையங்கள் மீது தாக்குதல்

உக்­ரே­னில் பல சுகா­தாரப் பரா­ம­ரிப்பு நிலையங்­கள் தாக்­கப்­பட்டு இருக்­கின்­றன என்பதை உலக சுகா­தார நிறு­வ­னம் உறு­திப்­படுத்­தி­யது.

அந்­தத் தாக்­கு­தல் கார­ண­மாக பலர் மர­ண­ம­டைந்­து­விட்­டார்­கள், காய­ம­டைந்­து­விட்­டார்­கள் என்று அந்த நிறு­வ­னத்­தின் தலை­வர் டெட்­ரோஸ் அதா­னோம் டுவிட்­டரில் நேற்று தெரி­வித்­தார்.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் மீது அல்­லது அத்­த­கைய நிலை­யங்­க­ளின் ஊழி­யர்­கள் மீது தாக்­கு­தல் நடத்­து­வது அனைத்­து­லக மனி­தா­பி­மான சட்­டங்­க­ளுக்கு எதி­ரா­னது என்று அவர் தெரி­வித்­தார்.

இருந்­தா­லும் ரஷ்­யா­வின் பெயரை அவர் குறிப்­பி­ட­வில்லை.

இந்­நி­லை­யில், உக்­ரே­னில் பொது­மக்­கள் அதி­கம் வாழும் பகு­தி­க­ளைக் குறி­வைத்து ரஷ்­யப் படை­யி­னர் தாக்கி வரு­வ­தாக நேற்று பிரிட்­டன் வேவுத்­துறை குறிப்­பிட்­டது.

ஆனால் உக்­ரேன் எதிர்ப்பு கார­ண­மாக ரஷ்யா வேக­மாக முன்­னேற முடி­ய­வில்லை என்று அது தெரி­வித்­தது.

இதற்­கி­டையே, உக்­ரே­னில் கடு­மை­யான எதிர்ப்பை எதிர்­நோக்­குவதோடு உலக நாடு­ க­ளின் பல்­வேறு தடை­க­ளை­யும் சமா­ளிக்க முடி­யா­மல் ரஷ்யா திணறி வரு­கிறது என்றா லும் உக்­ரேனின் எதிர்­கா­லம் கேள்­விக்­குறி­தான் என்று அந்த நாட்டின் அதி­பர் புட்டின் மிரட்­டல் விடுத்­தார்.

"உக்­ரே­னிய அதி­கா­ரி­கள் இப்­போது செயல்­ப­டு­வ­தைப் போலவே தொடர்ந்து செயல்­பட்­டால் உக்­ரே­னின் எதிர்­கா­லத்தை அவர்­கள் கேள்­விக்­கு­றி­யாக்கி விடு­வார்கள்.

"இதை அவர்­கள் புரிந்­து­கொள்ள வேண்டும்," என்று அதி­பர் புட்­டின் மிரட்டல் விடுத்­தார். கருங்­க­டல் பகு­தி­யில் உள்ள மரி­ய­போல் என்ற துறை­முக நக­ரத்தை ரஷ்யா முற்றுகை­ யிட்டு இருக்­கிறது. அந்த நக­ரத்­திற்கு மனி­தா­பி­மான உத­வி­கள் செல்­வ­தற்­கும் அங்­கி­ருந்து மக்­கள் வெளி­யே­று­வ­தற்­கும் தோதாக தற்­கா­லிகப் போர் நிறுத்­தம் அறி­விக்­கப்­பட்­டது.

ஆனால் அந்­தப் போர் நிறுத்­தம் சரி­வர நடப்­புக்கு வர­வில்லை. இந்த நிலை­யில், அதி­பர் புட்­டி­னின் மிரட்­டல் இடம்­பெற்று இருக்­கிறது. இந்­தச் சூழ­லில், உக்­ரே­னில் ரஷ்ய படை­க­ளுக்கு எதி­ராக பயன்­ப­டுத்த போர் விமா­னங்­களை அனுப்­பும் சாத்­தி­யம் பற்றி போலந்­து­டன் தான் பேசி வரு­வ­தாக அமெ­ரிக்கா தெரி­வித்­தது.

அதோடு மட்­டு­மின்றி, நேட்டோ அமைப்பின் இதர நாடு­க­ளு­டன் அது பற்றி தான் ஆலோ­சித்து வரு­வ­தா­க­வும் வெள்ளை மாளிகை கூறி­யது.

உக்­ரே­னுக்கு போர் விமா­னங்­களை அனுப்­பும் யோச­னையை நேட்டோ அமைப்பைச் ேசர்ந்த பல கிழக்கு ஐரோப்பிய நாடு­கள் நிரா­க­ரித்­து­விட்­டன.

ஆனா­லும் சனிக்­கி­ழமை அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டன் காணொளி மூலம் பேசிய உக்­ரே­னிய அதி­பர் செலென்ஸ்கி, ரஷ்ய தயா­ரிப்பு விமானங்­களைத் தன் நாட்­டிற்கு அனுப்­பும்படி கிழக்கு ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு அவ­ச­ர­ வேண்டு­கோள் விடுத்­தார்.

இவ்­வே­ளை­யில், உக்­ரே­னின் ஆகப் பெரிய துறை­முக நக­ரான ஒடெ­சாவை தாக்க ரஷ்ய படை­கள் ஆயத்­த­மாகி வரு­வ­தா­க­வும் அதிபர் செலென்ஸ்கி நேற்று தெரி­வித்­தார்.

அப்­படி தாக்­கி­னால் அது ஒரு போர் குற்­றம் என்று தொலைக்­காட்­சி­யில் அவர் குறிப்­பிட்­டார். உக்ரேனில் மத்திய மேற்குப் பகுதி தலைநகர் வின்னிட்சியாவின் விமான நிலையத்தை ரஷ்யா முற்றிலும் அழித்துவிட்ட தாக உக்ரேன் அதிபர் கூறினார்.

­பக்கம் 5,6,7,8ல் மேலும் செய்­தி­கள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!