சிங்கப்பூர் பதிவு கப்பல்களுக்கு எச்சரிக்கை

கருங்கடல், ஆசோவ் கடலில் உக்ரேன், ரஷ்ய பகுதிகள் வழியாக செல்லும் சிங்கப்பூரில் பதிவான கப்பல்களுக்கு, அங்கு சூழ்நிலை பாதகமாக இருக்கும்பட்சத்தில் அந்தப் பகுதியைத் தவிர்த்துக் கொள்ளும்படி ஆலோசனை கூறப்பட்டு இருக்கிறது.

சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் இவ்வாறு தெரிவித்ததாக நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப் பிட்டது. ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் செல்லும் கப்பல் கள் முக்கியமாக கருங்கடல், ஆசோவ் கடல் பகுதிகளைப் பயன்படுத்துகின்றன.

கருங்கடலுக்கு வடக்கே உக்ரேனும் வடகிழக்கே ரஷ்யாவும் இருக்கின்றன. ஆசோவ் கடலை கருங்கடலுடன் கெர்ச் நீரிணை இணைக்கிறது.

உக்ரேன் மீது நிலம், நீர், ஆகாயம் வழி படை எடுத்து இருக்கும் ரஷ்யா, கருங்கடல் துறைமுக நகரான கெர்சனை கைப்பற்றி இருக்கிறது.

கருங்கடல், ஆசோவ் கடற்பகுதியைப் பயன்படுத்தும் கலன்களின் பாதுகாப்பு பற்றி விவாதிக்க மார்ச் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் அவசர கூட்டத்தை நடத்தப்போவதாக அனைத்துலக கடல்துறை நிறுவனம் அறிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!