'விதிமுறைகளைக் கடுமையாக்க எம்பிளாய்மண்ட் பாஸ் விண்ணப்பமுறை மாற்றப்படவில்லை'

சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பும் அதிக சம்பளம் பெரும் வெளிநாட்டு நிபுணர்களை மதிப்பீடு செய்யும் புதிய புள்ளிகள்-சார்ந்த திட்டம், சிங்கப்பூர் விதிமுறைகளைக் கடுமையாக்க அவை மாற்றிக் கொண்டிருக்கிருக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடக்கூடாது.

மனிதவள அமைச்சர் டான் சீ லெங் திங்கட்கிழமை (மார்ச் 7) அன்று நாடாளுமன்றத்தில் இவ்வாறு கூறினார்.

மாறாக, எம்பிளாய்மண்ட் பாஸ் எனும் வேலை அனுமதி அட்டை வைத்திருப்போரை சிங்கப்பூர் வரவேற்கிறது என்பதை உணர்த்துவதே சென்ற வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்பட்ட "காம்பஸ்" எனப்படும் அந்தத் திட்டத்தின் குறிக்கோள் என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் அத்தகையோர் , சிங்கப்பூரின் பொருளாதாரத்தை உயர்த்த உதவுகின்றவர்களாகவும், ஊழியர் அணியை வலுப்படுத்துபவர்களாகவும் இருக்கவேண்டும் என்றார் அவர்.

வரவு செலவு திட்டத்தில் மனிதவள அமைச்சின் ஒதுக்கீடு குறித்த விவாதத்தின்போது டாக்டர் டான் பேசினார்.

2023ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து நடப்புக்கு வரும் காம்பஸ் திட்டம் பற்றி பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

"காம்பஸ்" திட்டத்தின்கீழ் புதிய எம்பிளாய்மண்ட் பாஸ் வேலை அனுமதி பெற குறைந்தது 40 புள்ளிகள் எடுக்க வேண்டும்.

மதிப்பீட்டு முறையின் இரண்டு கட்டங்களில் ஒன்று குறைந்தபட்ச சம்பளம்.

மேலும், நிபுணரின் கல்வித்தகுதிகள், அவரை வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்தில் பலவிதமான ஊழியர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார்களா உள்ளிட்ட கூறுகளும் மதிப்பிடப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!