ரஷ்யா மனிதாபிமான போர் நிறுத்த அறிவிப்பு; சித்து வேலை என உக்ரேன் நிராகரிப்பு

உக்­ரே­னில் மனி­தா­பி­மான அடிப்­படை­யில் தாக்­கு­தலை நிறுத்தி மக்­கள் வேறு இடங்­க­ளுக்­குச் செல்ல அனு­ம­திக்­கப் போவ­தாக ரஷ்யா அறி­வித்ததை முற்­றி­லும் மோச­மான செயல் என்று சொல்லி உக்­ரேன் நிரா­க­ரித்­து­விட்­டது.

உக்­ரே­னிய மக்­கள் பல நகர்­களில் இருந்­தும் வெளி­யேறி பெல­ாரஸ் அல்­லது ரஷ்­யா­வுக்கு செல்­லும் வகையில் போர் நிறுத்­தம் செய்­யப்­படும் என்று ரஷ்யா முன்­ன­தாக அறி­வித்து இருந்­தது. இது நியா­ய­மற்ற சித்து வேலை என்று கூறி உக்­ரேன் நிரா­க­ரித்­தது.

உக்­ரே­னிய குடி­மக்­கள் உக்­ரேனிய நிலப்­ப­குதி வழி­யாக வெளியேற அனு­ம­திக்­கப்­பட வேண்­டும் என்று அந்த நாட்­டின் அதி­ப­ர் ஆலோ­ச­கர் ஒலக்சி கூறி­னார்.

பொது­மக்­களை வெளி­யேற்­று­வதற்கு முன்­ன­தாக இடம்­பெற்ற முயற்­சி­களை ரஷ்யா வேண்­டு­மென்றே தடை செய்­து­விட்­டது என்று அவர் கூறி­னார்.

உக்­ரேன் தலை­ந­கர் கியவ், துறைமுக நகர் மரி­ய­போல், கார்­கிவ், சுமி ஆகிய நகர்­களில் இருந்து பொது­மக்­கள் பெலாரஸ் அல்­லது ரஷ்­யா­ வழியாக வெளி­யேற வழி ஏற்­படுத்­தித் தரப்­படும் என்று ரஷ்யா தெரி­வித்து இருந்­தது.

ஆனால் அந்­தப் பகு­தி­களில் அண்­மைய நாள்­களில் ரஷ்யா கடு­மை­யான தாக்­கு­தலை நடத்தி இருக்­கிறது என்­பதை அந்த ஆலோ­ச­கர் சுட்­டிக்­காட்­டி­னார். ரஷ்­யா­வின் இந்த மானி­தா­பி­மான அறி­விப்பு ஒத்து வராத ஒன்று என்­றார் அவர்.

இத­னி­டையே, ரஷ்­யா­வு­டன் நடத்தி வரும் பேச்­சில் தன்­னு­டைய எல்­லையை உக்­ரேன் விட்டு கொடுக்­காது என்­றும் ஆனா­லும் நேட்டோ சாராத ஒரு ஏற்­பாடு பற்றி விவா­திக்க தான் தயார் என்­றும் உக்­ரேன் தெரி­வித்­த­தாக தக­வல்­கள் கூறின.

இவ்­வே­ளை­யில், இந்­தி­யப் பிர­தமர் நரேந்­திர மோடி, உக்­ரேன், ரஷ்ய அதி­பர்­க­ளு­டன் தொடர்­பு­கொண்டு நேற்று பேசி­னார்.

ரஷ்­யா­வுக்­கும் உக்­ரே­னுக்­கும் இடை­யே இப்­போது நடக்­கும் பேச்சு ­வார்த்­தைக்கு மேலாக உக்­ரே­னிய அதி­ப­ரு­டன் நேர­டி­யா­கப் பேசும்­படி ரஷ்ய அதி­பரை திரு மோடி வலி­யு­றுத்­திக் கேட்­டுக்­கொண்­டார்.

திரு மோடி, ரஷ்ய அதி­ப­ரு­டன் ஏறத்­தாழ 50 நிமி­டங்­கள் பேசி­னார். உக்­ரே­னிய அதி­ப­ரு­டன் அவர் 35 நிமி­டங்­கள் பேசி­னார்.

இந்­நி­லை­யில், உக்­ரே­னுக்கு ராணுவ விமா­னங்­களை வழங்­கு­மா­றும் ரஷ்­யா­வின் எண்­ணெய் மற்­றும் எண்­ணெய் சார்ந்த பொருள்­களைப் புறக்­க­ணிக்­கு­மா­றும் உக்­ரே­னிய அதி­பர் செலென்ஸ்கி அனைத்­து­லக சமூ­கத்­திற்குக் கோரிக்கை விடுத்­தார்.

இத­னி­டையே, உக்­ரே­னிய தலை­ந­கர் கியவ்­வுக்கு அருகே உள்ள கோஸ்­தோ­மல் என்ற நகரின் மேயரை ரஷ்­யப் படை­கள் கொன்று­விட்­ட­தாக அந்த நக­ரம் ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தது.

யூரி இல்­லிச் என்ற அந்த மேயரும் மற்ற இரண்டு பேரும் பசி­யு­டன் கிடந்த மக்­க­ளுக்கு ரொட்டி­யை­யும் மருந்­து­க­ளை­யும் வழங்­கிக்கொண்டு இருந்­த­போது ரஷ்ய தரப்­பி­னர் அவர்­களைச் சுட்டுக்கொன்­று­விட்­டார்­கள் என்று அந்த நக­ரம் கூறி­யது.

மற்றொரு நிலவரத்தில், உக்­ரே­னில் ராணுவத் தாக்­கு­தல்­களை நிறுத்துமாறு ரஷ்­யா­வுக்கு உட­னடி­யாக உத்­த­ர­வி­டும்­படி கேட்டு உலக நீதி­மன்­றத்­தில் உக்­ரேன் தொடுத்­திருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்­தது. ஆனால் ரஷ்ய தரப்­பில் யாரும் அதில் முன்­னிலை­யா­க­வில்லை.

இவ்­வே­ளை­யில், அமெ­ரிக்கா, சிங்­கப்­பூர் உள்­ளிட்ட தோழ­மை­யற்ற நாடு­க­ளைச் சேர்ந்த நிறு­வனங்­கள், தனிப்­பட்­ட­வர்­க­ளு­டன் தொழில் ரீதி­யான உடன்­பா­டு­களைச் செய்துகொள்ள ரஷ்ய அரசு ஆணை­யத்­தின் அங்­கீ­காரத்­தைப் பெற வேண்­டும் என்று ரஷ்யா நேற்று தெரி­வித்­தது.

பக்கம் 7,8ல் மேலும் செய்தி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!