ரஷ்யா-உக்ரேன் பேச்சுவார்த்தையில் சற்று முன்னேற்றம்; ஆறு பகுதிகளில் 12 மணி நேர போர்நிறுத்தம்

உக்­ரே­னு­ட­னான சண்­டையை முடி­விற்­குக் கொண்­டு­வ­ரு­வது தொடர்­பில், அந்­நாட்­டு­ட­னான பேச்­சு­வார்த்­தை­யில் சற்று முன்­னேற்­றம் ஏற்­பட்டுள்­ள­தாக ரஷ்யா தெரி­வித்­து உள்­ளது.

உக்­ரேன், ரஷ்ய அதி­கா­ரி­கள் பெல­ருஸ்-போலந்து எல்­லை­யில் சந்­தித்­துப் பேசி­னர்.

மூன்று சுற்­றுப் பேச்­சு­வார்த்தை முடிந்த நிலை­யில், பொது­மக்­களை வெளி­யேற்ற ஏது­வாக மனி­தா­பி­மான போர் நிறுத்­தம் குறித்து நான்­காம் சுற்­றுப் பேச்சு கவ­னம் செலுத்­தும் என்று ரஷ்ய வெளி­யு­றவு அமைச்­சின் பேச்­சா­ளர் மரியா ஸக்­க­ரோவா குறிப்­பிட்­டார்.

உக்­ரேனை ஆக்­கி­ர­மிக்­கவோ அந்­நாட்டு அர­சைத் தூக்­கி­யெ­றி­யவோ ரஷ்யா நோக்­கம் கொண்­டி­ருக்­க­வில்லை என்­றும் ரஷ்­யப் படை­களை உக்­ரே­னிய மக்­க­ளுக்கு எதி­ராக ஏவி­வி­ட­வில்லை என்­றும் அவர் சொன்­னார்.

உக்­ரேனை நாஸிக்­க­ளின் கட்­டுப்­பாட்­டில் இருந்து விடு­விக்­கவே ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் படை­களை அனுப்­பி­யுள்­ள­தாக அவர் கூறி­னார்.

உக்­ரே­னில் இருந்து கிட்­டத்­தட்ட 2.2 மில்­லி­யன் பேர் அக­தி­க­ளாக வெளி­யே­றி­யி­ருப்­ப­தாக ஐநா மதிப்­பிட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், போரில் ஆக மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள ஆறு பகு­தி­களில் இருந்து மக்­கள் பாது­காப்­பாக வெளி­யேற ஏது­வாக 12 மணி நேரப் போர் நிறுத்­தத்­திற்கு ரஷ்யா இணங்­கி­யுள்­ள­தாக உக்­ரேன் துணைப் பிர­த­மர் ஐரினா வெரஸ்­சுக் தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், ரஷ்ய வெளி­யுறவு அமைச்­சர் செர்கே லாவ்­ரோ­வும் உக்­ரேன் வெளி­யு­றவு அமைச்­சர் டிமிட்ரி குலே­பா­வும் துருக்­கி­யில் இன்று சந்­தித்­துப் பேச்சு நடத்­த­ இருக்கின்றனர்.

இத­னி­டையே, ரஷ்­யா­வின் கட்டுப்­பாட்­டில் இருக்­கும் செர்­னோ­பில் அணு­வு­லை­யில் மின்­வி­நி­யோ­கம் துண்­டிக்­கப்­பட்­டு­விட்­ட­தா­க­வும் அதன் கார­ண­மாக பயன்­ப­டுத்­தப்­பட்ட அணு எரி­பொ­ரு­ளைக் குளிர்­விக்க முடி­யா­த­தால் கதிர்­வீச்­சுக் கசிவு அபா­யம் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் உக்­ரேன் தெரி­வித்­துள்­ளது.

சண்டை நடந்து வரு­வ­தால் அவ்­வு­லைக்கு மின்­சா­ரம் வழங்­கும் உயர் மின்­ன­ழுத்த மின்­த­டத்தை உட­ன­டி­யா­கச் சரி­செய்­யும் பணியை மேற்­கொள்ள முடி­ய­வில்லை என்று உக்­ரே­னின் அணு­வுலை நிறு­வ­ன­மான எனர்­கோட்­டம் குறிப்­பிட்­டது.

உக்­ரேன் தலை­ந­கர் கியவ்­வில் இருந்து கிட்­டத்­தட்ட 100 கி.மீ. தொலை­வில் அமைந்­துள்ள செர்­னோ­பில்­லில் கடந்த 1986ஆம் ஆண்டு உல­கின் ஆக மோச­மான அணு­வுலை விபத்து நிகழ்ந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!