‘குடும்ப மருத்துவர்’ திட்டம்

அடுத்த ஆண்டிலிருந்து குடியிருப்பாளர்கள் ஒவ்வொருவரும் பதிவுசெய்துகொள்ளலாம்

அடுத்த ஆண்டு முதல் சிங்­கப்­பூர் குடி­யி­ருப்­பா­ளர்­கள் ஒவ்­வொ­ரு­வரும் தனி­யார் மருத்­து­வர் அல்­லது பல­துறை மருந்­தக மருத்­து­வர் ஒரு­வ­ரைத் தங்­க­ளது முதல்­நிலை மருத்­து­வப் பரா­ம­ரிப்­பா­ள­ரா­கப் பதிவு­செய்­து­கொள்­ள­லாம்.

குடும்ப மருத்­து­வர்­கள் என அழைக்­கப்­படும் அந்­தப் பொது மருத்­து­வர்­கள், அவர்­க­ளுக்கு ஆயுட்­கா­லம் முழு­வ­தும் மருத்­து­வப் பரா­ம­ரிப்­பில் ஆத­ர­வ­ளிப்­பர் என்று சுகா­தார அமைச்சு ஓர் அறிக்கை மூல­மா­கத் தெரி­வித்­து இருக்கிறது.

கொவிட்-19 பர­வ­லுக்­குப் பிறகு மீள்­தி­றன்­மிக்க சுகா­தா­ரப் பரா­மரிப்பு அமைப்பை உரு­வாக்க சுகா­தார அமைச்சு திட்­ட­மிட்­டுள்­ளது. அதன்­படி, நிலைக்­கத்­தக்க தடுப்பு மருத்­து­வப் பரா­ம­ரிப்­பில் மிகுந்த கவ­னம் செலுத்­தும் வகை­யில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த அமைச்சு இலக்கு கொண்­டுள்­ளது. இதற்கு 'ஆரோக்­கி­ய­மான எஸ்ஜி உத்தி' என்று அமைச்சு பெய­ரிட்­டுள்­ளது.

இதன்­மூ­லம், மக்­கள்­தொகை வேக­மாக முது­மை­ய­டைந்து வரும் நிலை­யில் தேவை­யும் அதி­க­மாக இருப்­ப­தால், அவ­சர மருத்­து­வத்­தி­லும் சிக்­க­லான சிகிச்­சை­க­ளி­லும் மருத்­து­வ­ம­னை­கள் அதி­கக் கவ­னம் செலுத்த முடி­யும்.

இதன் தொடர்­பில் பொது­மக்­களு­டன் கலந்­தா­லோ­சனை நடத்­தப்­படும். இந்­தப் பெரும் உத்தி தொடர்­பான விவ­ரங்­கள் விரை­வில் வெளி­யி­டப்­ப­ட­வுள்ள வெள்ளை அறிக்­கை­யில் இடம்­பெ­றும்.

தமது அமைச்­சின் வர­வு­செலவுத் திட்­டம் தொடர்­பில் நாடாளு­மன்­றத்­தில் நேற்று இடம்­பெற்ற விவா­தத்­தின்­போது உரை­யாற்­றிய சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங், முதற்­கட்­ட­மாக 40களி­லும் அதற்­கு ­மேற்பட்ட வய­து­டை­யோ­ரி­டத்­தி­லும் குடும்ப மருத்­து­வர் திட்­டம் தொடங்­கப்­ப­ட­லாம் என்­றார்.

"அந்த வய­தில்­தான் நாட்­பட்ட நோய் பாதிப்பு தொடங்­கக்­கூ­டும். அதன்­பி­றகு இத்­திட்­டம் மற்ற வய­துப் பிரி­வி­ன­ருக்­கும் படிப்­ப­டி­யாக விரி­வு­ப­டுத்­தப்­படும்," என்று திரு ஓங் கூறி­னார்.

தங்­க­ளது வசிப்­பி­டத்­தின் அடிப்­ப­டை­யில் குடி­யி­ருப்­பா­ளர்­கள் இத்­திட்­டத்­தில் பதி­வு­செய்­ய­லாம். இப்­போ­தைக்கு, பத்­தில் ஒன்­பது குடி­யி­ருப்­பா­ளர்­கள் குடும்ப மருத்­து­வரை அல்­லது தங்­க­ளது வீட்­டிற்கு அரு­கி­லுள்ள மருத்­து­வ­மனையை நாடு­கின்­ற­னர்.

இருப்­பி­னும், மக்­கள் தங்­க­ளது வீட்­டி­லி­ருந்து தொலை­வில் இருக்­கும் மருத்­து­வ­ரை­யும் குடும்ப மருத்­து­வ­ரா­கத் தெரிவு செய்­ய­லாம் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

அப்­ப­டிப் பதி­வு­செய்த பின்­ன­ரும், தேவை ஏற்­ப­டின், எடுத்­துக்­காட்­டாக, புது வீட்­டிற்­குக் குடி­பெயர்ந்­தால் மாற்­றம் செய்­து­கொள்ள முடி­யும்.

"தொடர்ந்து ஒரே ஒரு குடும்ப மருத்­து­வ­ரி­டம் செல்­வோர், பொது­வாக ஆரோக்­கி­ய­மாக இருப்­ப­தை­யும் மருத்­து­வ­ம­னைக்­கும் அவ­சர சிகிச்­சைப் பிரி­வுக்­கும் செல்­வது குறை­வாக இருப்­ப­தை­யும் ஆய்வு முடி­வு­கள் காட்­டு­கின்­றன," என்று திரு ஓங் சொன்­னார்.

அவர்­க­ளைப் பற்றி மருத்­து­வ­ரும் பரா­ம­ரிப்­புக் குழு­வி­ன­ரும் நன்கு தெரிந்து வைத்­தி­ருப்­ப­தும் நோய்க்­கான அறி­குறி­களைச் சரி­யான நேரத்­தி­லும் துல்­லி­ய­மா­க­வும் அவர்­கள் கண்­ட­றிய முடி­வ­துமே அதற்­குக் கார­ணம் என்­றார் அமைச்­சர்.

இப்போதைக்கு, ஐந்தில் மூன்று சிங்கப்பூரர்கள் தொடர்ந்து ஒரே மருத்துவரை நாடுவதாக அவர் குறிப்பிட்டார்.

"இதன்மூலம் தடுப்பு மருத்­து­வத்­திற்­கும் நேரம் ஒதுக்­கும்­வி­த­மாக, அதி­க­மான நோயா­ளி­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்க பொது மருத்­து­வர்­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள முடி­யும்," என்­றும் திரு ஓங் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!