இந்தியச் சமூகத்தில் ஆரோக்கிய வாழ்க்கைமுறை ஊக்குவிப்பு

இந்திய, மலாய் இனத்தவரிடையே ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கை­மு­றை­களை ஊக்­கு­விக்க, அவ்­வி­னச் சமூ­கத் தலை­வர்­க­ளு­ட­னும் பங்­காளி­க­ளு­ட­னும் சுகா­தார அமைச்சு இணைந்து பணி­யாற்­றும்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள சிறு­பான்மை இனக் குழுக்­க­ளின் உடல்­ந­லத்தை மேம்­ப­டுத்­தும் நோக்­கில் சுகா­தார அமைச்சு கடந்த ஆண்டு ஒரு பணிக்­கு­ழுவை உரு­வாக்­கி­யது.

கலா­சா­ரத்­திற்­குப் பொருத்­த­மான திட்­டங்­களை வடி­வ­மைக்கவும் மோச­மான சுகா­தா­ரப் பழக்­கங்­களுக்கு எதி­ரா­கச் சமூ­கத்தை அணி­தி­ரட்ட உத­வவும் அப்­ப­ணிக்­கு­ழு­ இலக்கு கொண்டுள்ளது.

இந்­திய சமூ­கத்­திற்­கான சுகா­தார மேம்­பாட்டு நட­வ­டிக்­கை­கள் செயல்­ப­டுத்­தப்­படும் என்று சுகா­தார அமைச்­சின் நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் ரஹாயு மஹ்­ஸாம் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

எடுத்­துக்­காட்­டாக, ஆரோக்­கிய சமை­யலை ஊக்­கு­விக்க சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கம் (சிண்டா) போன்ற முக்­கி­யப் பங்­கா­ளி­க­ளு­டன் வாரி­யம் பணி­யாற்­றும்.

ஆரோக்­கி­யத் தெரி­வு­க­ளைத் தேர்­வு­செய்­யும் வாடிக்­கை­யா­ளர்­களுக்கு வெகு­மதி அளிக்­கும் ஆரோக்­கிய உண­வுத் திட்­டத்­தில் பங்­கெ­டுக்­கு­மாறு இந்­திய உணவு, பானக் கடை­களை வாரி­யம் ஆர்­வத்­து­டன் ஈடு­ப­டுத்தி வரு­கிறது.

அது­போல, மலாய் சமூ­கத்­தி­னி­டையே மன­ந­லம், புகைப்­ப­ழக்­கத்­தைக் குறைத்­தல், உண­வுப் பழக்­கத்தை மேம்­ப­டுத்­து­தல், உடல்­சார்ந்த நட­வ­டிக்­கை­களை அதி­கப்­படுத்­து­தல், சுகா­தா­ரப் பரி­சோ­தனை ஆகி­ய­வற்­றில் கவ­னம் செலுத்­தும் வகை­யில் ஐந்து புதிய துணைக்­கு­ழுக்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் திரு­வாட்டி ரஹாயு தெரி­வித்­தார்.

கடந்த 2020ஆம் ஆண்­டில் மலாய் இனத்­த­வ­ரில் 14.2 விழுக்­காட்­டி­ன­ரும் இந்­தி­யச் சமூ­கத்­தில் 14.2 விழுக்­காட்­டி­ன­ரும் நீரி­ழி­வால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக சென்ற ஆண்டு நாடா­ளு­மன்­றத்­தில் அவர் தெரி­வித்­தி­ருந்­தார். அதே நேரத்­தில், சீன இனத்­த­வ­ரி­டையே அப்­பா­திப்பு 8.2 விழுக்­கா­டாக இருந்­தது.

அத்­து­டன், மலாய்க்­கா­ரர்­களில் 37.5 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் சீன இனத்­த­வ­ரில் 36.1 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் இந்­தி­யச் சமூ­கத்­தில் 29.5 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!