சிறப்பு உதவி சிறாருக்கு மேலும் இரு நிலையம்

சிறப்பு உத­வி­கள் தேவைப்­ப­டக்­கூடிய சிறார்­க­ளி­டம் காணப்­படும் குறை­பா­டு­களை முன்­ன­தா­கவே கவ­னித்து அவற்­றைச் சரிப்­ப­டுத்த உத­வும் புதிய இரண்டு நிலை­யங்­கள் அமைக்­கப்­படும்.

அந்த நிலை­யங்­கள் மூலம் ஆறு வய­தும் அதற்கு குறைந்த வய­தும் உள்ள சிறார்­கள் பய­ன­டை­ய­லாம்.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் இந்த விவ­ரங்­களை அறி­வித்­தார்.

கைக்­கு­ழந்­தை­கள் மற்­றும் சிறாருக்­கான முன் கவ­னிப்­புச் செயல்­திட்ட நிலை­யம் என்று அந்த நிலை­யங்­கள் குறிப்­பி­டப்­படும்.

அவற்­றின் முதல் நிலை­யம் இந்த ஆண்டு முடி­வில் தயா­ரா­கி­வி­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இரண்­டா­வது நிலை­யம் 2024 ஆம் ஆண்டு நடுப்­ப­கு­தி­யில் செயல்­ ப­டத் தொடங்­கும்.

இதோடு, வரும் ஏப்­ரல் முதல் மேலும் பல தனி­யார் துறை நிறு­வனங்­கள் குடும்ப உத­வித் திட்­டம் ஒன்­றில் சேர்ந்­து­கொள்ள வாய்ப்பு அளிக்­கப்­படும்.

அந்­தத் திட்­டம், சிறப்பு உதவி தேவை உள்ள சிறார்­களை முன்­னதா­கவே கவ­னிப்­ப­தற்கு ஆகும் செலவை ஈடு­செய்­யும் வகை­யில் குடும்­பங்­கள் மானி­யத்­தைப் பெற உத­வும்.

தனி­யார் ஈடு­பாட்டு நிறு­வ­னங்­களுக்­கான மேம்­ப­டுத்­தப்­பட்ட முன்­னோ­டித் திட்­டம் (பிபிஐபி) என்ற ஒரு திட்­டத்தை பாலர் பருவ மேம்­பாட்டு முகவை அமைப்பு நிர்­வகித்து நடத்­து­கிறது. இத்திட்­டத்­தின் கீழ் மொத்­தம் 16 நிலை­யங்­கள் செயல்­படும். இவற்­றில் 10 நிலையங்­கள் ஏற்கெனவே செயல்­ப­டு­கின்­றன.

ஆகை­யால் இந்­தச் செயல்­திட்­டத்­தில் கிடைக்­கும் மொத்த இடங்­ க­ளின் எண்­ணிக்கை 40% அதி­கரிக்­கும் என்று ஹாலந்து-புக்­கிட் தீமா குழுத்­தொகுதி உறுப்­பி­ன­ரின் கேள்­விக்கு அளித்த எழுத்து மூல­மான பதி­லில் அமைச்­சர் தெரி­வித்தார். சிறப்பு உதவி தேவைப்­படக்­கூடிய சிறாரை முன்­ன­தா­கவே கவ­னிப்­ப­தற்கு காத்­தி­ருக்­கும் காலம் அதி­க­மாகி உள்ளதாக அங் மோ கியோ குழுத்­தொ­குதி உறுப்­பி­ன­ரின் கேள்­விக்கு அளித்த பதி­லில் திரு மச­கோஸ் குறிப்­பிட்­டார்.

அர­சாங்க நிதி உதவி பெறும் நிலை­யங்­க­ளுக்கு அத்­த­கைய அதி­க­மான சிறார்­களை மருத்­து­வ­மனை­கள் அனுப்பி வைப்­ப­தும் கடந்த இரண்டு ஆண்டு காலத்­தில் கொவிட்-19 கார­ண­மாக ஏற்­பட்ட தாக்­க­மும் பாது­காப்பு நிபந்­தனை­களும் இதற்­குக் கார­ணம் என்று அமைச்­சர் விளக்­கி­னார்.

பொது­வாக பார்க்­கை­யில், பாலர்­பள்­ளி­க­ளுக்­குள் சிறா­ருக்­கான முன் கவ­னிப்­புச் சேவை­கள் விரி­வு­ப­டுத்­தப்­பட்டு இருப்­ப­தாக அமைச்­சர் திரு மச­கோஸ் குறிப்­பிட்­டார்.

இதன் கார­ண­மாக வளர்ச்சி குறை­பாடுகளு­டன் கூடிய மேலும் அதிக பிள்­ளை­க­ளுக்கு ஆத­ரவு அளிக்க முடி­கிறது என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!