மலேசிய பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த நெருக்குதல் அதிகரிக்கலாம்

ஜோகூர் மாநி­லத் தேர்­த­லில் தேசிய முன்­ன­ணிக் கூட்­ட­ணி­யின் மாபெரும் வெற்­றி­யைத் தொடர்ந்து, பொதுத் தேர்­தலை முன்­கூட்டியே நடத்த அம்னோ கட்­சி­யின் மூத்த தலை­வர்­கள் அழுத்­தம் தரக்­கூ­டும் என அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர்.

நாளை தொடங்­கும் அம்னோ பொதுக் கூட்­டம், இந்­தக் கோரிக்­கைக்கு மிகச்­சி­றந்த தள­மாக இருக்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.

நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்து, பொதுத் தேர்­தலை முன்­கூட்டியே நடத்த மலே­சி­யப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப்­பிற்கு நெருக்­கு­தல் அதி­க­ரிக்­கும் என சயன்ஸ் மலே­சிய பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த பேரா­சி­ரி­யர் சிவ­மு­ரு­கன் பாண்­டி­யன் கரு­து­கி­றார்.

"பொதுத் தேர்­தலை முன்­கூட்டியே நடத்து­மாறு முன்­வைக்­கப்­படும் கோரிக்­கை­களை நிரா­க­ரிக்க முடி­யாத நிலை அவ­ருக்கு ஏற்­ப­ட­லாம்," என்­றார் பேரா­சி­ரி­யர் சிவ­மு­ரு­கன்.

திரு இஸ்­மா­யில் பிர­த­மர் பத­வி­யில் இருந்­தா­லும், அம்னோ உத­வித் தலை­வ­ராக அவர், கட்­சித் தலை­வர் அக­மது ஸாஹிட் ஹமி­டிக்­கும் துணைத் தலை­வர் முக­மது ஹச­னுக்­கும் கீழ் உள்­ளார் என்று பேரா­சி­ரி­யர் சிவ­முருகன் குறிப்­பிட்­டார்.

"அம்னோ தலை­வ­ராக திரு இஸ்­மா­யில் இருந்­தி­ருந்­தால், நில­வ­ரம் வேறு. ஏனெ­னில், இந்த விவ­கா­ரத்­தில் இறுதி முடிவு அவ­ரு­டை­ய­தா­கவே இருந்­தி­ருக்­கும்," என்­றார் அவர்.

பொதுத் தேர்­தலை முன்­கூட்­டியே நடத்த திரு ஸாஹிட்­டும் திரு ஹச­னும் முன்­ன­தா­கக் கோரி­யி­ருந்­த­னர். ஆனால், கொவிட்-19 பெருந்­தொற்று கார­ண­மாக தங்­க­ளு­டைய கோரிக்­கைக்கு அவர்­கள் அழுத்­தம் தர­வில்லை.

மலாக்கா, ஜோகூர் மாநிலத் தேர்­தல்­களில் பெர்­சத்து கட்சி சிறப்­பா­கச் செய்­யா­த­தும் பொதுத் தேர்­தலை முன்­னுக்­குக் கொண்­டு­வர முயற்சி எடுக்­கப்­ப­டு­வ­தற்­கான கார­ணங்­களில் அடங்­கும் என்று பேரா­சிரி­யர் சிவ­மு­ரு­கன் கூறி­னார்.

கடந்த நவம்­ப­ரில் நடந்த மலாக்கா தேர்­த­லில் தேசிய முன்­ன­ணிக் கூட்­டணி சிறப்­பா­கச் செய்­தது. அதில், 28ல் 21 தொகு­தி­களை அது கைப்­பற்­றி­யது.

அண்­மைய தேர்­தல் வெற்­றி­களைத் தொடர தேசிய முன்­னணிக் கூட்­டணி, குறிப்­பாக அம்னோ, விரும்­பும் என்று டாஸ்­மே­னியா பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த பேரா­சி­ரி­யர் ஜேம்ஸ் சின் கரு­து­கி­றார்.

"தேர்­த­லில் வெற்­றி­பெற வேண்டு­மெ­னில், தேசிய முன்­னணிக் கூட்­டணி நீண்­ட­கா­லம் காத்­தி­ருக்க இய­லாது. மாநி­லத் தேர்­தல்­களில் கிடைத்­துள்ள வெற்­றி­யைத் தொட­ரவே பொதுத் தேர்­தலை முன்­கூட்­டியே நடத்த அம்னோ விரும்­பு­கிறது.

"சொல்­லப் போனால், ஜூன் மாதத்­துக்கு முன்­ன­தா­கவே தேர்­தலை நடத்த அக்­கட்சி விரும்­பும் என நான் நினைக்­கி­றேன்," என்­றார் பேரா­சி­ரி­யர் சின்.

எதிர்­கட்­சித் தலை­வர் அன்­வார் இப்­ரா­கிம் தொடர்ந்து பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணியை வழி­ந­டத்­தி­னால் எதிர்­வ­ரும் பொதுத் தேர­த­லில் அக்­கூட்­டணி அனே­க­மாக தோல்­வி­ய­டை­யும் என்­றும் பேரா­சி­ரி­யர் சின் கணிக்­கி­றார்.

"இருப்­பி­னும், இது­கு­றித்து ஏதா­வது செய்­வ­தற்கு எதிர்­கட்­சிக்கு இன்­ன­மும் நேரம் இருக்­கிறது," என்­றார் அவர்.

ஜோகூர் தேர்­தல் முடி­வு­க­ளைத் துல்­லி­ய­மா­கக் கணித்­த­வர் பேரா­சி­ரி­யர் சின்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!