எப்போதும் கண்காணிக்கும் சிங்கப்பூர்

அமைச்சர்: அண்மைய காலத்தில் ஆபத்தான கொவிட்-19 உருமாறிய புதிய கிருமி பற்றி தகவல் இல்லை

கவலை தரும், ஆபத்தான உரு­மா­றிய கிருமி பற்­றிய தக­வல்­களை உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­யப்­படுத்து­கி­றதா என்­பதை சிங்கப்­பூர் எப்­போதும் கண்­கா­ணிக்கிறது.

என்­றா­லும் அண்­மைய காலத்­தில் அத்­த­கைய குறிப்­பி­டத்­தக்க எந்­த­வொரு கிரு­மி­யும் தலை­காட்டி­ய­தா­கத் தெரி­ய­வில்லை என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று கூறி­னார்.

உலகின் இதர பகு­தி­களில் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு இருக்­கும் எக்ஸ்இ, எக்ஸ்டி, எக்ஸ்­எஃப் ஆகிய கொவிட்-19 உரு­மா­றிய கிரு­மி­கள் பற்றி கூறிய அவர், அத்­த­கைய கிரு­மி­கள் எப்­போ­துமே இருந்து வரும். என்­றா­லும் அவற்­றால் அதி­க­ளவு அச்­சப்­பட வேண்டியதில்லை என்­றார்.

செம்­ப­வாங் குழுத்­தொ­கு­தி­யின் முதலாவது விவ­சா­யி­கள் சந்தை கொவிட்-19 தொற்­றுக்­குப் பிறகு நேற்று நடந்­தது. அதில் அந்­தத் தொகு­தி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டன் திரு ஓங் கலந்­து­கொண்­டார். அதை­யொட்டி அமைச்­சர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

"உரு­மா­றிய கிரு­மி­கள் ஏராளம். அவற்­றில் பல கிருமி­கள் மனி­தர்­க­ளைப் போன்றவை.

"அதாவது இன்று நீங்­கள் ஒரு காத­ணியை அணி­கி­றீர்­கள். அதை மாற்றி நாளை வேறு ஒன்றை அணி­வீர்­கள். நீங்­கள் மாறு­வ­தில்லை. ஆனால் உங்­கள் காதணி­தான் மாறு­கிறது. இதே­போன்­று­தான் கிருமி உரு­மாற்­ற­மும்," என்றார் அமைச்­சர்.

இருப்பினும் ஆபத்தான உரு­மா­றிய கிருமி பற்றி உலக சுகா­தார நிறு­வ­னம் அறி­விப்பு விடுக்­கி­றதா என்­பதை சிங்­கப்­பூர் கண்­கா­ணித்து வர­வேண்­டும் என்று திரு ஓங் குறிப்­பிட்­டார்.

"அப்­படி அந்த நிறு­வ­னம் தெரி­விக்­கும் கிருமி, முந்­திய கிரு­மி­யில் இருந்து வேறு­பட்ட தன்­மை­களைக் கொண்­ட­தாக இருக்­கும். அதா­வது, அதி­க­மாக பர­வக்­கூ­டிய தாக, கடு­மை­யான விளைவு­களை ஏற்­ப­டுத்­து­வ­தாக, தடுப்பு மருந்­துக்குக் கட்­டுப்­ப­டாத கிரு­மி­யா­க­அது இருக்­கும்.

"நாம் இவை எல்­லா­வற்­றை­யும் கவ­னித்து வரு­கி­றோம். பொது­வான நில­வ­ரங்­களைக் கண்­காணித்து வரு­கிறோம்," என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

பிரிட்­ட­னில் 'எக்ஸ்இ' என்ற புதிய வகை கொவிட்-19 உரு­மா­றிய கிருமி காணப்­பட்டு உள்­ளது.

அதைத் தான் கண்­கா­ணித்து வரு­வ­தாக உலக சுகா­தார நிறு­வனம் தெரி­வித்து இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரில் பல கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு இருந்­தா­லும் பெரும்­பா­லான மக்­கள் மிக­வும் எச்­ச­ரிக்­கை­யு­டன் நடந்துகொள்­கி­றார்­கள் என்­பதை சுட்­டிய திரு ஓங், இது நல்ல அறி­குறி என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!