லாரன்ஸ் வோங் தலைமைத்துவம் பெரும்பான்மையினரின் முடிவு

மக்­கள் செயல் கட்­சி­யின் (மசெக) நான்­காம் தலை­முறைத் தலை­மைத்­து­வத்­துக்கு பெரும்­பான்­மை­யி­ன­ரால் திரு லாரன்ஸ் வோங் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார் என்­ப­தும் அந்­தத் தேர்வை அக்­கட்­சி­யின் உயர்­மட்­டத் தலை­வர்­களும் அதன் அனைத்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அங்­கீ­க­ரித்­த­தும் தெரியவந்­துள்­ளது.

அடுத்த பொதுத் தேர்­த­லில் மசெக வெற்­றி­பெற்­றால் சிங்­கப்­பூ­ரை­யும் கட்­சி­யை­யும் வழி­ந­டத்திச் செல்­வது யார் என்­ப­தன் மீதான ஒரு­மித்த கருத்தை எட்­ட­வும் முறை­யான, முழு­மை­யான நடை­முறை பின்­பற்­றப்­பட்­டுள்­ளது.

திரு வோங், 49, தலை­மைத்­து­வத்தை ஏற்­பது என்­பது 19 உயர்­மட்­டத் தலை­வர்­களில் 15 பேரின் தெரி­வாக இருந்­தது.

அந்த 19 பேரில் அமைச்சரவை உறுப்பினர்கள், மன்ற நாய­கர் டான் சுவான் ஜின், என்­டி­யுசி தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங் ஆகி­யோர் இடம்­பெற்­றுள்­ள­னர். ஆயி­னும் இவர்களில் பிர­த­மர் லீ சியன் லூங்­கும் இரண்டு மூத்த அமைச்­சர்களும் இடம்­பெ­ற­வில்லை.

திரு டான் சுவான் ஜின்­னும் திரு இங் சீ மெங்­கும் முன்­னாள் நான்­காம் தலை­முறை அமைச்­சர்­கள்.

மார்ச் மாதம் வர­வு­செ­ல­வுத் திட்ட விவா­தம் நாடா­ளு­மன்­றத்­தில் நடை­பெற்று முடிந்த பின்­னர் இந்த 19 பேரி­ட­மும் தனித்­த­னி­யா­கக் கருத்து கேட்­கப்­பட்­டது.

அவர்­க­ளி­டம் முன்­னாள் மசெக தலை­வர் கோ பூன் வான் இது­தொ­டர்­பாக நேர்­கா­ணல் நடத்­தி­னார். தலை­மைப் பொறுப்­புக்கு யாரை விரும்­பு­கி­றீர்­கள் என்று கேட்­கப்­பட்­ட­தோடு தகு­தி­யுள்ள வேட்­பா­ளர்­க­ளைக் குறிப்­பி­டு­

மா­றும் அவர்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­னர். முடி­வில், அவர்­களில் 79 விழுக்­காட்­டி­னர் திரு வோங்­கைக் குறிப்­பிட்­ட­தாக திரு கோ தெரி­வித்­தார். இது அறு­திப்பெரும்­பான்­மை­யை­விட கூடு­தல் விகி­தம் என்­றும் அவர் கூறி­னார்.

வாக்­கெ­டுப்பு தொடர்­பான விவ­ரங்­கள் நேற்­றுக் காலை இஸ்­தா­னா­வில் நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­விக்­கப்­பட்­டன. பிர­த­மர் லீ சியன் லூங் தலை­மை­யில் நடை­பெற்ற இந்­தக் கூட்­டத்­தில் திரு வோங்­கும் திரு கோவும் பங்­கேற்­ற­னர்.

மசெ­க­வின் அடுத்த தலை­வர் யார் என்­பது குறித்து வியா­ழக்­கி­ழமை வெளி­யான அறி­விப்­பின் தொடர்­பில் அவர்­கள் விளக்­கம் அளித்­த­னர். இது அர­சி­யல் வாரிசு நடை­மு­றை­யில் ஏற்­பட்­டுள்ள பெரி­ய­தொரு முன்­னேற்­றம் என்று திரு லீ தெரி­வித்­தார்.

ஏரா­ள­மான சவால்­களை நாடு எதிர்­நோக்­கும் நிலை­யில் அடுத்த தலை­வ­ரைக் குறிப்­பி­டு­வ­தில் இதற்கு மேலும் தாம­தம் ஏற்­ப­டக்­கூ­டாது என்று தாம் கரு­தி­ய­தா­க­வும் நிச்­ச­ய­மற்ற தன்மை நாட்­டுக்கு நல்­ல­தல்ல என்­றும் அவர் கூறினார்.

நான்­காம் தலை­முறைத் தலை­மைத்­து­வம் தற்­போது தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டு­விட்­ட­தால் அடுத்­த­கட்­டம் குறித்­தும் பொருத்­த­மான கால நேரம் குறித்­தும் திரு வோங்­கு­டன் தாம் ஆலோ­சிக்க இருப்­ப­தா­க­வும் திரு வோங்­கும் நான்­காம் தலை­மு­றை அணியும் தயா­ரா­கும்­போது பொறுப்­பு­களை ஒப்­ப­டைப்­ப­தன் அடிப்­ப­டை­யில் அந்த ஆலோ­சனை அமை­யும் என்­றும் திரு லீ தெரி­வித்­தார்.

இந்த நடை­முறை கவ­ன­மா­க­வும் நிதா­னத்­து­ட­னும் கையா­ளப்­படும் என்­றும் அவர் கூறி­னார்.

2025 நவம்பரில் நடக்க வேண் டிய அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட மசெகவுக்கான சிறந்த உத்தி எது என்று திரு வோங்கிடம் விவாதித்து பின்னர் அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றும் பிரத மர் குறிப்பிட்டார். அடுத்த பொதுத் தேர்தலில் மசெக வென்றால் திரு வோங் அடுத்த பிரதமர் என்று முடிவு செய்யப்பட்டுவிட்டதாக அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!