3,000 உக்ரேனிய வீரர்கள் மாண்டதாகத் தகவல்

உக்­ரே­னில் நேற்­றுக் காலை கியவ் நக­ரி­லும் மேற்கு நக­ரான லிவிவ்­வி­லும் வெடிப்­பு­கள் நிகழ்ந்­தன. தலை­ந­க­ரில் வெடிப்பு நிகழ்ந்­த­தும் மீட்­புப் படை­யி­ன­ரும் மருத்­து­வக் குழு­வி­ன­ரும் விரைந்து சென்று நிலை­மையை ஆராய்ந்­த­தாக நகர மேயர் தெரி­வித்­தார். அங்கு உயிர்ச்­சே­தம், பொருள் சேதம் ஏற்­பட்­டது குறித்த விவ­ரங்­கள் உட­னடி­யாக வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இதற்­கி­டையே, உக்­ரே­னின் கவச வாகன உற்­பத்­தித் தொழிற்­சா­லைக் கட்­ட­டங்­களை ரஷ்ய ராணு­வம் தகர்த்­ததாக ரஷ்ய தற்­காப்பு அமைச்சை மேற்­கோள் காட்டி 'இண்­டர்­ஃபேக்ஸ்' செய்தி நிறு­வ­னம் கூறி­யது.

இந்­நி­லை­யில், ஏழு வாரங்­க­ளாக நடை­பெற்ற போரில் 2,500 முதல் 3,000 வரை­யி­லான உக்­ரே­னிய துருப்­பி­னர் கொல்­லப்­பட்­டுள்­ள­தா­க­வும் 10,000க்கும் மேற்­பட்­டோர் காய­ம­டைந்­த­தா­க­வும் உக்­ரே­னிய அதி­பர் ஸெலென்ஸ்கி தெரி­வித்­தார். இருப்­பி­னும் பொது­மக்­களில் எத்­தனை பேர் மாணட­னர் என்­பது குறித்து உறுதி செய்­யப்­ப­ட­வில்லை என்று அவர் சிஎன்­என் தொலைக்­காட்­சி­யி­டம் கூறி­னார்.

ரஷ்யா கடும் எச்சரிக்கை

இதற்­கி­டையே, உக்­ரே­னுக்கு நவீன ஆயு­தங்­களை அனுப்­பிய அமெ­ரிக்­கக் கப்­பலை தாம் தடுத்து நிறுத்­தி­ய­தாக ரஷ்யா கூறி­யது. அத­னைத் தொடர்ந்து பைடன் நிர்­வா­கத்­துக்கு ரஷ்யா அடுத்­த­டுத்து கடும் எச்­ச­ரிக்­கை­களை விடுத்து வரு­கிறது.

உக்ரேனுக்கு தொடர்ந்து ஆயுத உதவி செய்தால் எண்ணிப் பார்க்க இயலாத பெரும் விளைவுகளை அமெரிக்கா சந்திக்க வேண்டி வரும் என்று ரஷ்ய தரப்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!