‘தமிழ்ச் சோலை’யில் தமிழ்மொழி, தமிழர் பண்பாட்டை விவரிக்கும் 20,000 நூல்கள்

தமிழ் வளங்­கள் தமிழ்ச் சமூ­கத்­திற்கு மட்­டு­மின்றி, சிங்­கப்­பூ­ரில் சமூக ஒற்­று­மையை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான மற்­றொரு படிக்­கல்­லும்­கூட என்று தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ தெரி­வித்­துள்­ளார்.

சிங்­கப்­பூர் வர­லாற்­றில் ஆக அதிக தமிழ் வாசிப்பு வளங்­க­ளைக் கொண்ட ‘தமிழ் சோலை’யை உட்­லண்ட்ஸ் வட்­டார நூல­கத்­தில் நேற்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறந்து வைத்­து அவர் பேசினார்.

செவ்­வி­லக்­கி­யங்­கள், விரு­து­பெற்ற நூல்­கள், சிங்­கப்­பூர் இலக்­கி­யம், உள்­ளூர் நூல்­கள் உள்­பட தமிழ், தமி­ழர் சார்ந்த 20,000க்கும் மேற்­பட்ட வளங்­க­ளைத் தமிழ்ச் சோலை­ கொண்டுள்ளது.

தமிழ்­மொழி, பண்­பாடு, வர­லாறு குறித்து விவ­ரிக்­கும் 1,000 ஆங்­கில, மலாய், சீன நூல்­களும் அதில் இடம்­பெற்­றுள்­ளன.

17 மொழி­களில் திருக்­கு­றள் மொழி­பெ­யர்ப்­பு­களும் உள்­ளன.

தமிழ் அறி­யா­த­வர்­க­ளுக்கு ஆங்­கில நிகழ்ச்­சி­க­ளை­யும் தமிழ்ச் சோலை வழங்­கு­கிறது. இத­னால் எல்லா இனத்­த­வ­ரும் இணைந்து தமிழ்ப் பண்­பாட்­டைப் புரிந்­து­கொள்ள வாய்ப்பு கிட்­டும் என்­றார் அமைச்­சர்.

சிங்­கப்­பூ­ரின் தமிழ்ச் சமூ­கம் அதன் அள­வை­விட முக்­கி­யத்­து­வம் பெற்­றது. இந்­நிலை நீண்டகாலத்­துக்­குத் தொடர வேண்­டும் என்­றார் அமைச்­சர்.

குறள் சொல்லித்தந்த பாடம்

திருக்­கு­றள் உள்­பட தமிழ்ச் சோலை­யின் வளங்­கள் தமக்கு வாழ்க்கை, பண்­பாடு பற்றி ஆழ­மான புரிந்­து­ணர்வை தந்­துள்­ள­தாக குறிப்­பிட்ட அவர், ‘தொட்­ட­னைத் தூறும் மணற்­கேணி, மாந்தர்க்குக் கற்­றை­னைத் ­தூ­றும் அறிவு’ என்ற குறளை மேற்­கோள் காட்டி தமது உரை­யைத் தொடங்­கி­னார்.

குற­ளின் மூன்று படிப்­பி­னை­க­ளாக, வாழ்­நாள் கற்­றல், நமது பண்­பாட்­டு­டன் மற்ற பண்­பா­டு­களை உள்­ள­டக்கி பர­வ­லாக கற்­பது, நூல­கங்­கள் உட்­பட கல்வி நிலை­யங்­

க­ளின் முக்­கி­யத்­து­வம், ஆகி­ய­வற்றை முன்­வைத்து விவ­ரித்­தார் அமைச்­சர்.

உல­க­ம­ய­மான பண்­பு­களை அனை­வ­ருக்­கும் உணர்த்­தும் இது போன்ற குறள்­க­ளின் எக்­கா­லத்­துக்­கும் பொருந்­தும் பாடங்­களை திருக்­கு­ற­ளின் மொழி­பெ­யர்ப்­பு­க­ளின்றி நாம் அறிந்­தி­ருக்க முடி­யாது என்­றும் அவர் கூறி­னார்.

தமிழ் வளங்­க­ளைத் திரட்டி, போற்றி, பாது­காக்­கும் முயற்­சி­க­ளின் மற்­றொரு படிக்­கல்­லாக ‘சிங்­கப்­பூர் தமிழர் கலைக்­க­ளஞ்­சி­யம்’ உரு­வாக்­கத்­தி­லும் தேசிய நூலக வாரி­யம் பங்­கெ­டுக்­கிறது.

சிங்­கப்­பூர்த் தமி­ழர் வர­லாற்­றைப் பறை­சாற்­றும், சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பண்­பாட்டு மையத்­தின் இந்­தத் திட்­டத்­தில் நூலக வாரி­ய­மும் கைகோர்க்கும் என்று உள்­துறை இரண்­டாம் அமைச்­ச­ரும் அறி­வார்ந்த தேசம், இணை­யப்­ பாது­ காப்பு ஆகி­ய­வற்­றுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மான திரு­மதி ஜோசஃபின் டியோ அறிவித்­தார்.

கடு­மை­யான கொவிட்-19 சூழ­லி­லும் கற்­ற­லில், குறிப்­பாக தமிழ் இலக்­கி­யத்­தில் ஆர்­வம் கூடி­ய­தா­க­வும் நூல­கத்­துக்கு வரு­வோ­ரின் எண்­ணிக்கை பன்­ம­டங்கு அதி­க­ரித்­த­தா­க­வும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு தமிழ் மின்­னூல்­க­ளின் இர­வல் எண்­ணிக்கை 2020ஆம் ஆண்டின் 9,000 என்ற எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் இரட்டிப்பானதாகவும் திருமதி டியோ தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!