லிட்டில் இந்தியாவின் லெம்பு சாலையில் பிடிபட்ட சட்டவிரோதப் புகையிலை; பஃபளோ சாலையில் விற்பனையாளர்கள் கைது

லிட்டில் இந்தியாவில் உள்ள லெம்பு ரோட்டில் இருக்கும் அந்த கடைவீட்டில் பார்ப்பதற்கு எல்லாம் வழக்கம் போல இருந்தது.

கீழ்த்தளத்தில் உள்ள கடையில் மளிகைப் பொருள்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் கடைவீட்டின் இரண்டாம் மூன்றாம் தளங்களில் பெரிய பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

மேலே இருந்த அறைகளில் நாற்றம் அடித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

SPH Brightcove Video

சுகாதார அறிவியல் ஆணையமும் போலிசாரும் நடத்திய கூட்டு நடவடிக்கையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூட சென்றது.

அந்த சுமார் இருபது முப்பது பெட்டிகளில் சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட மெல்லும் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது.

குறைந்தது மூன்று விதமான மெல்லும் புகையிலை பெட்டிகளில் இருந்தது.

அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய திடீர்ச்சோதனையில் லெம்பு ரோட்டில் மற்றொரு கடையிலும் சிறிய பைகளில் இருந்த சட்டவிரோத புகையிலை கைப்பற்றப்பட்டது.

இன்றைய கூட்டு நடவடிக்கையில் மொத்தம் 15 பேர் பிடிபட்டனர்.

அவர்களில் 10 பேர் அந்த மெல்லும் புகையிலை விற்றவர்கள். மற்ற ஐந்து பேர் அதை வைத்திருந்தனர் அல்லது மென்று கொண்டிருந்தனர்.

மொத்தம் ஆறு கடைகளை சுகாதார அறிவியல் ஆணையமும் போலிசாரும் சோதனையிட்டனர். அவற்றில் மூன்று கடைகளில் மெல்லும் புகையிலை விற்கப்பட்டது.

பஃபலோ ரோட் உள்ளிட்ட சாலைகளில் மெல்லும் புகையிலையை விற்றவர்கள் பிடிபட்டனர்.

எவ்வளவு சட்டவிரோத புகையிலை கைப்பற்றப்பட்டது, அதன் மதிப்பு என்ன என்பதை அதிகாரிகள் கணக்கிட்டு வருகிறார்கள்.

லிட்டில் இந்தியா சாலைகளிலும் சந்துகளிலும் சட்டவிரோத மெல்லும் புகையிலை சிலர் விற்று வந்ததையும், அவர்களை எச்சரிக்கை செய்வதற்காக நபர்கள் நிறுத்தப்பட்டிருந்ததையும் பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கடந்த மாதம் செய்தி வெளியிட்டது.

மற்றவர்களுக்குத் தெரியாமல் அவர்கள் சில இடங்களில் புகையிலையை ஒளித்து வைக்கவும் செய்தனர்.

மெல்லும் புகையிலையை இறக்குமதி செய்தாலோ விற்றாலோ அந்த குற்றத்துக்கு $10,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

அத்தகைய புகையிலையை வாங்கும் குற்றத்திற்கு அதிக பட்சம் $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!