பெருநாள் தொழுகைக்குப் பெரும் குழுக்களாகத் திரண்ட முஸ்லிம்கள்

சிங்­கப்­பூ­ரில் உள்ள முஸ்­லிம்­கள் நேற்றுக் காலை தங்­க­ளது நோன்­புப் பெரு­நாள் தொழு­கை­யில் ஈடு­பட்­ட­னர். மூன்­றாண்­டு­களில் முதல் தட­வை­யாக தீவெங்­கும் உள்ள முஸ்­லிம்­கள் பெரிய குழுக்­க­ளாக பள்­ளி­வா­சல்­களில் திரண்­ட­தைக் காண­மு­டிந்­தது.

வழி­பாட்டு சேவை­களில் ஒன்­று­கூ­டு­வோ­ரின் எண்­ணிக்கை வரம்பு உள்­ளிட்ட பெரும்­பா­லான கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் ஏப்­ரல் 26ஆம் தேதி­தளர்த்­தப்­பட்­ட­தைத் தொடர்ந்து, ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்­லிம்­கள் தொழு­கை­யில் பங்­கேற்­ற­னர்.

அவர்­க­ளின் முகத்­தில் பெரு

­ம­கிழ்ச்சி காணப்­பட்­டது. ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் பெரு­நாள் வாழ்த்­து­க­ளைப் பரி­மா­றிக்­கொண்­ட­னர்.

முகக்­க­வ­ச­மும் சேஃப்என்ட்ரி வரு­கைப் பதி­வுக்­கான அவ­சி­ய­மும் கொள்­ளை­நோய் முற்­றா­கத் துடைத்­தொ­ழிக்­கப்­ப­ட­வில்லை என்­பதை நினை­வூட்­டின.

மகிழ்­வான தரு­ணம் மீண்­டும் வந்­தது குறித்து கம்­போங் கிளா­மில் உள்ள சுல்­தான் பள்­ளி­வா­சல் தொண்­டூ­ழி­ய­ரும் நோயா­ளி­கள் தொடர்பு நிர்­வா­கி­யு­மான திரு­வாட்டி ரோஸ்­னானி அப்­துல்லா, 64, தமது கருத்­து­க­ளைப் பகிர்ந்­து­கொண்­டார்.

"நோன்­புப் பெரு­நா­ளுக்­காக நேர­டி­யாக தொழு­கைக்கு வந்து ஈடு­

ப­டு­வது ஈராண்­டு­க­ளைக் கடந்த நிலை­யில் இப்­போது இங்கு அந்த நிலை திரும்பி இருப்­ப­தைக் காணும்­போது மகிழ்ச்சி அடை­கி­றேன். இறை­வனின் ஆசிர்­வ­திப்பை உணர்­

கி­றேன்," என்­றார் அவர்.

வழி­பாட்­டுத் தலங்­களில் ஒன்­று­கூ­டு­வோ­ரின் எண்­ணிக்கை வரம்பு 2020ஆம் ஆண்டு அறி­மு­கம் செய்­யப்­பட்­டது. கொள்­ளை­நோ­யைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான ஆயத்­தப் பணி­களில் சிங்­கப்­பூர் அப்­போது ஈடு­பட்டு இருந்­தது.

அந்த ஆண்டு மே 24ஆம் தேதி நோன்­புப் பெரு­நாள் வந்­த­போது கொள்­ளை­நோய் முறி­ய­டிப்­புக் கட்­டுப்­பா­டு­கள் (சர்­க்கிட் பிரேக்­கர்) நடப்­பில் இருந்­தன.

கடந்த ஆண்டு மே 13ஆம் தேதி நோன்­புப் பெரு­நா­ளின்­போ­தும் கொண்­டாட்­டங்­கள் வழக்­க­நி­லைக்­குத் திரும்­ப­வில்லை. டெல்டா வகை கிரு­மிப் பர­வல் அலை­யைத் கட்­டுப்­பா­டு­கள் அப்­போ­தும் நீடித்­தன.

இவற்­றைக் கடந்து இந்த ஆண்டு நோன்­புப் பெரு­நாள் விம­ரி­சை­யா­கக் கொண்­டா­டப்­பட்டு வரு­கிறது. இது­கு­றித்து பிர­த­மர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக்­கில் பதிவு ஒன்றை வெளி­யிட்­டுள்­ளார்.

"கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தால் இந்த ஆண்­டின் நோன்­புப் பெரு­நாள் நேருக்கு நேரா­க­வும் சிறப்­பா­க­வும் கொண்­டா­டும் வகை­யில் அமைந்­துள்­ளது.

"இங்­குள்ள முஸ்­லிம்­கள், கொள்­ளை­நோய் தொடங்­கி­ய­து­மு­தல் இப்­போது முதல்­முறை தங்­க­ளது வழக்­க­மான கொண்­டாட்­டங்­க­ளுக்­குத் திரும்­பு­கின்­ற­னர்.

"கடந்த ஈராண்­டு­கள் சிர­ம­மா­ன­தா­க­வும் சவால் மிகுந்­த­தா­க­வும் இருந்­தன. உங்­க­ளின் அர்ப்­ப­ணிப்­புக்­கும் புரி­த­லுக்­கும் நன்றி தெரி­விக்­கி­றேன்," என்று திரு லீ அந்­தப் பதி­வில் தெரி­வித்­துள்­ளார்.

இருப்­பி­னும், சமூ­கப் பொறுப்­பு­ணர்வு தொட­ர­வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

சுல்­தான் பள்­ளி­வா­சல் தொழு­கை­யில் பங்­கேற்ற அதி­பர் ஹலிமா யாக்­கோப்­பும் இதே கருத்­தைத் தெரி­வித்­தார்.

நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங், மனி­த­வள, தற்­காப்பு மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்மது ஆகி­யோர் மார்சிலிங்கில் உள்ள அன்-நூர் பள்­ளி­வா­ச­லுக்­குச் சென்­றி­ருந்­த­னர்.

அந்தப் பள்ளிவாசலில் நடை­பெற்ற இரண்டு கட்­டத் தொழு­கை­யில் சுமார் 7,000 முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!