போரில் எந்தத் தரப்புக்கும் வெற்றி கிட்டாது: மோடி

தற்­போது நடை­பெற்று வரும் போரில் ரஷ்யா, உக்­ரேன் என்ற இரு­த­ரப்­புக்­கும் வெற்றி கிடைக்­காது என்­றும் அமை­தி­யின் பக்­கமே இந்­தியா இருக்க விரும்­பு­கிறது என்­றும் இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி தெரி­வித்து உள்­ளார்.

மூன்று நாள் ஐரோப்­பிய பய­ண­மாக ஜெர்­மனி சென்ற அவர், ஜெர்­மன் பிர­த­மர் ஒலாஃப் ஷோல்­ஸு­டன் இணைந்து செய்­தி­யா­ளர்­

க­ளைச் சந்­தித்­தார்.

அப்­போது அவர் பேசு­கை­யில், "உக்­ரேன் நெருக்­கடி தொடங்­கி­ய­போதே வன்­முறை உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட்டு, பிரச்­சி­னை­க­ளுக்­குப் பேச்­சு­வார்த்தை மூல­மா­கத் தீர்வு காண வேண்­டு­மென இந்­தியா வலி­யு­றுத்­தி­யது.

"இந்­தப் போரில் எத்­த­ரப்­புக்­கும் வெற்றி கிடைக்­காது. ஆனால், அனை­வ­ரும் பேரளவில் பாதிக்­கப்­ப­டு­வர். உக்­ரேன் விவ­கா­ரத்­தால் கச்சா எண்­ணெய் விலை விண்­ணைத் தொட்­டுள்­ளது. உரங்­கள், உண­வுப் பொருள்­க­ளுக்­குத் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது.

"அத­னால், உல­கத்­தில் உள்ள ஒவ்­வொரு குடும்­ப­மும் பாதிப்­பைச் சந்­தித்து வரு­கிறது. வளர்ந்து வரும் நாடு­களும் வறிய நாடு­க­ளுமே அதிக பாதிப்­பைச் சந்­தித்து வரு­கின்­றன. போரால் மனி­த­கு­லத்­துக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்பு குறித்து பெரி­தும் கவ­லைப்­படும் இந்­தியா, இந்த விவ­கா­ரத்­தில் அமை­தி­யையே விரும்­பு­ கிறது," என்று கூறி­னார்.

உக்­ரேன் மீது படை­யெ­டுத்­த­தற்­காக ரஷ்­யாவை இந்­தியா இது­வரை கண்­டிக்­க­வில்லை என்­ப­தும் ரஷ்­யா­வி­லி­ருந்து ஏரா­ள­மான ஆயு­தங்­களை இந்­தியா வாங்­கி­வ­ரு­வ­தும் உல­கிற்குத் தெரிந்­தவை.

'போரை அதிகாரபூர்வமாக

ரஷ்யா அறிவிக்கும்'

இதற்­கி­டையே, மே 9ஆம் தேதி உக்­ரேன் மீது போர் தொடுத்­தி­ருப்­பதை ரஷ்யா அதி­கா­ர­பூ­வர்­மாக அறி­விக்க இருப்­ப­தாக அமெ­ரிக்க, மேற்­கத்­திய அதி­கா­ரி­கள் நம்­பு­கின்­ற­னர். இரண்­டாம் உல­கப்­போர் முடி­வில் நாசி ஜெர்­மனி சர­ண­டைந்­த­தைக் குறிக்­கும் வகை­யில் ஒவ்­வோர் ஆண்­டும் மே 9ஆம் தேதியை வெற்­றித் திரு­நா­ளாக ரஷ்யா கொண்­டாடி வரு­கிறது.

எனவே, அதி­கா­ரத்­துவ போர் பிர­க­ட­னத்­துக்கு இந்த நாளை அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் தேர்வுசெய்த தாக செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

உக்­ரேன் மீது தமது நாடு நடத்தி வரும் தாக்­கு­தலை போர் என்றோ படை­யெ­டுப்பு என்றோ அதி­பர் புட்­டின் இது­வரை குறிப்­பி­ட­வில்லை. அதற்­குப் பதி­லாக உக்­ரேன் மீதான 'சிறப்பு ராணுவ நட­வ­டிக்கை' என்று அவர் தொடர்ந்து கூறி வரு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!