‘பொதுமக்கள் பத்திரமாக வெளியேற சண்டை நிறுத்தம் அவசியம்’

ரஷ்­யப் படை­யி­ன­ரால் சுற்றி வளைக்­கப்­பட்­டுள்ள உக்­ரே­னின் மரி­ய­போல் நக­ரி­லி­ருந்து பொது­மக்­கள் பத்­தி­ர­மாக வெளி­யேற சண்டை நிறுத்­தம் அவ­சி­யம் என்று உக்­ரே­னிய அதி­பர் வொலோ­டி­மி­யர் ஸெலென்ஸ்கி தெரி­வித்­துள்­ளார்.

பொது­மக்­கள் பலர் இருந்­தும் மரி­ய­போல் நகரை ரஷ்­யப் படை­கள் தீவி­ர­மா­கத் தாக்­கு­வ­தாக உக்­ரேன் குற்­றம் சுமத்­து­கிறது.

அந்­ந­க­ரில் பெண்கள், சிறார் உட்­பட பலர் வெளி­யேற முடி­யா­மல் உயி­ருக்கு அஞ்சி சிக்­கித் தவிப்­ப­தாக அதி­பர் ஸெலென்ஸ்கி தெரி­வித்­தார். பல வாரங்­க­ளா­கத் தாக்­கு­தல் நடத்­தி­யும் உக்­ரே­னி­யத் தலை­ந­கர் கியவ்வை ரஷ்­யா­வால் கைப்­பற்ற முடி­யா­மல் போக, உக்­ரே­னின் கிழக்கு மற்­றும் தெற்­குப் பகு­தி­க­ளைத் தமது கட்­டுக்­குள் கொண்­டு­வர ரஷ்யா தீவி­ர­மா­கச் செயல்­பட்டு வரு­கிறது.

இது­வரை போர் கார­ண­மாக ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் மாண்­டு­விட்­ட­னர். அத்­து­டன், உக்­ரே­னுக்­குச் சொந்­த­மான பல நக­ரங்­கள் அடை­யா­ளம் தெரி­யாத அள­வுக்­குத் தகர்க்­கப்­பட்­டுள்­ளன.

இதற்கிடையே, தனது பீரங்கிப் படை இரவு முழுவதும் தாக்குதல் நடத்தி பல உக்ரேனிய ராணுவத் தளங்களையும் அரண்களையும் அழித்துவிட்டதாகவும் 600 உக்ரேனிய ராணுவ வீரர்கள் மடிந்துவிட்டதாகவும் ரஷ்யா நேற்று செய்தி வெளியிட்டது.

இந்­நி­லை­யில், மரி­ய­போல் நக­ரில் உள்ள அஸோவ்ஸ்­டல் எஃகு ஆலைக்­குள் சிக்­கி­யுள்ள உக்­ரே­னிய ராணுவ வீரர்­களை கூண்­டோடு அழிக்க ரஷ்யா முற்­பட்­டுள்­ள­தாக உக்­ரே­னிய ராணு­வம் கூறு­கிறது.

ஆலைக்­குள் நிலைமை மிக­வும் பயங்­க­ர­மாக இருப்­ப­தாக அதி­லி­ருந்து ஒரு­வ­ழி­யாக வெளி­யேறிய சிலர் ஊட­கத்­தி­டம் தெரி­வித்­த­னர்.

பல நாள்­க­ளாக இரு­ளில் மூழ்கி, சுயா­சிக்க போதிய காற்று இல்­லா­மல் பலர் வாடு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது. ரஷ்­யப் போர் விமா­னங்­க­ளின் சத்­தம் ஆலைக்­குள் இருக்­கும் சிறா­ரைக் குலைநடுங்க வைப்­ப­தாக அங்­கி­ருந்து தப்­பிய பெண் ஒரு­வர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!