பிலிப்பீன்ஸ் அதிபர் தேர்தலில் முன்னாள் சர்வாதிகாரியின் மகன் மாபெரும் வெற்றி

பிலிப்­பீன்ஸ் மக்­கள் நேற்று புதிய, ஆனால் பரிட்­ச­ய­மான அர­சி­யல் சூழ­லை ஏற்படுத்தியுள்ளனர். நேற்று முன்­தி­னம் நடந்து முடிந்த அதி­பர் தேர்­த­லில் திரு ஃபெர்டி­னாண்ட் மார்­கோஸ் ஜூனி­யர் அபார வெற்றி பெற்­றார். ஒரு காலத்­தில் கற்­பனை செய்து பார்க்க முடி­யாத அர­சி­யல் திருப்­பத்­திற்கு இவ­ரு­டைய வெற்றி வழி­வ­குத்­து உள்­ளது.

தம்மை எதிர்த்­துப் போட்­டி­யிட்ட திரு­மதி லெனி ரோப்­ரி­டோவை பெரும் வாக்கு வித்­தி­யா­சத்­தில் திரு மார்­கோஸ் ஜூனி­யர் தோற்கடித்துள்ளார் என அதி­கா­ர­பூர்­வ­மற்ற தக­வல்­கள் குறிப்­பிட்­டன.

சர்­வா­தி­கார ஆட்சி செய்­த­வரின் மக­னான இவர், அதி­பர் தேர்­த­லில் வென்­றி­ருப்­பது நாட்டு மக்­கள் பல­ரை­யும் ஆச்­ச­ரி­யப்­பட வைத்­துள்­ளது.

1986ஆம் ஆண்­டில் பிலிப்­பீன்­சில் 'மக்­கள் சக்தி' எழுச்சி கண்­ட­போது, திரு மார்­கோஸ் ஜூனி­ய­ரு­டைய தந்­தை­யின் 20 ஆண்­டு­கால சர்வாதிகார ஆட்சி முடி­வுக்கு வந்­தது. அப்­போது திரு மார்­கோஸ் ஜூனி­யர் தம்­மு­டைய குடும்­பத்­தாருடன் ஹவா­யி தீவுக்கு நாடு­கடத்­தப்­பட்­டார்.

1991ல் பிலிப்­பீன்­சுக்­குத் திரும்­பிய இவர், காங்­கி­ர­சி­லும் செனட் சபை­யி­லும் இடம்­பெற்­றி­ருந்­தார்.

அதி­பர் தேர்­த­லில் தகு­தி­பெற்ற 98 விழுக்­காடு வாக்­கு­கள் எண்­ணப்­பட்­டு­விட்ட நிலை­யில், திரு மார்­கோஸ் ஜூனி­ய­ருக்கு கிட்­டத்­தட்ட 31 மில்­லி­யன் வாக்­கு­கள் கிடைத்­தி­ருப்­ப­தாக அதி­கா­ர­பூர்­வ­மற்ற வாக்கு எண்­ணிக்­கை­ தகவலில் தெரி­ய­வந்­துள்­ளது. இவர் பெற்றுள்ள வாக்­கு­களில் திரு­மதி ரோப்ரிடோ­வுக்­குப் பாதி­ய­ளவே கிடைத்­துள்­ளன.

இந்த மாத இறு­தி­வாக்­கில் அதி­பர் தேர்­த­லின் அதி­கா­ர­பூர்வ முடி­வு­கள் வெளி­யி­டப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பிலிப்­பீன்ஸ் தேசி­யக் கொடிக்­குப் பக்­கத்­தில் நின்­ற­படி ஃபேஸ்புக் வழி­யாக அறிக்கை ஒன்றை வெளி­யிட்ட திரு மார்­கோஸ் ஜூனி­யர், 64, "தொண்­டர்­கள், அர­சி­யல் தலைவர்­கள், பொது­மக்­கள் எனப் பல்லாயி­ரக்­க­ணக்­கான நீங்­கள் எங்களுக்கு வாக்­க­ளித்து இருக்­கி­றீர்­கள். ஒரு­மைப்­பாட்­டின்­மீது நாங்­கள் கொண்­டி­ருக்­கும் அளப்­பரிய நம்­பிக்­கையே அதற்­குக் கார­ணம் என நாங்­கள் நம்­பு­கி­றோம்," என்று கூறி­னார்.

மாண­வர்­கள் ஆர்ப்­பாட்­டம்

இந்­நி­லை­யில், திரு மார்­கோஸ் ஜூனி­ய­ரின் வெற்­றியை எதிர்த்து கிட்­டத்­தட்ட 400 மாண­வர்­கள் நேற்று தேர்­தல் ஆணை­யத்­திற்கு வெளியே ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். தேர்­தல் முடி­வில் முறை­கேடு நிகழ்ந்­தி­ருப்­ப­தாக அவர்­கள் முழக்­கமிட்டனர்.

திரு மார்­கோஸ் ஜூனி­ய­ரின் வெற்றி, பிலிப்­பீன்ஸ் அதி­பர் ரோட்­ரிகோ டுட்­டர்­டே­வின் மக­ளான திரு­மதி சாரா டுட்­டர்டே கார்ப்­பியோ துணை அதி­ப­ரா­வ­தற்கு வழி­வகுத்துள்­ளது. தம்மை எதிர்த்து போட்­டி­யிட்­ட­வ­ரை­விட மூன்று மடங்­கிற்­கும் அதி­க­மான வாக்­கு­களை அவர் பெற்­றார்.

அதி­பர் தேர்­த­லில் திரு மார்­கோஸ் ஜூனி­யர் அதிக வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற்­றி­ருப்­பதை தேர்­தல் முடி­வு­கள் காட்­டி­னா­லும், உண்­மை­யைக் கண்­ட­றிய அடுத்த தேர்­தல் வரை போரா­டு­மாறு தம்­மு­டைய ஆத­ர­வா­ளர்­களை திரு­மதி ரோப்­ரிடோ கேட்­டுக்­கொண்­டார்.

கூடுதல் செய்தி பக்கம் 8ல்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!