சிங்கப்பூர் குடும்பத்துக்கு $100 பற்றுச்சீட்டு; டிசம்பர்வரை செல்லும்

சிங்­கப்­பூர் குடி­மக்­கள் குடும்­பங்­கள் அனைத்­தும் இப்­போது $100 மதிப்­புள்ள சமூக மேம்­பாட்டு மன்­றப் பற்­றுச்­சீட்­டைப் பெறலாம்.

பிர­தான குடி­யி­ருப்பு பகு­தி­களில் செயல்­படும் 16,000க்கும் மேற்­பட்ட கடை­க­ளி­லும் அங்­கா­டிக் கடை­களி­லும் அந்­தப் பற்­றுச்­சீட்­டு­களைச் சிங்­கப்­பூ­ரர்­கள் பயன்­ப­டுத்தலாம்.

இதோடு, 2023 தொடக்­கத்­தில் மேலும் $200 பற்­றுச்­சீட்­டையும் 2024ல் மற்­றொரு $200 பற்­றுச்­சீட்டையும் சிங்­கப்­பூரர்கள் பெற­லாம். அவற்றைப் பெரிய பேரங்­கா­டி­களில் பயன்­படுத்­த­லாம். இப்­போது கொடுக்­கப்­படும் பற்­றுச்­சீட்­டு­கள் 1.22 மில்­லி­யன் குடும்­பங்­க­ளுக்கு நன்மை பயக்­கும். அவற்றை நேற்று முதல் குடும்­பத்­தி­னர் மின்­னி­லக்க முறையில் பெற்றுக் கொள்­ள­லாம்.

டிசம்­பர் 31ஆம் தேதி வரை அவற்­றைப் பயன்­ப­டுத்த முடி­யும்.

நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங், தெம்­ப­னிஸ் வெஸ்ட் சமூக மன்றத்­தில் நேற்று புதிய பற்­றுச்­சீட்டு விநியோ­கத்­தைத் தொடங்கி வைத்­தார். அந்த நிகழ்ச்­சி­யில் ஐந்து மேயர்­கள் கலந்­துகொண்­ட­னர்.

இதற்கு முன்­ன­தாக சென்ற ஆண்டு டிசம்­பர் 13ஆம் தேதி 2021ஆம் ஆண்­டுக்­கான நகர மேம் பாட்டு மன்ற பற்­றுச்­சீட்­டு­கள் விநி­யோ­கிக்­கப்­பட்­டன.

கொவிட்-19 கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட குடியிருப்பு வட்­டார கடைக்­கா­ரர்­க­ளுக்­கும் உண­வங்­காடி கடைக்­கா­ரர்­களுக்கும் ஆத­ரவு அளிக்கவும் மக்­க­ளின் அன்­றாட செலவில் ஒரு பகு­தியை ஈடு­கட்ட வும் பற்­றுச்­சீட்டு விநியோகத் திட்டம் அமலானது.

நேற்­றைய நிகழ்ச்­சி­யில் பேசிய திரு வோங், "இந்த ஆண்டு பற்­றுச்­சீட்­டுத் திட்­டம் பிற்­ப­கு­தி­யில்­தான் தொடங்க இருந்­தது. ஆனால் விலை­வாசி உயர்­வதைக் கருத்­தில்­கொண்டு முன்­ன­தா­கவே பற்­றுச்­சீட்­டு­கள் இப்­போது விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றன," என்றார்.

உக்­ரேன் போர் கார­ண­மா­க­வும் கொவிட்-19 தொற்று கார­ண­மாக ஏற்­பட்ட பொருள், சேவை விநி யோகக் கோளா­று­கள் கார­ண­மாக வும் உல­கம் முழு­வ­துமே விலைவாசி கூடி வரு­வதை அமைச்­சர் சுட்டினார்.

விலை­வாசி கூடும் நேரத்­தில் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு இந்­தப் பற்­றுச்­சீட்­டு­கள் ஓர­ள­வுக்­குத்தான் ஆதரவு அளிக்­கும் என்­றா­லும் அர­சாங்­கம் இதர பல வகை­களில் மக்­க­ளுக்கு உதவி வரு­வதைத் திரு வோங் எடுத்துக் கூறினார்.

சென்ற மாதம் சேவை, பரா­மரிப்புக் கட்­ட­ணம் மற்­றும் ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்டு, பய­னீட்­டுக் கட்­டணத் தள்­ளு­ப­டி­கள் கொடுக்­கப்­பட்­டன.

அடுத்­த­தாக ஜூலை, அக்­டோ­பர், அடுத்த ஆண்டு ஜன­வரி மாதங்­களில் தள்­ளு­ப­டி­கள் கிடைக்­கும்.

கணக்­கிட்­டுப் பார்க்­கை­யில் வீவக நாலறை வீடு­களில் வசிப்­போர் நான்கு மாதம் பய­னீட்டுக் கட்­டணம் அள­வுக்குத் தள்­ளு­ப­டி­களைப் பெறு­வார்­கள்.

2022 நிதி ஆண்டு முழு­வ­தும் அவர்­க­ளுக்கு இரண்­டரை மாத சேவை, பரா­ம­ரிப்புக் கட்­ட­ணத் தள்ளு­படி கிடைக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!