இல்லப் பணிப்பெண்களின் நல்வாழ்வுக்கு பல ஏற்பாடுகள்

சிங்­கப்­பூ­ரில் பணி­யாற்­றும் வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­களுக்கு கட்­டாய ஓய்வு நாள் ஏற்­பாடு இந்த ஆண்டு முடி­வில் நடப்­புக்கு வரு­கிறது.

அவர்­க­ளுக்­காக வாரம் ஏழு நாள்­களும் 24 மணி நேர­மும் நேரடி தொலை­பேசி சேவை இயங்கு­கிறது. நேர்­கா­ணல்­களும் இடம்­பெ­றும்.

இவை எல்­லாம் சிங்­கப்­பூ­ரில் பணி­யாற்­றும் வெளி­நாட்டு இல்லப் பணிப்­பெண்­க­ளின் நல்­வாழ்­வுக்கு உத­வும் நட­வ­டிக்­கை­களில் உள்ளடங்­கும் என்று மனி­த­வள துணை அமைச்­சர் கான் சியாவ் ஹுவாங் நேற்று தெரி­வித்­தார்.

என்­டி­யுசி மே தின இல்­லப் பணிப்­பெண்­கள் கொண்­டாட்­டம் 2022 நிகழ்ச்­சி­யில் அவர் உரை­யாற்­றி­னார். அந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு மெய்­நி­கர் ரீதி­யில் நேற்று நடந்­தது.

முத­லா­ளி­கள் இல்­லப் பணிப்­பெண்­க­ளுக்கு மாதம் ஒரு நாள் கட்­டா­யம் ஓய்வு வழங்க வேண்டி இருக்­கும் என்று மனி­த­வள அமைச்சு சென்ற ஆண்டு ஜூலை­யில் அறி­வித்­தது. அந்­தப் புதிய விதி 2022 முடி­வில் நடப்­புக்கு வருமென்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

"அந்த விடு­மு­றை­யைப் பயன்­படுத்தி பணிப்­பெண்­கள் வீட்டு வேலைக்கு அப்­பால் ஓர் ஆத­ரவு கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்­திக் கொள்ள முடி­யும்.

"ஓய்­வில்­லா­மல் உழைக்­கும் அவர்­கள் ஒரு நாள் ஓய்வு எடுத்­துக்­கொண்டு புது தெம்­பை­யும் பெற முடி­யும்," என்று அமைச்­சர் திரு­வாட்டி கான் தெரி­வித்­தார்.

இல்­லப் பணிப்­பெண்­கள் தங்­கள் ஓய்வு நாள்­களைப் பய­னுள்ள முறை­யில் செல­விட தோதாக மேலும் பல செயல்­திட்­டங்­க­ளை­யும் நட­வ­டிக்­கை­க­ளை­யும் சம்­பந்­தப்­பட்ட அமைப்­பு­க­ளு­டன் சேர்ந்து அமைச்சு நடை­மு­றைப்­ப­டுத்­தும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­கள் மையம் என்ற அமைப்­பு­டன் சேர்ந்து நேர்­கா­ணல் ஏற்பாடு ஒன்­றை­யும் மனி­த­வள அமைச்சு நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கிறது.

அதன்­படி, புதி­தாக சிங்­கப்­பூருக்கு வரும் இல்­லப் பணிப்­பெண்­கள் வேலை­யில் சேர்ந்த பிறகு முதல் ஒரு சில மாதங்­களில் நேர்­கா­ணல்­க­ளுக்கு ஈடு­படுத்­தப்­ப­டு­வார்­கள்.

இந்த அமைப்­பின் தூதர்­கள் பணிப்­பெண்­க­ளுக்கு உதவி வரு­கி­றார்­கள்.

இந்த அமைப்பு வாரம் ஏழு நாள்­களும் 24 மணி நேர­மும் நேரடி உதவி தொலை­பே­சியை நிர்­வ­கித்து வரு­கிறது.

பணிப்­பெண்­கள் தங்­க­ளுக்குத் தெரிந்த மொழி­யில் அந்­தத் தொலை­பேசி மூலம் தொடர்­பு­கொண்டு உதவி பெற­லாம் என்று திரு­வாட்டி கான் தெரி­வித்­தார்.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக பல சவால்­கள் ஏற்­பட்­டாலும் கூட முத­லா­ளி­க­ளின் குடும்­பங்­களுக்கு உறு­து­ணை­யாக இருந்து தொடர்ந்து ஆத­ரவு அளித்து இல்­லப் பணிப்­பெண்­கள் உதவி இருக்­கி­றார்­கள் என்று தெரிவித்த அமைச்­சர், அதற்­காக பணிப்­பெண்­க­ளுக்கு நன்றி கூறினார்.

பரஸ்­பர மரி­யாதை தரு­கின்ற, வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­க­ளைப் பரா­ம­ரிக்­கின்ற ஒரு கலா­சா­ரத்தை எல்­லா­ரும் சேர்ந்து பலப்­ப­டுத்­து­வோம் என்று அமைச்­சர் அறை­கூ­வல் விடுத்­தார்.

நேற்­றைய கொண்­டாட்ட நிகழ்ச்­சி­யில் இல்­லப் பணிப்­பெண்­கள் பல விளை­யாட்­டு­களில் ஈடு­பட்டு மகிழ்ந்­த­னர். பலர் மேடை நிகழ்ச்­சி­களை நடத்­தி­னர்.

பிலிப்­பீன்ஸ் நாட்­டைச் சேர்ந்த திரு­வாட்டி கிரே­சில் பெத் திம்­திம், 38, என்­ப­வர் இங்கு இல்­லப் பணிப்­பெண்­ணாக 10 ஆண்டு காலம் வேலை பார்க்­கி­றார்.

தன்­னு­டைய முத­லா­ளி­யின் புதல்­வி­யான 18 வயது மாணவி ஜேனி பே கிட்­டார் வாசிக்க, அந்தப் பணிப்­பெண் அரு­மை­யான ஒரு பாட­லைப் பாடி எல்­லா­ரை­யும் மகிழ்­வித்­தார்.

கிட்­டாரை எப்­படி வாசிப்­பது என்­பதைத் தன்­னு­டைய முத­லாளி­யின் புதல்­விக்கு ஏற்­கெ­னவே அந்தப் பணிப்பெண் கற்றுக் கொடுத்து இருந்­தார்.

இத­னி­டையே, இல்­லப் பணிப்­பெண்­களை நினை­வு­கூர்ந்து பாராட்டி மகிழ்­விப்­ப­தற்­காக ஒரு நாளை ஒதுக்­கு­வது மிக முக்­கி­ய­மான ஒன்று என்று தான் கருது­வ­தாக மாணவி குமாரி ஜேனி பே குறிப்­பிட்­டார்.

கட்டாய விடுப்பு, 24/7 நேரடி உதவி தொலைபேசி, நேர்காணல்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!