அமெரிக்காவில் 19 பள்ளிச் சிறார்களைச் சுட்டுக் கொன்ற 18 வயது இளைஞன்

நியூயார்க்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 சிறுவர்களும் இரு ஆசிரியர்களும் பலியாயினர். பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞனும் டெக்சஸ் காவல் துறையினரால் கொல்லப்பட்டான்.


அமெரிக்காவின் டெக்சஸ் அருகே யுவால்டே கவுண்டி என்ற நகரில் சாண்டி ஹூக் என்ற பள்ளியில் இந்தச் சம்பவம் நேற்று (மே 24) நிகழ்ந்துள்ளது. இங்கு புகுந்த மர்ம நபர் கண்ணில்பட்டவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டான். இறந்த குழந்தைகள் அனைவரும் 7 முதல் 10 வயதுடைய சிறார்கள் என அறியப்படுகிறது.

Remote video URL


மேலும், இரண்டு காவல்துறை அதிகாரிகளும் சிறிய அளவில் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணங்கள் எதுவும் இன்னும் தெரியவில்லை.

கொலையாளியின் பெயர் செல்வடோர் ராமோஸ் என்றும் அவன் அவனது பாட்டியையும் துப்பாக்கியால் சுட்டுள்ளான் என்றும் அதிர்‌ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியுள்ளார் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு தொடர்பாகக் கருத்துரைத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தக் குழந்தைகளுக்காக அமெரிக்கர்கள் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
"ஏதுமறியாத அழகிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், ஒரு போர்க்களத்தைப் போல, தன் நண்பர்கள் கொல்லப்பட்ட காட்சியையும் குழந்தைகள் நேரில் பார்த்துள்ளனர். இனி காலம் முழுக்க இதே நினைவுகளுடன் இந்தக் குழந்தைகள் வாழ வேண்டியிருக்கும்" என்று குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!