அணுஆயுதப் பயிற்சி நடத்தும் 1,000 ரஷ்யப் படை வீரர்கள்

ரஷ்யா, மாஸ்­கோ­வுக்கு வட­கி­ழக்கே இருக்­கும் இவா­னாவோ என்ற மாநிலத்­தில் அணு ஆயு­தப் பயிற்சி­களை நடத்­து­வ­தாக அந்த நாட்­டுத் தரப்­பு­கள் தெரி­வித்­துள்­ளன.

ரஷ்ய மண்­ணில் அணுஆயு­தப்­படை­க­ளின் பயிற்சி நடப்­ப­தாக அந்த நாட்­டின் தற்­காப்பு அமைச்சை மேற்­கோள்காட்டி இன்­டர்­ஃபேக்ஸ் செய்தி நிறு­வ­னம் குறிப்­பிட்­டது.

அந்­தப் பயிற்­சி­யில் சுமார் 1,000 படை வீரர்­கள் ஈடு­பட்டு இருப்­பதாக அந்த நிறு­வ­னம் கூறி­யது.

அதே­வே­ளை­யில், அந்­தப் பயிற்சி, 'யார்ஸ்' ரக கண்­டம்­ விட்டு கண்­டம் பாயும் ஆணுஆயுத ஏவு­கணைப் பாய்ச்­சி­கள் உள்­ளிட்ட 100க்கும் மேற்­பட்ட வாக­னங்­களை ஈடு­ப­டுத்தி தீவி­ர­மாக நடத்­தப்­படு­வதாக ராய்ட்­டர்ஸ் தெரி­வித்­தது.

உக்­ரே­னுக்கு 700 மில்­லி­யன் டாலர் மதிப்­புள்ள பாது­காப்பு உதவி­களை அங்­கீ­ரித்து இருப்­ப­தாக அமெ­ரிக்கா அறி­வித்­துள்ள நிலை­யில் ரஷ்ய அணுஆயு­தப் பயிற்சி செய்தி வெளி­யாகி உள்­ளது.

அமெ­ரிக்கா அங்­கீ­க­ரித்­துள்ள உத­வி­களில் ஹெலி­காப்­டர்­கள், கவ­ச­வா­கன எதிர்ப்பு ஆயு­தங்­கள், நடுத்­தர தொலைவு பாயும் பீரங்கி வாகன ராக்­கெட்­டு­கள் முதலானவை உள்­ள­டங்­கும்.

ரஷ்­யா­வின் படை­ப­லத்­துக்கு ஈடாக தங்­க­ளுக்கு ஆயு­தங்­களைக் கொடுக்­கும்­படி மேற்கு நாடு­களை உக்­ரே­னிய அதி­பர் ஸெலென்ஸ்­கி­யும் வெளி­யு­றவு அமைச்­சர் குலே­பா­வும் நச்சரித்து வந்­த­னர்.

அமெ­ரிக்கா அளிக்­கும் உதவி பற்றி கருத்து கூறிய அதி­பர் ஜோ பைடன், நடுத்­தர தொலைவு பாயும் எறி­ப­டை­கள், போர்க்­க­ளத்­தில் உக்­ரேன் தன் எதி­ரி­யின் இலக்­கு­க­ளைத் துல்­லி­யமாகத் தாக்கி அழிக்க உத­வும் என்று தெரி­வித்­தார்.

ஆனால், அந்த ஆயு­தங்­கள் உக்­ரேன் மண்­ணில் மட்­டும்­தான் பயன்­ப­டுத்­தப்­படும். ரஷ்ய மண்ணில் ரஷ்ய இலக்­கு­க­ளைத் தாக்க அவை பயன்­ப­டுத்­தப்­படாது என்றார் அதி­பர்.

இவ்­வே­ளை­யில், உக்­ரே­னி­ன் கிழக்­கில் உள்ள சியவிரோ­டோ­னெட்ஸ் என்ற நக­ரில் கடும் தாக்­கு­தல் நடப்­ப­தா­க­வும் முக்­கி­ய­மாக அந்த நக­ரின் பெரும் பகு­தியை ரஷ்­யப் படை­கள் பிடித்து­விட்­ட­தா­க­வும் லுகான்ஸ்க் வட்­டார ஆளு­நர் ஹாய்­டாய் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!