குடும்பங்களுக்கான ஆதரவு தொடர்ந்து வலுப்படுத்தப்படும்

வலு­வான பிணைப்­பைக் கொண்ட குடும்­பங்­கள் சமு­தா­யத்­தின் ஆணி­வேர் என்­றும் குடும்­பங்­க­ளுக்கு ஏற்ற நாடாக சிங்­கப்­பூர் திகழ அர­சாங்­கம் தொடர்ந்து நட­வ­டிக்கைகளை மேற்­கொள்­ளும் என்­றும் பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார்.

சிங்­கப்­பூ­ரர்­கள் குடும்ப வாழ்க்­கை­யைத் தொடங்க உத­வும் வகை­யில் திரு­மண பந்­தத்­தில் சேர்­ப­வர்­க­ளுக்­கும் பெற்­றோ­ருக்­கும் சலு­கை­கள் வழங்­கப்­படும் என்­றார் அவர். அது­மட்­டு­மல்­லாது, சொந்த வீடு வாங்க

பெரும்பாலான மக்களுக்கு உத­வும் வகை­யில் கொள்­கை­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று திரு லீ தெரி­வித்­தார்.

"சிங்­கப்­பூ­ரில் உள்ள சிறா­ருக்கு வாழ்­வில் நல்­ல­தொரு தொடக்­கத்தை ஏற்­ப­டுத்­தித் தரும் வகை­யில் பாலர் கல்­வியை நாங்­கள் பெரு­ம­ள­வில் மேம்­ப­டுத்­தி­உள்­ளோம். மூத்­தோ­ருக்­கான ஆத­ர­வை­யும் நாங்­கள் தொடர்ந்து விரி­வு­ப­டுத்­து­வோம். இதன்­மூ­லம் அவர்­கள் சமு­தா­யத்­தில் நல்­ல­வி­த­மாக மூப்­ப­டை­ய­லாம்," என்­றார் பிர­த­மர் லீ.

தேசிய குடும்ப வாரத்தை முன்­னிட்டு நடத்­தப்­படும் இரண்டு நாள் கொண்­டாட்­டங்­க­ளின் தொடக்க விழா­வில் கலந்­து­கொண்டு பிர­த­மர் லீ உரை­யாற்றி­ னார்.

சன்­டெக் சிங்­கப்­பூர் மாநாடு மற்­றும் கண்­காட்சி மையத்­தில் நடை­பெ­றும் இந்­தக் கொண்­டாட்­டத்­துக்கு அனு­மதி இல­வ­சம். இந்த இரண்டு நாள் நிகழ்வு இன்­று­டன் நிறை­வ­டை­கிறது.

இதில் சிறு­வர்­க­ளுக்­கான நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

அது­மட்­டு­மல்­லாது, குடும்­பம் தொடர்­பான முக்­கிய தக­வல்­

க­ளைப் பெற்­றோர் பெற கூடா­ரங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த நிகழ்வை ஆண்­டு­

தோ­றும் நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. ஜூன் மாதப் பள்ளி விடு­மு­றை­யின்­போது தேசிய குடும்ப வாரக் கொண்டாட்டங்கள் நடத்­தப்­படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. குடும்­பப் பிணைப்பை வலுப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­கள் நிகழ்ச்சியில் இடம்பெறும்.

இவ்வாண்டு நடைபெறும் நிகழ்வுக்கு லாப நோக்­க­மற்ற அமைப்­பான வாழ்வுக்காகக் குடும்பங்கள் மன்றம் ஏற்­பாடு செய்­துள்­ளது. சிங்­கப்­பூர் குடும்­பங்­க­ளைக் கொண்­டா­டும் கருப்­பொ­ரு­ளு­டன் இவ்­வாண்­டின் நிகழ்வு நடத்­தப்­படுகிறது.

மீள்­தி­றன்­மிக்க தனி­ந­பர்­களை உரு­வாக்க குடும்­பங்­க­ளின் பங்கு மிக­வும் முக்­கி­யம் என்று திரு லீ தமது உரை­யில் தெரி­வித்­தார்.

"ஒருவரின் குணம், பண்­பு

­ந­லன்­கள், கொள்­கை­கள் ஆகி­ய­வற்றை அவரது குடும்­பம் வடி­வ­மைக்­கிறது. சமு­தா­யத்­தின் ஒரு பகுதி என்ற உணர்வை ஒருவருக்கு அவரது குடும்­பம் ஏற்­ப­டுத்­து­கிறது," என்று பிர­த­மர் லீ கூறி­னார்.

ஒரு­வ­ருக்கு உதவி தேவைப்­

ப­டும்­போ­தெல்­லாம் அவ­ரது குடும்­பம்­தான் முத­லில் ஆத­ர­வுக்­க­ரம் நீட்­டு­வ­தா­கப் பிர­த­மர் லீ தெரி­வித்­தார்.

வலு­வான குடும்­பப் பிணைப்­புள்ள சூழ­லில் வளர்­ப­வர்­கள் தங்­க­ளுக்­கென குடும்­பத்தை அமைத்­துக்­கொள்­ளும்­போது அதே

பண்­பு­ந­லன்­க­ளுக்கு முக்­கி­யத்­

து­வம் கொடுக்­கும் வாய்ப்பு

அதி­கம் என்­றார் அவர்.

இருப்­பி­னும், மற்ற குடும்­பங்­

க­ளை­விட ஒரு­சில குடும்­பங்­

க­ளுக்­குக் கூடு­தல் உதவி தேவைப்­ப­டு­வ­தாக திரு லீ கூறி­னார். இத்­த­கைய குடும்­பங்­

க­ளுக்கு உதவி வழங்க

திரு­ம­ணங்­கள், குடும்ப உற­வு­களை வலுப்­ப­டுத்­தும் கூட்­டணி இலக்கு கொண்­டுள்­ளது.

உதா­ரணத்­துக்கு ஒற்­றை­ப் பெற்­றோர், சிறை­யில் அடைக்­கப்­பட்ட குடும்ப உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட குடும்­பங்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!